கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
நவ. 08 16:46

பிரதமர், அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யலாம் - ஆனால் சபாநாயகரை நாடாளுமன்றம் கூடும் முன் மாற்ற முடியுமா?

(முல்லைத்தீவு, ஈழம்) மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் விடயத்தில் இக்கட்டான நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் இணைந்து மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என்றும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் கொள்கையளவில் இணங்கியுள்ளனர். ஜே.வி.பி இதனை வெளிப்படையாகவும் அதிகாரபூர்வமாகவும் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆனால், ஜனநாயகத்திற்கு விரோதமாக அரசியல் யாப்பை மீறும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்க முடியாதென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
நவ. 06 14:31

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் ஜே.வி.பியோடு சம்பந்தன் ஏற்படுத்திய இணக்கம் என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையில் மாறி மாறி ஆட்சியமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்கும் போட்டியில் தமிழ் முஸ்லிம் கட்சிகளையும் சிறிய கட்சிகளையும் பேரம்பேசி வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் தெரிவித்துள்ளன. ஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை இலங்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பான தலையீட்டினை மேற்கொள்வது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இருகட்சிகளின் தலைவர்களும் கூறியுள்ளனர்.
நவ. 04 00:48

மஹிந்த பிரதமரானமை அராஜகம் என்றால், தமிழர்களின் 70 ஆண்டுகால போராட்டத்தை அழித்தமை எந்த வகையான ஜனநாயகம்?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இராணுவ ரீதியான புரட்சிக்கு அல்லது வன்முறைகளாக மாறிவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவதானமாகவே இருக்கின்றன. பிரதமர் பதவி மாற்றம் தொடர்பான சர்ச்சைக்கு இலங்கையின் அரசியல் யாப்பு அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றன. அதுவும் அமெரிக்கா இரண்டு தடவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் யாப்பை கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் கூறியுள்ளார்.
நவ. 01 23:13

மஹிந்தவுக்கு சம்பந்தன் ஆதரவு வழங்க வேண்டும், சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள்- உதவி செய்யவும் தயார் என்கிறார்

(மட்டக்களப்பு, ஈழம்) மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக இந்தியாவுடன் பேசியே முடிவு எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஆளும் இந்திய பா.ஜ.க. அரசின் மூத்த உறுப்பினர் சட்டத்தரணி சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை தனது ரூவிற்றர் தளத்தில் அவர் இவ்வாறு கோரியுள்ளார். சம்மந்தனும் மஹிந்தவும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஒக். 24 11:48

பெண் சமத்துவ நிலைநிறுத்தலில் மீரூ இயக்கமா விடுதலைப்புலிகளா தமிழர்களுக்கான முன்னுதாரணம்?

பிரபலங்களிடையே பாலியல் கலாசாரத்தில் சமத்துவம் என்பதையே சமுதாயத்திற்கான பாலியல் சமத்துவமாகச் சித்தரிப்பதோடு தனது தேவையை முடித்துக்கொள்கிறது இன்றைய மீரூ இயக்கம். குடும்ப மட்டத்திலே பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களை இல்லாமற் செய்யவல்ல வேலைத்திட்டங்களை எந்தவித விளம்பரங்களும் இன்றி விடுதலைப் புலிகள் சாதித்திருந்தார்கள். இவற்றை ஈழத்தமிழர்களே இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் சின்மயியும் வரலட்சுமியும் தற்போது பேசியிருப்பவற்றை இந்தக் கோணத்தில் நோக்கவேண்டும் என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வன்னியில் இடம்பெற்ற இன அழிப்புப் போரில் உயிர்பிழைத்துத் தனது அனுபவங்களைக் கேள்விகளாக உலக மானுடத்திடம் எழுப்பிவருபவருமான 70 வயது நிரம்பிய ஈழத்தமிழ் எழுத்தாளர் பெண்மணி முனைவர் ந. மாலதி.