செய்தி: நிரல்
மே 17 22:37

சர்வதேச நீதிகோரி முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

(வவுனியா, ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளான நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை அனுஷ;டிக்கப்படவுள்ளது. நாளை பதினொராவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஒன்று கூடி நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கொள்வர். தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகோரி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென மக்கள் கடந்த நிகழ்வின் போது பிரகடணம் செய்திருந்தனர். வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தின் சுயாட்சிக்கும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்த ஆண்டு நிகழ்விலும் பொதுமக்கள் அவ்வாறு கோரிக்கை விடுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
மே 14 23:12

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் அமைச்சின் செயலாளர்களாக நியமனம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவ அதிகாரிகள் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சிவில் நடவடிக்கைகளில் தலையிடுவதாகப் பலவேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் பதவிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எதனையுமே எடுக்கவில்லை எனவும் மாநாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் கூடச் சிங்களவா்களாக நியமிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில் கொழும்பில் அமைசின் செயலாளர்களாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக பிரதான எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஆனால் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இராணுவத்தினர் சிவில் சேவைச் செயற்பாடுகளில் தலையிடுகின்றமை தொடர்பாகச் சிங்கள எதிர்க்கட்சிகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை
மே 12 23:16

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இழுபறி நிலை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் யூன் மாதம் நடத்த முடியாத அளவுக்குச் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்தி தனது கட்சியின் சார்பில் கூடுதல் ஆசனங்களைப் பெற முடியும் என்ற நோக்கில் ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச முற்படுவதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக தற்போதைக்கு எதுவுமே கூற முடியாதென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மே 09 23:05

இராணுவத்தினர் பொலிஸார் பிரதேச மக்கள் மீது தாக்குதல்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளான மே மாதம் 18 ஆம் திகதி பதினொரு ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் பொது மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாகர் கோயில், யாழ் சண்டிலிப்பாய், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் பொது மக்கள் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ். நாகர்கோயில் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ஆனால் பிரதேச மக்கள் ஒன்று திரண்டதயைடுத்து தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
மே 08 23:31

கட்டுப்பாடுகளோடு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கும்

(வவுனியா, ஈழம்) தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படாதென இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னி ஆராச்சி கூறியுள்ளார். ஆனால் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறிப்பிட்ட சில மணிரேநம் செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில், இன்னும் சில வாரங்கள் முடக்க நிலையைத் தொடார வேண்டுமென இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதனடிப்படையிலேயே திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டத்தைத் தளத்த்த முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.