செய்தி: நிரல்
ஜூன் 05 22:05

கொவிட் தொற்று- முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

(முல்லைத்தீவு, ஈழம் ) கொரொனா நோய்த் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த வெள்ளி இரவு ஒருவர் மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாணிக்கப்புரம் கிராமத்தைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்ததாக முல்லைத்தீவு மாவட்டச் சுகாதார அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். சிறுநீரகம் பாதிப்பு தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த குடும்பஸ்தர் கொரோனா நோய் தொற்றினால் மரணமடைந்ததாக மேற்படி அதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.
ஜூன் 04 22:07

கப்பல் நுழைய அனுமதியளித்தமை தொடர்பாக மனுத் தாக்கல்

(வவுனியா, ஈழம்) கொழும்பு துறைமுகக் கடல் பகுதியில் இருந்து சுமார் பத்து கிலோ மீற்றர் தொலைவில் தீக்கிரையாகிய கப்பலுக்கு இலங்கைக் கடல் எல்லைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) என்ற இந்தக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீக்கிரையாகி கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றமையினால் கொழும்புத் துறைமுகக் கடற்பரப்பான கொழும்பு முகத்துவாரத்தில் இருந்து பாணந்துறை வரையான சுமார் 50 கிலோ மீற்றர் தூரமுடைய கடற்பரப்பு மாசடைந்துள்ளதாகவும் இதனால் பொறுப்புள்ள அதிகாரிகள், மற்றும் அரசியல் தொடர்புள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஜூன் 03 22:25

மட்டக்களப்பு கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்திய பத்துப்பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய 10 பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, இலங்கை ஒற்றையாட்சி அரசின் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இவர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜூன் 02 21:47

பொதுமுடக்கம் 14 ஆம் திகதிவரை நீடிப்பு- அரசாங்கம் அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இருவாரங்களாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொது முடக்கம் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுபாடு என இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் இந்த பொதுமுடக்க அறிவிப்பு, 14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட வேண்டுமென சுகாதார சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப நீடிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.
ஜூன் 01 21:21

போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மீனவக் குடும்பங்களுக்கு மேலும் நெருக்கடி

(மன்னார், ஈழம் ) கொவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள இலங்கைத்தீவு முழுவதிலுமான பயணத்தடை காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 15500 தமிழ் பேசும் மீனவக் குடும்பங்கள் தமது நாளாந்த வருமானத்தை இழந்து அன்றாட உணவிற்கு அல்லலுரும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். வடமாகாண மீனவக் குடும்பங்கள்