செய்தி: நிரல்
ஜூன் 11 21:01

மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்ரிக் பொருட்கள்

(மன்னார், ஈழம் ) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் கரையோரக் தமிழ் கிராமங்களில் கடந்த புதன்கிழமை தொடக்கம் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் மற்றும் குருணை வடிவிலான வெண்ணிறப் பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவு கரையொதுங்கி வருவதாக உள்ளூர் மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். கொழும்பு கடலில் மூழ்கிவரும் எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV- X Press Pearl) எனும் சரக்கு கப்பலில் எடுத்து வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பிளாஸ்ரிக் மூலப் பொருட்களே மன்னார் மாவட்டத்தின் மீனவக் கிராமங்களில் கரையொதுங்குவதாக மீனவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.
ஜூன் 10 23:25

ரணில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்க ராஜபக்ச அரசாங்கம் திரைமறைவில் ஏற்பாடா?

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராவதற்குரிய ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் திரைமறைவில் மேற்கொண்டு வருவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ள நிலையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தொடர்ந்தும் செயற்படுவாரென்றும் செவ்வாய்க் கிழமை பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்வதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 09 22:58

கொவிட் நோய்தாக்கம் ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரிப்பு- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) கொவிட் 19 நோய்த் தொற்று இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கத் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்தமா குணரட்ன கொழும்பில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்ற ஏழாம் திகதியில் தொற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டதாகவும் இந்த ஆபத்து மேலும் தொடரக்கூடிய நிலமை இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜூன் 08 23:36

பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகிறார்- ஆனால் சஜித் அணி மறுப்பு

(வவுனியா, ஈழம்) எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கை அனுமதிக்க முடியாதென்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையப் போவதில்லையெனவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரோடு, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 15 பேர் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 06 20:46

சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா, முள்ளிக்குளம் பிரதேசக் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்க மறுப்பு

(மன்னார், ஈழம் ) தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் இலங்கை படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை மீள வழங்குவதற்காக மைத்திரி- ரணில் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையின் தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தினால் காலவரையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் காணிகளின் உரிமையாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா, முள்ளிக்குளம் ,ஆகிய பகுதிகளில் உள்ள தமது காணிகளே இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.