நிரல்
டிச. 01 22:01

யாழ் திண்ணைச் சந்திப்பு, அமெரிக்கப் பேச்சுக்கள் குறித்து பசில் நாளை மோடியுடன் கலந்துரையாடுவார்

(கிளிநொச்சி, ஈழம்) புதுடில்லிக்குச் சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய நிதியமைச்சர் சீத்தாராமனை இன்று புதன்கிழமை சந்தித்துள்ளார். இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ச இரு நாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து உரையாடினாரென, கொழும்பில் உள்ள நிதியமைச்சு இன்று புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடியை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ள அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய முதலீட்டாளர்கள், இந்தியாவின் பிரதான இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.
டிச. 01 20:29

வெடித்துச் சிதறும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவின் பல மாவட்டங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுகின்றமை தொடர்பாக ஆராய நாடாளுமன்ற உப குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. விசாரணை நடத்தி உரிய விளக்கத்தைப் பெற வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. உப குழுவைக் கூட்டுமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுகின்றமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் அமைச்சர் லசந்த அழகிய வண்ணவிடம் கேள்வி எழுப்பினார்.
நவ. 30 09:20

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்- வெளிப்படுத்தப்பட்ட கூட்டுரிமையும் மறைக்கப்பட்ட அடையாளங்களும்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த சனிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பொது மக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் துணிவோடு நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுத் தமது கூட்டுரிமையை வலியுத்தியிருக்கிறார்கள். ஆனால் சிவப்பு- மஞ்சள் நிறக் கொடி, கார்த்திகைப் பூ போன்ற மாவீரர் நாளுக்குரிய அடையாளங்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. சட்டப் பாதுகாப்போடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில பிரதிநிதிகள் இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்து முடித்திருக்கிறார்கள் என்பதே இதன் வெளிப்பாடு.
நவ. 29 21:55

அரசாங்கத்துக்குள் அதிகரிக்கும் கருத்து வேறுபாடுகள்

(வவுனியா, ஈழம்) பிரதமர் மகிந்த ராஜபச்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்திற்குள் மேலும் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுமென உள்ளகத் தகவல்கள் உறுதியாகக் தெரிவிக்கின்றன. பொதுஜனப் பெரமுனவுடன் ,இனிமேல் கூட்டு இல்லையென கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இனிமேலும் பொறுமை காக்க முடியாதென மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் கூறியிருந்த நிலையில் தயாசிறி ஜயசேகரவும் எவ்வாறு கூறியிருக்கிறார்.
நவ. 28 09:12

குறைகூற விரும்பாத அமெரிக்க- இந்திய அரசுகள்

(கிளிநொச்சி, ஈழம்) ஈழத்தமிழர் விவகாரத்தை அமெரிக்க இந்திய அரசுகள் எப்படி கையாளுகின்றன என்பது பற்றிய விளக்கங்கள், அதனை மாற்றியமைக்க வேண்டிய வழிமுறைகள், இப் பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரையும் ஒரே குரலில் பேசுவதற்கான புள்ளியில் வருவதாக இல்லை. சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆட்சி மாறினாலும் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு குரலில் பேசுகின்றனர். முன்னைய ஆட்சியாளர்கள் அணுகிய இராஜதந்திரத்தைப் புதிய ஆட்சியாளர்கள் தொடரும் பண்பு, ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் இருந்து வருகின்றது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
நவ. 27 19:59

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல்

(முல்லைத்தீவு) முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினர் திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் குறித்த ஊடகவியலாளர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளராகவும் லங்காசிறி ஊடகத்தின் பிராந்திய ஊடகவியலாளராகவும் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் கடமையாற்றுகின்றார். இன்று காலை பத்து மணிக்கு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நவ. 27 19:41

மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பெருந்திரளமான மக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் துணிவோடு நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டனர். முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து,ரவிகரன் நந்திக்கடலில் மலர் தூவி வணக்கம் செலுத்தினார். யாழ் வல்வெட்டித்துறை, தேருவில்- ரேவடி கடற்கரைப் பகுதியில் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சிவாஜிலிங்கம் வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டார்.
நவ. 26 20:19

முல்லைத்தீவு பொலிஸாரின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு

(முல்லைத்தீவு) இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும் இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூருவது மானிடப்பண்பு என்று குறிப்பிட்டு நேற்று வியாழக்கிழமை மற்றும் 17 ம் மற்றும் 23 ம் திகதிகளில் வழங்கிய மாவீரர் நிகழ்வு கொண்டாடுவதற்கு எதிரான கட்டளையை இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து கட்டளையாக்கியிருந்தார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா.
நவ. 25 09:04

அமெரிக்காவுக்கான புதிய தூதுவராக மகிந்த சமரசிங்க

(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பொதுஜனப் பெரமுன கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மகிந்த சமரசிங்க பதவியேற்கவுள்ளார். தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு இன்று வியாழக்கிழமை அனுப்பிவித்த மகிந்த சமரசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் சந்தித்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
நவ. 24 14:36

13 ஐ ஏற்க முடியாதென கோட்டாபய சிங்கள எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்திச் சில தமிழ்த்தேசியக் கட்சிகள் கோரி வரும் நிலையில், 13 ஐ ஏற்றுக்கொள்ளமாட்டோம் என தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தரப்பு தமக்கு அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் மூத்த அரசியல்வாதியுமான லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஒரு புறம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமெனச் சொல்லிக் கொண்டு மறுபுறத்தில் 13 ஐ ஏற்க முடியாதெனக் கூறுவதாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற விவாதத்தில் அவர் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.