நிரல்
மே 19 21:50

விருப்பங்கள், விமர்சனங்கள் அல்ல என்பதை உணர்த்தியுள்ள மாணிக்கவாசகத்தின் நூல்

ஈழத் தமிழர்களின் அரசியல் விவகாரத்தை இந்தியா 1987 இல் கையாண்ட முறையின் பெறுபேறுகள் பல எதிர்வினைகளுக்குக் காரண காரியமானது (Causality) என்ற தொனியை 'நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்' என்ற தனது செய்தி அனுபவப் பகிர்வு நூலில் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் எடுத்துரைக்கிறார். தமிழ்ப் பத்திரிகை உலகின் புதுமைப்பித்தன் (Innovator) மூத்த செய்தியாளர் மாணிக்கவாசகம், போர்க் காலத்தில் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி இருந்தவர். ஆனால் அவருடைய செய்தி எழுத்தின் மதியுகமும், விதியை மதியால் வெற்றி பெறக்கூடிய சாமர்த்தியமும் (Dexterity) அவரது உயிரைக் காத்தது எனலாம்.
மே 18 08:22

சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி முளளிவாய்க்கால் பிரதேசத்தில் ஒன்றுகூடிய மக்கள்

தமிழ் இன அழிப்புக்கு நீதிகோரி வடக்குக் கிழக்குத் தாயக மக்கள் ஒன்றுதிரண்டு முள்ளிவாய்க்காலில் வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை முற்பகல் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடிய மக்கள் தீபங்களை ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர். இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுகளை தாங்கிய ஊர்திப் பவனி கடந்த பண்ணிரெண்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மே 14 08:16

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம்

வடக்குக் கிழக்குத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் உள்ள காணிகளைக் கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் சில திணைக்களங்கள் அபகரித்து வரும் சூழலில், காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறார். அதுவும் தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முதல் நாள் இந்த உத்தரவை ரணில் பிறப்பித்திருக்கிறார். தமிழர் பிரதேசங்களில் பௌத்த மயமாக்கல் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவங்களில் அரசியல் யாப்புச் சட்டங்களுக்கு மாறாகவும், சட்டங்களுக்கு அமைவானது என்று காண்பிக்கப் போலியாகத் தயாரிக்கப்பட்ட காணி உறுதிகளுடனும் பௌத்த மயமாக்கல் வேகமடைந்துள்ளது.
மே 08 22:29

சிங்கள இடதுசாரிகளின் மௌனமும் பௌத்த மயமாக்கலும்

உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியை அமைத்து வருகின்றன. ஆனால் இடதுசாரி என்பதன் உண்மையான அடிப்படை மற்றும் இடதுசாரி என்பதற்குரிய சரியான உள் நோக்கங்களைத் தற்கால இடதுசாரிகள் குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சி அமைத்து வரும் இடதுசாரிகள். கொணட்டிருப்பதாகக் கூற முடியாது. இந்த இடதுசாரிகள் தத்தமது நாடுகளின் தேசியச் சிந்தனைகளை அடிப்படையாகவும், வலதுசாரிகள் போன்று வர்த்தக நலன்களை மையமாகவும் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் தென் அமெரிக்காவில் இடதுசாரிகளின் எழுச்சியை சாதாரண அரசியலாகக் கணிக்க முடியாது.
மே 01 06:51

தவறவிடப்பட்ட வாக்களிப்பும் திறக்கப்பட்டுள்ள ஆபத்தான கோணமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) மொத்தக் கடன்களில் ஆகக் குறைந்தது முப்பத்தைந்து பில்லியன் டொலர்களைத் திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில், இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பில் கூறியிருந்தார். இந்த நிலையில் மூன்று பில்லியன் கடன்களைப் பெற ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துடன் மார்ச் மாதம் கைச்சாத்திட்ட ஒப்பந்தம், வெள்ளிக்கிமை இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் மூலம் சிங்கள பௌத்த தேசியப் பொது பொறிமுறைக்கும்  (General Mechanism)  அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது போல் தெரிகிறது. 
ஏப். 22 23:52

இந்திய ரூபாவின் பயன்பாடு - அமெரிக்க டொலருக்கு எச்சரிக்கையா? இலங்கையின் காத்திருப்பு

(வவுனியா, ஈழம்) 1983 இல் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரையும் அமெரிக்காவுடன் இணக்கமில்லாத பரம வைரியாக இருந்த இந்தியா, ஈழப் போர் தொடங்கியதும், அமெரிக்காவுடன் சுமூகமான அரசியலைப் பேண ஆரம்பித்தது. அதற்கேற்ப இந்திய வெளியுறவுக் கொள்கையை அன்று இந்திராகாந்தி வகுத்திருந்தார். அதன் பின்னரான சூழலில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேணி வந்தனர். 2016 இல் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின்போது நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை மேலும் இறுக்கமாகப் பற்றிப் பிடித்தார். இருந்தாலும் ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில் ஜோ பைடன் நிர்வாகத்துடன் பனிப்போர் ஏற்பட்டுள்ளதால், ரசியாவுடனான இந்திய உறவு மேலும் நெருக்கமடைந்துள்ளது.
ஏப். 16 08:44

பதின்மூன்று நடைமுறைப்படுததப்படும் என்ற உறுதிமொழியை நம்பிய இராஜதந்திரிகள்

(வவுனியா, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றி பல வழிகளிலும் இந்தியா இலங்கைக்குக் கொடுக்கும் அழுத்தங்களை சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுச் செயற்படுத்துவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை (Acting Appearance) காண்பித்தாலும், அமெரிக்க - சீன அரசுகளுடன் நேரடியாக உறவைப் பேணி இலங்கையின் முக்கியத்துவத்தைப் பேண வேண்டும் என்ற அரசியல் நோக்கமே விஞ்சிக் காணப்படுகின்றன. இந்தியாவுடன் உறவைப் பேணி ஆனால் இந்தியாவைக் கடந்து ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாள வேண்டும் என்ற சிந்தனை சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைத்து சிங்கள ஆட்சியாளர்களிடமும் உண்டு என்பது வெளிப்படை.
ஏப். 13 09:53

செய்தித்துறையின் பாடநூல் மாணிக்கவாசகம்

(வவுனியா, ஈழம்) ஒரு செய்தியாளனுக்கு மிகுந்த பொறுமை வேண்டும். அவசரப் படவோ பதட்டப் படவோ கூடாது. பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்து, அதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்பும் வரை பல இடையூறுகள் ஏற்படும். அவற்றை எல்லாம் மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினையாக்கும் (Effort Will Pay Off) என்ற தெளிவோடு நடைமுறையில் அதுவும் போர்க் காலத்தில் செயற்படுத்திக் காண்பித்தவர்தான் மூத்த செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம். 
ஏப். 08 20:18

இலங்கைத் தேசியத்தைப் பாதுகாத்து பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் ரணில்

(யாழ்ப்பாணம், ஈழம்) 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களுக்கு ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது தமிழ்த்தேசிய அரசியல் தலைமை இல்லாமல் போனது போன்று, பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் பிளவுபட்டிருந்தன. ஆனால் தற்போது பௌத்த சமயத்தை மையமாகக் கொண்ட "இலங்கைத்தேசியம்" என்ற கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றிணையும் முயற்சிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2009 இறுதிப் போரின்போதும், இலங்கைத்தேசியம் என்பதைப் பாதுகாக்க கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்தனர். 2023 இல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மீண்டும் ஒன்றிணைந்து செயலாற்ற முனைகின்றனர். இதன் பின்னணியில் மகாநாயக்கத் தேரர்களின் ஆசீர்வாதம் உண்டென்பது இரகசியமல்ல.
ஏப். 04 09:26

சஜித் அணியில் இருந்து மூவர் ரணில் அரசாங்கத்துக்குச் செல்வர்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகக் கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த போதும், அதனை சஜித் பிரேமதாச மறுத்திருந்தார். ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியான தகவல்களின் பிரகாரம் மூன்று உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரியவருகின்றது. பொருளாதார நிபுணரும் கொழும்பு மாவாட்ட உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வா, மற்றும் ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகிய மூன்றுபேரும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன