செய்தி: நிரல்
டிச. 15 10:45

இலங்கை நீதித்துறை சுயாதீனமானது என்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மூலமாக சர்வதேசத்துக்கு ரணில் அறிவித்துள்ளார்

(அம்பாறை, ஈழம்) மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தால் இலங்கையில் ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தமைக்கு இலங்கை நீத்தித்துறையின் சுயாதீனமான செயற்பாடுதான் காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் கூறியுள்ளார். அத்துடன் மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், ஆகியவற்றின் செயற்பாடுகளும் பிரதான காரணம் எனவும் அவர் தனது ருவிட்டர் பதிவில் கூறியுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான இலங்கை அரச வர்த்தமானி அறிவிப்பு அரசியல் யாப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
டிச. 14 21:40

மைத்திரியால் வழங்கப்பட்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்கிறார் மகிந்த - ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தன்னிச்சையாக பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதுடன் மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டரசாங்கத்தில் பிரதமராக அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக கொழும்பு அரசியல் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
டிச. 14 17:31

மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடுகள் - கருத்து வெளியிட வேண்டாமென அறிவுறுத்தல்

(வவுனியா, ஈழம் ) இலங்கை உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மகிந்த ராஜபக்ச தரப்புக்குள் முரண்பாடுகள் மோதல்கள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தவிசாளராக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 54 உறுப்பினர்களும் தனித்துச் செயற்படுகின்றனர். இந்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் கட்சி சார்பாக வெளியிடப்பட்டு வருகின்றன.
டிச. 14 12:28

மடுமாதா தேவாலயம் புனித பிரதேசம் - ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கை - கத்தோலிக்க ஒன்றியம் எதிர்ப்பு

(மன்னார், ஈழம்) வரலாற்றுச் சிறப்பு மிக்க மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும், ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்க்கமான முடிவை மக்களுக்கும், மன்னார் மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிச. 13 21:43

இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தலைமை பொறுப்பு வரலாறு படித்தவருக்கு!

(சென்னை, தமிழ்நாடு) இந்திய ஒன்றியத்தின் முழு பொருளாதாரத்தையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்படும் நடுவண் வங்கியின் (Reserve Bank of India) ஆளுநர் உர்ஜித் பாடேல் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம், வரலாற்று பட்டம் பெற்று இந்திய ஆட்சியியல் பணியில் இருந்த சக்திகந்ததாஸ் என்பவரை அப்பொறுப்புக்கு நியமித்துள்ளது. உர்ஜித் பாடேல் பதவி விலகிய சர்ச்சையே இன்னும் ஓயாத வேளையில், பொருளாதாரத் துறையில் எவ்வித பின்புலமும் இல்லாத ஒருவர் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தவல்ல நடுவண் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மேலும் சர்சையினை உருவாக்கியுள்ளது.