கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
ஏப். 13 09:53

செய்தித்துறையின் பாடநூல் மாணிக்கவாசகம்

(வவுனியா, ஈழம்) ஒரு செய்தியாளனுக்கு மிகுந்த பொறுமை வேண்டும். அவசரப் படவோ பதட்டப் படவோ கூடாது. பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்து, அதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்பும் வரை பல இடையூறுகள் ஏற்படும். அவற்றை எல்லாம் மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினையாக்கும் (Effort Will Pay Off) என்ற தெளிவோடு நடைமுறையில் அதுவும் போர்க் காலத்தில் செயற்படுத்திக் காண்பித்தவர்தான் மூத்த செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம். 
மார்ச் 26 09:36

வள்ளுவரும் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையும்

(மட்டக்களப்பு, ஈழம்) 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய நியாயப்படுத்தலை மறுதலிக்கக்கூடிய அரசியல் உத்திகள் நுட்பமாக வகுக்கப்பட்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் மெது மெதுவாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், தமிழ்த்தேசியச் சிந்தனையை மேலும் மடைமாற்றக்கூடிய முறையில் சமயக் கோட்பாடுகள் மிகைப்படுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் ஈழத்தமிழ் அறிஞர்களான கா.பொ.இரத்தினம், தனிநாயகம் அடிகளார் போன்றோர் வள்ளுவம் ஊடாகத் தமிழினத்தை ஒன்றுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய மீள் பார்வை அவசியமாகிறது. 'குறள் ஆய்வுச் செம்மல்' 'உலகத் தமிழர் செம்மல்' ஆகிய பல பட்டங்களைப் பெற்ற ஈழத்தமிழ் அறிஞர் கா.பொ. இரத்தினம், வள்ளுவரை சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று வரைவு செய்திருக்கின்றார்.
பெப். 25 23:04

குர்திஸ்தான் மக்களுக்கு நேர்ந்த அவலம்- புலம்பெயா் தமிழர்களுக்கு பாடம்!

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இராணுவ ரீதியில் அதி உச்சத் தொடர் வெற்றிகளைக் கண்டுகொண்டிருந்த பின்னணியிலேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2001 இல் உருவாக்கப்பட்டது. இன விடுதலைக்கான போராட்ட அரசியல் என்பது தனித்து இயங்கும் ஒன்று அல்ல. எந்தவொரு போராட்டத்துக்கும் அரசியற் காரண காரியங்கள் உண்டு. இராணுவ ரீதியிலான போராட்டத்தின் வெற்றி ஒரு கட்டத்தை மேம்படுத்தும் போது, அதற்கு அடுத்த கட்டமாக அரசியல் ரீதியான அதுவும் ஜனநாயக விழுமியங்களைப் பேணக் கூடிய நெறி முறைகளை நுட்பமாகக் கையாள வேண்டியது அவசியமானது. அதனை மையமாகக் கொண்டே விடுதலைப் புலிகள் 2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கான சமிக்ஞையைக் கொடுத்தனர்.
பெப். 19 07:06

கம்பன் விழா, தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் முயற்சியில்!

(வவுனியா, ஈழம்) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழா, ஈழத்தமிழர் பண்பாடு, தமிழ் மரபுரிமை மற்றும் ஈழத்தமிழ் சைவப் பண்பாட்டை உணர்த்தி நடத்தப்பட்டதா அல்லது வட இந்திய புனை கதைகளுக்கும் அதன் வழி வந்த பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ந்ததா என்பதை விழாவில் பங்குபற்றியோர் புரிந்திருப்பர். "அறிவுடை அமைச்சனாக வள்ளுவ நெறிப்படி நின்றவன் சுமந்திரனா அனுமனா" என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தில் ஈழத்தமிழர் தொடர்பாகப் பேராசிரியர் வரதராஜன் ஸ்ரீபிரசாந்தன் மற்றும் ஆசிரியரும், பேச்சாளருமான செல்வவடிவேல் ஆகியோர் இரண்டு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளனர்.
ஜன. 14 21:07

சர்வதேச நீதியை முற்றாக மறுதலிக்கப்போகும் கனடாவின் தடை

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல காரியங்கள் - கடமைகள் சர்வதேச சமூகத்துக்கு இருக்கும் நிலையில், அவசர அவசரமாகக் குறுக்குவழியில் ராஜபக்ச குடும்பத்தை மாத்திரம் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, இலங்கைக்கு ஆறுதலான சமிக்ஞையைக் கொடுத்திருக்கிறது கனடா. இறுதிப் போரில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவதையும் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபை தடுக்கத் தவறியது. வன்னியில் இருந்து ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுச் சாட்சியம் இன்றி நடந்த போர் என்று சம்பந்தன் 2010 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் வர்ணித்திருந்தார்.
ஜன. 09 08:30

மிலிந்த மொறகொடவும் புதுடில்லியும்

தமிழ் நாட்டுக்கு ஊடாக இந்தியாவை ஈழத்தமிழர்கள் ஒருபோதும் அணுகக்கூடாது. புதுடில்லியுடன் நேரடியாகத் தமது அணுகுமுறையை ஈழத்தமிழர்கள் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு. குறிப்பாகச் சோனியாவை மையப்படுத்திய காங்கிரஸ், மோடியை மையப்படுத்திய இந்துத்துவவாத பி.ஜே.பி ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் தரப்பினருக்குத் தொடர்ந்து வலியுறுத்துகின்ற விடயம் இதுதான். மோடியின் காலத்தில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களில் ஒருபகுதியினர் இந்துத்துவவாத சக்திகளின் வலைக்குள் வீழ்த்தப்பட்டு வருகிறார்கள் என்பது தற்போது பகிரங்கமாகி வருகின்றது.
டிச. 31 19:10

13 ஆவது திருத்தச் சட்டத்தை அகற்ற ரணில் திட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம். தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச நகர்வுகளில் ரணிலுக்கு விசுவாசமாக செயற்பட்டாரோ, அதனையும் விட கோட்டாபய ராஜபக்ச மிலிந்த மொறகொட மீது அதீத நம்பிக்கை வைத்துச் செயற்பட்டிருந்தார்.
டிச. 17 12:12

ஜெனீவாவை மடைமாற்றிய ரணிலின் சர்வகட்சி மாநாடு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் மார்ச் மாத அமர்வு ஆரம்பமாவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், இலங்கை தொடர்பாக ஆணையாளர் தயாரிக்கவுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு மேலதிக முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படும். இப் பின்னணியிலேதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி மாநாட்டைச் சென்ற செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கிறார். ஈழத்தமிழர் விவகாரத்தை ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினையாக 2015 இல் ரணில் மடைமாற்றியிருந்தார். தற்போது ரணில் முழு அதிகாரம் படைத்த ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், 2015 இன் நீட்சியாகவே இச் சர்வகட்சி மாநாட்டையும் வடக்கு மாகாண உறுப்பினர்களுடன் பேச்சு என்ற நகர்வையும் நோக்க முடியும்.
நவ. 20 22:14

ஒற்றுமையில்லை என்பதன் பின்னால் உள்ள அரசியல்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களை முடிந்தவரை இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் இணைந்து வாழக்கூடிய அளவுக்குச் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேசப் பிரதிநிதிகள், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக்சொல்கேய்ம் போன்றவர்கள் மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஊடாக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்களுக்கு பின்னால் இலங்கை அரசாங்கம் மிக நுட்பமாகச் செயற்பட்டு வருகின்றது. 2009 போருக்கு முன்னர் கையாளப்பட்ட அதே அணுகுமுறைகள் தற்போது மீண்டும் வெவ்வேறு அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் ஊடாகக் கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.
செப். 21 09:24

புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா?

(வவுனியா, ஈழம்) புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமைப்புகளையும் சேர்த்தே சிங்கள - ஆங்கில ஊடகங்கள் புலம்பெயர் இலங்கையர்கள் என்று சித்தரிக்கின்றன. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்களா இல்லையா என்பதைப் புலம்பெயர் அமைப்புகள் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாகத் தெரியவில்லை.