கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
செப். 13 15:31

ரணில்- சஜித் இணக்கமில்லை- கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும்!

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதமாச ஆகியோரிடையே சரியான இணக்கம் ஏற்படவில்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சியின் மத்திய குழுவே இறுதி முடிவெடுக்குமென சஜித் பிரேமதாசவிடம் கூறியதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ்க் கட்சிகளை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளார்.
ஓகஸ்ட் 25 16:07

டில்லிக்கு என்ன சொல்ல வேண்டும்? தீர்மானிக்க வேண்டிய தமிழ்த் தரப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திரமோடி சில நாட்களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்திருந்தார். அப்போது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்த மோடி புதுடில்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறுகின்றார். ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கையுடன் இந்தியாவுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள பனிப்போர் தொடர்பாகவே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஓகஸ்ட் 19 22:49

வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்ட நிலையில் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியானார்

(வவுனியா, ஈழம்) ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இன அழிப்பு நடவடிக்கைகள், மனித உரிமை மீறல், போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேஜர் ஜெனரல் (Major General) சவேந்திர சில்வா இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழழை இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இந்த நியமனத்தின்போது ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கைப் படையின் பிரதானியாகப் (Army Chief of Staff) பதவி வகித்திருந்த சவேந்திர சில்வா 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் உக்கிரமடைந்திருந்தபோது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்திருந்தார்.
ஓகஸ்ட் 14 15:29

காஷ்மீர் பிரிப்பு- மகிந்தவுடன் பாகிஸ்தான் தூதுவர் பேசியதன் பின்னணி

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டமை சர்வதேசச் சட்டம் ஒன்றை மீறிய செயல் என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டமை தொடர்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை சந்தித்து தூதுவர் விளக்கமளித்துள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டமை தொடர்பாக தனது அரசியல் கருத்தை வெளியிட்ட முதலாவது தலைவர் மகிந்த ராஜபக்ச என்றும் பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் பாராட்டியதாகக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 13 15:46

சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!

(வவுனியா, ஈழம்) இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கட்சி உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதே தமது நோக்கமென அமைச்சர் ஹரின் பொர்ணான்டோ கூறியுள்ளார். பதுளைப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை சஜித் பிரேமதாசவுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.