(யாழ்ப்பாணம், ஈழம்)
மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம், நினைத்ததைச் சாதிக்கவில்லை. புதவிக்கு வந்த மூன்றாம் மாதம் ஆரம்பித்த மைத்திரி- ரணில் முரண்பாடு, ராஜபக்ச குடும்பத்திற்கும் அந்தக் குடும்பத்தை நம்பி அரசியலில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களுக்கும் வரப்பிரசாதமாகவே அமைந்தது. அதன் பெறுபேற்றை, 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இருநூறுக்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றி ராஜபக்ச அணி வெளிப்படுத்தியது. தமது அதிகாரத்தை மீண்டும் நிரூபித்தது.