கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜூன் 05 14:44

ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்தால் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஒற்றையாட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இலங்கை அரசு, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறு வலியுறுத்தி, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் அனுப்புவதென, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஜூன் 04 10:25

முரண்பாடுகளில் உடன்பாடு- மஹிந்த , சந்திரிக்கா. மைத்திரி ஒரே அணியில், வெளிச் சக்திகள் பின்னணியா?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தலைமையாகக் கொண்ட, ஐக்கியதேசியக் கட்சி கூறியுள்ள அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், இதுவரையும் முரண்பாடுகளுடன் செயற்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதிகளான, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச, ஆகியோர் கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மைத்திரி ரணில் அரசாங்கத்தின் நிலைமை குறித்தும், மஹிந்த ராஜபக்ச அணியின் மக்கள் செல்வாக்கின் பின்னணியில் மேற்குலகநாடுகள், இந்த அரசியலை. நகர்த்தி்ச் செல்லுகின்றதா எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன
ஜூன் 02 11:19

அமெரிக்க, சீன படை அதிகாரிகள் கொழும்பில்; இலங்கைத்தீவு தொடர்பான கேந்திரப் போட்டிகள் தீவிரம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) அரசியல் மற்றும் இராணுவ செயற்பாடுகளில் எதிரும் புதிருமாக இருக்கின்ற அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புகளை, இலங்கையின் ஒற்றையாட்சி அரசு எவ்வாறு பெற்றுக்கொள்கின்றது என கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையின் முப்படைகளுடனான உறவுகளை மேலும் பலப்படுத்த அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
மே 31 22:01

ஈழத்தமிழரின் கிழக்குக் கடலை அமெரிக்காவுக்குத் தாரை வார்க்கிறதா இலங்கை ஒற்றையாட்சி அரசு?

(திருகோணமலை, ஈழம்) தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின் இணைபிரியா அங்கமான திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணை மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள Schlumberger என்ற அமெரிக்க நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது. இதற்கான ஆரம்பகட்ட உடன்படிக்கை ஒன்றை சுலும்பேர்கர் நிறுவனம் இலங்கை பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்சுனா ரணதுங்கவுடன் புதன்கிழமை (மே 30) கைச்சாத்திட்டுள்ளதாக அந்த அமைச்சின் உயர்நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கூர்மை செய்தித்தளத்திற்குக் கருத்துவெளியிட்ட தமிழ் பேசும் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கிழக்கின் கடலில் எண்ணெய் வள ஆய்வு மட்டுமல்ல, இராணுவ ரீதியான கடற்படை உறவையும் அமெரிக்கா பலப்படுத்தியிருக்கிறதென்பதையும் சுட்டிக்காட்டினார்.
மே 31 10:44

மஹிந்த அணியின் 16 உறுப்பினர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு, வெளிச்சக்திகளும் பின்னணியில்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) மைத்திரி, ரணில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள 16 உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை புதன்கிழமை சந்தித்து உரையாடியுள்ளதாக கொழும்பு வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்புத் தொடர்பாகக் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலேயே தாங்கள் சம்பந்தனை சந்தித்து உரையாடியதாகக் கூறியுள்ளார். இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ச உட்பட, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாக சம்பந்தனும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
மே 29 07:37

தமிழக அரசாணை வெளியீடு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்படுமா?

(சென்னை, தமிழ்நாடு) தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையினை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை ஒன்றிணை வெளியிட்டுள்ளது. "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு வந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியிலேயே, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கோண்டு செயல்பட்டு வருவதனால், பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணைகளை இவ்வரசு வெளியிட்டுள்ளது," என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆனால் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் செயற்பாட்டாளர்களும் துறை சார் நிபுணர்களும் இந்த அறிவித்தலின் சட்டவலு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்கள்.
மே 24 12:38

வங்கிக்கிளையில் தமிழ் ஊழியர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தது தேசவிரோதமாம்!

(யாழ்ப்பாணம், ஈழம்) முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கிக் கிளை ஒன்றின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள ஏச்.என்.பி கிளையில் கடந்த 18 ஆம் திகதி முகாமையாளர்களும் ஊழியர்களும் ஒன்றுசேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர். இந்த நினைவேந்தல் தொடர்பான நிழற்படம் உள்வட்டார சமூகவலை இணைப்புகளில் பகிரப்பட்டதும் அதைக் கண்ட பேரினவாதிகள் வங்கிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள வங்கியின் தலைமையலுவலக உயரதிகாரிகள் கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தன.
மே 24 02:08

இந்திய ஒன்றிய அரசு தமிழ் நாட்டில் காவல்துறை வன்முறைக் கலாச்சாரத்தை தூண்டிவிடுகிறதா?

(சென்னை, தமிழ் நாடு) தூத்துக்குடியில் அறவழியில் திரண்டு 100 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருந்த பெருந்திரள் மக்கள், அறவழிப்போராட்டத்தின் நூறாவது நாளை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்ற, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற வேளையிலேயே, கல்வீச்சு சம்பவங்களும் காவல்துறையினரின் கட்டுபாடற்ற வன்முறையினாலும், காவல்துறையினரின் தொடர் துப்பாக்கி பயன்பாட்டாலும் 12 ற்கும் மேற்பட்டோர் படுகொலையாகினர். 65 ற்கும் மேற்பட்டோர், மீள முடியா உடல்பாதிப்பில் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர். மே 22 ஆம் நாள் இரவு தூத்துக்குடியில் இருக்கும் சில மீனவ கிராமங்களில் காவல்துறை தொடர் தேடுதல் வேட்டைகளை நடத்தி அப்பாவி மக்களை அச்சுறத்திய சம்பவமும் நடந்தேறியுள்ளது.
மே 23 13:07

மதங்கொண்ட யானைகள் சம்பூரை அண்மித்த காடுகளுக்குள் ஏவப்படுகின்றனவா?

(திருகோணமலை, ஈழம்) திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் கிழக்கு பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இரவு வேளையில் மதங்கொண்ட யானைகள் வந்து செல்கின்றன. வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்தினது ஆதரவோடு ஆள் அரவமின்றி இரவு வேளைகளில் இந்த யானைகள் தென்பகுதிக் காடுகளில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளை நோக்கிய காடுகளுக்குள் கொண்டுவந்து விடப்படுவதாக சம்பூர் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இன அழிப்புப் போரினாலும், தொடரும் கட்டமைப்பு, பண்பாட்டு இன அழிப்பு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்படும் மக்கள், காட்டு விலங்குகளும் தம்மை வேட்டையாடுவது குறித்து விசனம் கொண்டுள்ளார்கள்.
மே 19 15:57

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான், போன்ற பல பிரிவுகளில் வாழும் மக்கள் கட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்கி பெரும் துயரங்களை அனுபவிப்பதாக முறையிடப்பட்டுள்ளது.