கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மார்ச் 19 22:34

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் - பின்னணியில் அமெரிக்கா, ஆனால் திசை திருப்புகிறார் விமல் வீரவன்ச

(யாழ்ப்பாணம், ஈழம்) நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவாரென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவே அதன் பின்னணி எனவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அமெரிக்காவின் நண்பன் என்றும் பிரதமருக்குரிய அலரி மாளிகையில் அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் அலுவலகம் செயற்படுவதாகவும் மகிந்த தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அமைச்சர் சாகல ரத்நாயக்க மறுத்துள்ளார்.
மார்ச் 16 23:17

மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் - தமிழர் நிராகரித்தால் வெற்றி யாருக்குமேயில்லை

(கிளிநொச்சி, ஈழம்) இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கக்கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்ததாகச் செய்திகள் ஏலவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு உள்ளக ரீதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மகிந்த தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
மார்ச் 14 23:33

இலங்கையின் இறைமை அதிகாரம் பிரிக்கப்படாமல், அதனை சர்வதேச ஆதரவுடன் பாதுகாப்பதே சிங்களக் கட்சிகளின் நோக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை இலங்கையிலேயே கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக பூகோள இலங்கையர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சியாமேந்திரா விக்கிரமாராட்சி, இலங்கைக்கு ஆபத்து வரக்கூடிய அந்தப் பிரேரணையை சிங்கள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனக் கோரினார். இலங்கை இராணுவத்தை உள்ளநாட்டில் விசாரணை செய்யலாம் என்றவொரு அத்தியாயம் ஜெனீவா பிரேரணையில் உள்ளது. பிரித்தானிய அரசு அந்த அத்தியாயத்தை பிரதானப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 12 10:06

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் நஷ்டஈடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) போருக்கு முன்னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான சூழலிலும் வடக்கு - கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்கு ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இந்த உதவி தொடர்பாக கூறியுள்ளார். ஆனால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இல்லாமைச் சான்றிதழ் (Certificate of absence) வைத்திருப்பவர்களுக்கு மாத்திரமே மாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
மார்ச் 10 15:52

மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கிய பெண்கள் நுண்கடன் திட்டத்திலிருந்து மீள்வது எப்போது?

(வவுனியா, ஈழம்) மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கி, பல சவால்களுக்கு மத்தியில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீண்டும் மீள்குடியேறியுள்ள மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் சுரண்டல் செயற்பாடுகள் கேட்பாரற்று தொடர்கின்றன. இந்நிலையில் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் சித்திரவதைப்படும் பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.