செய்தி: நிரல்
ஏப். 05 21:33

நாடாளுமன்றத் தேர்தலை மேலும் பிற்போடுவது குறித்து கட்சித் தலைவர்களுடன் கோட்டாபய பேசவுள்ளார்

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்தத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்தும், கொரேனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வாதால் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்சித் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்வாதல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏப். 04 23:50

இலங்கையில் 12 பிரதேசங்கள் முடக்கம்- எவரும் வெளியில் செல்ல முடியாது

(வவுனியா, ஈழம்) கொரானா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில். இலங்கையில் இதுவரை பண்ணிரன்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. வடமாகாணம் யாழ்ப்பாணத்தில். அரியாலை, தாவடி பிரதேசம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பின் குநகர் பகுதியான களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம, பேருவளையின் சில பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியின் ஒரு பகுதி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை போரத்தொட்டை ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் வாழ்ந்த இந்தப் பிரதேசங்கள் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஏப். 03 23:06

இலங்கைக்கு 128.6 மில்லியன் டெரலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சீன அபிவிருத்தி வங்கி ஐநூறு மில்லியன் அமெரிக்க டெலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த வாரம் கைச்சாத்திட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்ககத்துக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்க ஒ்ப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை கொழும்பில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் நிதியமைச்சு கூறியுள்ளது. ஆரம்ப அவசரச் செயற்பாடுகளுக்காக 1.9 பில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆரம்ப கட்ட அவசர உதவிகள் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான வளரும் நாடுகளுக்கு வழங்கப்படுமென்றும் உலக வங்கி அறிவித்துள்ளதாக இலங்கை நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
ஏப். 02 23:23

இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று வியாழக்கிழமை மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்டு 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 251 பேர் தொற்றிருப்பதாகச் சந்தேசிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேகாலை பின்னவலைப் பிரதேசத்தில் 51 குடும்பங்கள் நேற்றுப் புதன்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை மேலம் அதிகரிக்கலாம் என்று இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏப். 01 22:03

மட்டக்களப்பில் இரண்டாயிரத்து 362 பேர் தனிமைப்படுத்தல்

(மட்டக்களப்பு, ஈழம் ) இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துச் செல்லும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இரண்டாயிரத்து 362 பேர் அவர்களின் வீடுகளிலேயே தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன் கூறியுள்ளார். தேவையான மருத்துவ வசிதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகின்றர். வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய ஆயிரத்து பதினொரு பேரும், மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக சென்று வந்தவர்களுமாக ஆயிரத்து 351 பேர் என மொத்தம் இரண்டாயிரத்து 362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.