செய்தி: நிரல்
ஏப். 13 23:16

வடக்குக் கிழக்கில் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துமாறு கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கடந்தம 24 மணி நேரத்திற்குள் 14 பெருக்கு கொரோனா ரைவரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொற்று;ள்ளவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளது. மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களில் 14 பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் களுத்துறை மாவட்டம் பேருவளையில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக புனானையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தவர்கள். 219 பேர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். கொழும்பில் 45 பேருக்கும் களுத்துறையில் 44 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
ஏப். 12 22:04

வடக்குக் கிழக்கில் பாரிய தாக்கம் இல்லை- யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படலாம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடு;க்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, தொற்றுள்ளவர்களில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. கொரேனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட யாழ் மாவட்டத்தில் தற்போது அதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை நிர்ந்தரமாகத் தளர்த்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏப். 08 22:57

இலங்கையில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்- அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) இலங்கையில் இதுவரை ஏழுபேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். கொழும்பு ஐடிச் வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை மாலை ஒருவர் உயிரிழந்ததையடுத்தே உயிரிழப்பு ஏழாக அதிகரித்துள்ளது. 42 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் 139 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். களுத்துறை, அக்கரைப்பற்று, கண்டி., கேகாலை பின்னவலை ஆகிய பிரதேசங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாதென்றும் எவரும் உள்ளே வரமுடியதெனவும் சுகாதாரணப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
ஏப். 07 22:42

இலங்கைக்கு இந்தியா மருந்துப் பொருட்களை அனுப்பியது

(வவுனியா, ஈழம்) இலங்கையில் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டமைக்கு இந்திய மத்திய அரசுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளர். பத்துத் தொன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்திய மத்திய அரசு இதனை அனுப்பியுள்ளது. இவை இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசரகால சேவைக்கான மருத்துவ அன்பளிப்பு என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏப். 06 21:59

பொதுத் தேர்தலை நடத்துவதே நோக்கம்- நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது- கோட்டாபய

(வவுனியா, ஈழம்) முடிந்தவரை கொரேனா வைரஸ் பரவுவதைத் தடுத்து சுமுகமான நிலையை ஏற்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதே பிரதான நோக்கம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் அணி உறுப்பினர்களுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்போது இலங்கையில் உருவாகியுள்ள அவசரகால நிலைமையினால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவையில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் மாத்திரமே நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும்.