செய்தி: நிரல்
ஜூன் 05 22:02

நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் அணி போட்டியிட முடியுமா? நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு கோரி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்பதோடு கட்சியின் மத்திய குழுவிலும் அங்கம் வகித்திருந்தனர்.
ஜூன் 01 23:38

நாடாளுமன்றத் தேர்தல்- புதிய திகதியைத் தீர்மானிப்பதில் இழுபறி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கொழும்பில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சட்டச் சிக்கல் முடிவுக்கு வந்த பின்னர் உடனடியாகவே தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க முடியும் என்றும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மே 29 16:22

நாடாளுமன்றத் தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் ஒத்திவைக்கப்படலாம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து செல்கிறது. தோ்தலை நடத்த மேலும் மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படக் கூடிய நிலை காணப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று எட்டாவது நாளகவும் நடைபெற்ற நிலையில் அந்த விசாரணை மேலும் நீடிக்கப்படலாமென அமைச்சர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையிலேயே தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் வரை பிற்போடப்படலாமென கோட்டாபய ராஜபக்ச கூறியதாக அறிய முடிகிறது.
மே 26 23:03

ஆறுமுகன் தொண்டமான் கொழும்பில் காலமானார்

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமாகிவிட்டார். கொழும்பின் புநகர் பகுதியான தலங்கம பிரதேசத்தில் உள்ள அமைச்சருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தில் மயங்கி விழுந்த நிலையில் தலங்கம பிரதேச வைத்தியசாலையில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அவரது அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மே 25 23:45

கொழும்பு, கம்பகா மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு- போக்குவரத்துகள் இல்லை

(வவுனியா, ஈழம்) இரண்டு மாதங்களின் பின்னர் நாளை செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு, கம்பகா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கச் சட்டம் தளர்த்தப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கை முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுப் பின்னர் கொழும்பு, கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை ஊரடங்குச் சட்டத் தளர்த்தப்பட்டாலும் கொழும்பில் இருந்து கம்பகா தவிர்ந்த ஏனைய வெளி மாட்டங்களுக்கு எவரும் செல்ல முடியாதென்றும் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் எனவும் அரசாங்கம் அறிவித்தள்ளது.