செய்தி: நிரல்
ஒக். 17 21:12

நிருபமா ராஜபக்சவின் சொத்துக்களை வெளிப்படுத்தவும்

(வவுனியா, ஈழம்) பண்டேரா பேப்பர்ஸ் ஆவண விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் சொத்து விபரங்களை ராஜபக்ச அரசாங்கம் வெளியிட வேண்டுமென கொழும்பில் இருந்து இயங்கும் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் (Transparency International) வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள இந்த மூன்று அரச நிறுவனங்களும் நிருபமா ராஜபக்சவின் சொத்து விபரங்களை உடனடியாக வெளிப்படுத்தி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளது.
ஒக். 16 20:50

மன்னாரில் 31 ஆயிரத்து 339 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கை சுமார் 31 ஆயிரத்து 339 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை தொடர்பான விஷேட கூட்டம் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரன்லி டி மெல் தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒக். 14 10:28

மலையகத் தமிழர்களின் போராட்டங்கள் பற்றி எடுத்துக்கூறும் வெந்து தணியாத பூமி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைத்தீவின் மலையகத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த வரதன் கிருஸ்ணா என்ற மூத்த ஊடகவியலாளர், வெந்து தணியாத பூமி என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கனடாவில் வாழும் வரதன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் பங்கெடுத்த ஒருவர். மலையகத் தமிழர்களின் விடுதலையும் போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்ற கருத்தைக் கொண்ட வரதன். ஆரம்பகாலங்களில் மலையகத்தில் வாழ்ந்த காலங்களில். அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறைகள் பற்றி இந்த நூலில் விபரிக்கிறார். குறிப்பாகத் தனது போராட்ட வாழ்வு. போராட்டத்தினால் சிறைக்குச் சென்ற அனுபவங்கள் பற்றியெல்லாம் நூலில் விபரிக்கிறார் வரதன் கிருஸ்ணா.
ஒக். 13 08:39

கொழும்பு ரஜமாக விவகாரையில் கைக்குண்டு மீட்பு

(வவுனியா, ஈழம்) கொழும்பு பொரலெஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள பெல்லன்வில ரஜமகா விகாரையில் கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை பிற்பகல் இந்தக் கைக்குண்டு கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. விகாரையில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் கைக்குண்டு விகாரையில் உட்புறமாகவுள்ள சிவருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தததைக் கண்டு விகாராதிபதிக்கு அறிவித்துள்ளார்.
ஒக். 12 22:55

மின்சார அபிவிருத்தி- அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

(கிளிநொச்சி, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய அரசாங்கம் அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை இரகசியமான முறையில் கைச்சாத்திடத் தீர்மானத்துள்ளதாக மின்சாரசபை சேவையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மின்சார சபை விரிவாக்கத் திட்டத்தில் பாதிப்பு எதுவுமே ஏற்படாதெனக் குறிப்பிடும் அரசாங்கம் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் முழு வரைபையும் இதுவரை வெளிப்படுத்தவில்லையென மின்சாரசபை சேவையாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் தெரிவித்தார்.