செய்தி: நிரல்
ஒக். 06 22:48

இலங்கை தொடர்பான ஜெனீவாத் தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியது

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை அமா்வில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வருடங்களைப் போன்று இந்த வருடமும் இந்தியா வாக்கெப்பில் இருந்து விலகிக் கொண்டது. ஆதரவாக இருபது நாடுகளும், எதிராக ஏழு நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட இருபது நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டன. ஆனால் ஏனைய அயல்நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு எதிர்த்து வாக்களித்தன.
ஒக். 04 21:00

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்டிக்கை இதுவரை முழுமை பெறவில்லை என்கிறார் பிரதமர்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடித் தீர்வுக்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்ட ஊழியர்மட்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த நிபந்தனைகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் குறித்த உடன்படிக்கை தொடர்பாக குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். காரணத்தையும் அவர் கேட்டுள்ளார்.
ஒக். 03 21:43

பேராசிரியர் பீரிஸ் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார்

(வவுனியா, ஈழம்) மக்களின் தொடர் போராட்டத்தினால் கடந்த யூலை மாதம் 12 ஆம் திகதி பதவி விலகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் இருந்து சுதந்திர தேசிய சபையாகச் செயற்படும் அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துப் பேசியுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பு மல்சேகர மாவத்தையில் உள்ள இலங்கைப் பாதுகாப்புக் கற்கை நெறிகளுக்கான அக்கடமி வளாகத்திற்கு அருகில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
செப். 30 20:57

இலங்கையில் ஒக்ரோபர் மாதம் மீண்டும் மக்கள் புரட்சி என்கிறார் ஹிருணிகா

(வவுனியா, ஈழம்) ஓக்ரோபர் மாதம் இலங்கையில் மீண்டும் பாரியதொரு மக்கள் புரட்சி வெடிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். மக்கள் ஒன்றுகூடலை தவிர்ப்பதற்காக வர்த்தமானி அறிவித்தல்கள் பலவற்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளதாகவும் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.
செப். 28 22:11

மோடி- ரணில் ஜப்பானில் சந்திப்பு - இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து உரையாடல்

(வவுனியா, ஈழம்) ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்குபற்றி, ஜப்பான் சென்ற ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். புதன்கிழமை இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சம்பிரதாயபூர்வமாகச் சந்திப்பு இடம்பெற்றாலும். இலங்கைக்குக் கடன் வழங்குவதில் இந்தியாவின் மறுசீரமைப்புத் தொடர்பாக இருவரும் பேசப்பட்டதாகக் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை ஜப்பான் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேயின் இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துகொண்டார்.