செய்தி: நிரல்
டிச. 13 17:22

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு முரணானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு- சர்வஜன வாக்கெடுப்பு நடத்த மைத்திரி தீர்மானம்?

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தவறானது என்றும், அவ்வாறு கலைக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிட்ட இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து இந்தத் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை மாலை ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
டிச. 13 13:03

மனித எச்சங்களைப் பார்க்கும்போது தமிழின அழிப்பு புலனாகின்றது - அனந்தி சசிதரன்

(மன்னார், ஈழம்) இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ள உறவுகளினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரம் இரும்புக் கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் மீட்கப்பட்டமையானது மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு மக்கள் அடிமைகளாக கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வடக்கு மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
டிச. 13 10:43

அமெரிக்க இராஜதந்திரி கொழும்புக்கு வருகை? மைத்திரி, மகிந்த, ரணில், சம்பந்தன் ஆகியோரைச் சந்திக்கவும் ஏற்பாடு

(மன்னார், ஈழம்) ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றிய பின்னரும் ஜனாதிபதி மைத்திரி தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென கூறிவிட்டார். ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று இரவே கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரின் பெயரை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்தி ஐக்கிய தேசிய முன்னணிக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி மைத்திரியின் பிடிவாதத்திற்கு இணங்க முடியாது என்றும் தனிப்பட்ட விரும்பங்களுக்காக இலங்கையின் அரசியல் யாப்பு விதிமுறைகளை மீற முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
டிச. 12 15:46

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 117 வாக்குகளால் வெற்றி -ஜே.பி.வி பங்குகொள்ளவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவினால் சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 117 வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது. இலத்திரனியல் முறைப்படியும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்பட்டும் வாக்களிப்பு இடம்பெற்றதாக நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். எனினும் இன்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் நாடாளுமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.
டிச. 12 13:30

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஐ.நா பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரி போராட்டம்

(மன்னார், ஈழம்) வடமாகாணம் - மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்காலத்திற்குரியதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை, ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று புதன்கிழமை வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். தமிழர் தாயகப் பகுதியான வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.