செய்தி: நிரல்
டிச. 25 23:50

மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படவில்லையென முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் கிராமங்களில் வாழும் மக்களுக்கு இதுவரை காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தி.கோணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1963ஆம் ஆண்டு 25 குடும்பங்களுடன் கிராம அபிவிருத்திச் சங்கம் பதிவு செய்யப்பட்ட தமிழ் கிராமங்களில் ஒன்று ஆலங்குளம் எனத் தெரிவிக்கும் கோணேசன் இன்று வரைக்கும் 287 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கூறினார்.
டிச. 14 17:31

மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடுகள் - கருத்து வெளியிட வேண்டாமென அறிவுறுத்தல்

(வவுனியா, ஈழம் ) இலங்கை உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மகிந்த ராஜபக்ச தரப்புக்குள் முரண்பாடுகள் மோதல்கள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தவிசாளராக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 54 உறுப்பினர்களும் தனித்துச் செயற்படுகின்றனர். இந்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் கட்சி சார்பாக வெளியிடப்பட்டு வருகின்றன.
டிச. 14 12:28

மடுமாதா தேவாலயம் புனித பிரதேசம் - ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கை - கத்தோலிக்க ஒன்றியம் எதிர்ப்பு

(மன்னார், ஈழம்) வரலாற்றுச் சிறப்பு மிக்க மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும், ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்க்கமான முடிவை மக்களுக்கும், மன்னார் மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிச. 13 21:43

இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தலைமை பொறுப்பு வரலாறு படித்தவருக்கு!

(சென்னை, தமிழ்நாடு) இந்திய ஒன்றியத்தின் முழு பொருளாதாரத்தையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்படும் நடுவண் வங்கியின் (Reserve Bank of India) ஆளுநர் உர்ஜித் பாடேல் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம், வரலாற்று பட்டம் பெற்று இந்திய ஆட்சியியல் பணியில் இருந்த சக்திகந்ததாஸ் என்பவரை அப்பொறுப்புக்கு நியமித்துள்ளது. உர்ஜித் பாடேல் பதவி விலகிய சர்ச்சையே இன்னும் ஓயாத வேளையில், பொருளாதாரத் துறையில் எவ்வித பின்புலமும் இல்லாத ஒருவர் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தவல்ல நடுவண் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மேலும் சர்சையினை உருவாக்கியுள்ளது.
டிச. 13 17:22

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு முரணானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு- சர்வஜன வாக்கெடுப்பு நடத்த மைத்திரி தீர்மானம்?

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தவறானது என்றும், அவ்வாறு கலைக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிட்ட இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து இந்தத் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை மாலை ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.