(யாழ்ப்பாணம், ஈழம்)
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த வருடம் யூன் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை இலங்கை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக உருவாக்கிய வலைப்பின்னல் தற்போது பட்டவர்த்தனமாகியுள்ளது. இச் சூழலில் தமிழர் தரப்புக்குள், இந்தியாவையும் மேற்கையும் நோக்கி இணைந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். சுமந்திரன்-செல்வம் பிளவு மட்டுமல்ல, ஜெனீவாவை நோக்கி முன்வைக்கப்பட்ட இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை பற்றிய கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்படவில்லை. அதைப் போல, ஒற்றையாட்சி நிராகரிப்பு இன்றி, 13 ஆம் திருத்தம் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தவறு நடந்துள்ளது. இந்தத் தவறுகள் உடனடியாகத் திருத்தப்படவேண்டும்.