கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜன. 02 21:49

சிறிதரன், சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும், ஒருசேரக் கொடுத்த தமிழ்த் தேசியப் பாடம்

(கிளிநொச்சி, ஈழம்) பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தித் தருமாறு இந்தியாவிடம் கோருவதை எதிர்த்தால் போதும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்காமல் இருக்கிறோம் என்று பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் மதியாபரணம் சுமந்திரனும் தத்தமது நிலைப்பாட்டை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியிருந்தார்கள். கடந்த வருடம் ஜனவரியில் இன அழிப்பு விசாரணை கோருவதை விட ஜெனீவாவில் இருந்து பொறுப்புக்கூறலை வெளியே எடுத்தாற்போதும் என்று ஆரம்பத்தில் கொழும்பில் பாக்கியசோதி சரவணமுத்துவின் ஒழுங்கில் சந்தித்தபோது உடன்பட்டது போல அன்றி, இம்முறை சற்று வித்தியாசமாக, இவ்விருவரும் ஒரே நிலைப்பாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல், முரண்பட்டவாறு உடன்பட்ட விநோதம் நடந்திருக்கிறது.
டிச. 31 22:15

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தமும்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகமாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை நேர்த்தியாக அங்கீகரிக்கவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழிடம் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டையே முன்வைத்தது. கிழக்கில் மட்டும் நிரந்தர இணைப்புக்கான பொதுவாக்கெடுப்பு என்று தமிழ்த் தேசத்தின் நிலவொருமைப்பாட்டைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அந்த ஒப்பந்தம் 'பல்லின சமூகம்' என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டிருப்பதில் ஏதோ விடயம் இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால், அது ஒரு பல்லின சமூகமாக நில அடையாளத்தையும் அர்த்தமற்ற அதிகாரப்பகிர்வினூடாக ஈழத்தமிழர்கள் இழப்பதற்கும் பயன்படக்கூடிய சொற்பிரயோகமே. இதே ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சிலர் எண்ணுவது வேடிக்கையானது.
டிச. 22 22:40

'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்'

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமரிடம் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிகள் இழுபறியில் இருப்பதாகத் தமிழத்தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன. ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் மூன்று கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஐந்து பக்கம் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அது தொடர்பாக மீள் ஆய்வு செய்வதென நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் முடிவெடுக்கப்பட்டன. இன்று அல்லது நாளை வியாழக்கிழமை குறித்த ஆவணத்தில் கையொப்பமிடப்படுமென நேற்றைய கூட்டத்தின் முடிவின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
டிச. 12 23:15

தேசம், சுயநிர்ணய உரிமை நீக்கம்- பிரித்தாளும் தந்திரத்திற்குள் தமிழர் அரசியல்

(முல்லைத்தீவு) அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவிடம் ஒருமித்த குரலில் கோரவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் ஆனால் அதனை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இன்றைய சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை தாங்கினார்.
டிச. 11 15:19

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சொல்வதும், சொல்லாது சொல்வதும்

(கிளிநொச்சி, ஈழம்) போர் இல்லாதொழிக்கப்பட்டதொரு சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பும் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தென்படுகிறது. இலங்கை இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல, இதற்கு அப்பாற்பட்ட பல நடவடிக்கைகளும் இலங்கைப் பொறுப்புக்கூறல் தொடர்பாக அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகின்றது. அதாவது தமிழர் தரப்பு மீதும் தடைகள் வரலாம் என்பதும், மீண்டும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா ஒபாமா காலத்து அணுகுமுறையைத் தொடரவுள்ளது என்பதுமே அதன் அர்த்தமாகும்.