கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
செப். 13 22:37

அமெரிக்காவையடுத்து இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்- கூட்டுப் பயிற்சியும் நிறைவு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை நாடாளுமன்றக்குழு ஒன்று கடந்த ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் சென்றி்ந்த நிலையில் கடந்த ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலைத்துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தன. ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஆகியோர் கடந்த மாத இறுதியில் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் வள ஆய்வும் திருகோணமலைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஈழத் தமிழர் கடற்பரப்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாடகைக்குப் பெறப்பட்ட BGP Pioneer என்ற எண்ணெய் வள ஆய்வுக் கப்பல் ஒன்றும் வந்துள்ளது.
ஓகஸ்ட் 31 15:26

மஹிந்தவை மையப்படுத்திய கூட்டு எதிர்க் கட்சியுடன் மைத்திரியின் சுதந்திரக் கட்சி இணைய வேண்டுமென அழைப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும், இல்லையேல் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகிய ஏனைய 15 உறுப்பினர்களும் மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் டிலான் பெரரே தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு டிலான் பெரேரா எச்சரிக்கையும் விடுத்துள்ளார். கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு முன்னர் மைத்திரி- ரணில் அரசாங்கதில் இருந்து விலகுமாறும் மைத்திரிபால சிறிசேன அதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓகஸ்ட் 23 15:36

திருகோணமலை உள்ளிட்ட கடற்பிரதேசங்களை ஜப்பான் அரசும் கையாளும்- அச்சுறுத்தலுக்கு இணங்கியதா இலங்கை அரசு?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக ஜப்பான் எழுப்பிய பல கேள்விகளுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் விளக்கமளித்திருக்கின்றது. குறிப்பாக சீன அரசின் இராணுவ மூலோபாங்களுக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமே இல்லையென ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கொழும்பில், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கூறியிருந்தார். ஆனால் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜேரட்ன, இட்சுனோரி ஒனோடெரா கூறியதை மறுத்துள்ளார். அதாவது சீனாவின் எந்தவொரு இராணுவத் தேவைக்கும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என உறுதியளித்துள்ளார்.
ஜூலை 23 13:26

இந்தியத் துணை கண்டத்தில் சிறந்த மாநில அரசுகளின் பட்டியல் வெளியீடு- தமிழ்நாடு, கேரளா சிறப்பான ஆட்சியாம்

(சென்னை, தமிழ்நாடு) இந்தியாவின் கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இயங்கும் பொது விவகார மையம் (Public Affairs Centre) வெளியிட்ட 2018-பொதுவிவகார குறியீடு (Public Affairs Index) முடிவுகளின் படி, தென்னிந்திய மாநில அரசுகளான கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, கருநாடகம் சிறந்த ஆட்சி முறைகளை கொண்டவைகள் எனவும் மத்திய பிரதேசம், ஜார்காந்த், பீகார் ஆகிய வட இந்திய மாநிலங்களின் நிர்வாகங்களுக்கு இறுதி புள்ளிகளே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு, இந்திய துணைக்கண்டத்தின் பொருளாதர நிபுணர்களின் ஒருவரான சாமுவேல் பவுல் என்பரால், இந்திய துணைக்கண்ட மாநில அரசுகளின் ஆட்சி முறையினை கண்காணிக்க உருவாக்கப்பட்ட அமைப்புதான், பொது விவகார மையம் (Public Affairs Centre).
ஜூலை 21 15:30

ஆதாரங்கள் இருந்தும் விசாரனைகளை மூடிமறைக்க இலங்கைப் பொலிஸார் முயற்சி? தமிழக் கட்சிகள் மௌனம்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் நகரத்தின் நுழைவாசலில் போர்க்காலத்திற்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களின் மண்டையோடுகள் பாற்பற்களுடன் மீட்கப்பட்டுள்ளன. இந்த மூன்று சிறுவர்களும் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர். 37 ஆவது நாட்களாக இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியின்போது சுமார் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் ஒழுங்கற்ற முறையில் இருந்ததாகவும் ஆகவே சடலங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை எனவும் சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ, கூறுகின்றார். களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவும் அவ்வாறு தெரிவிக்கின்றார்.
ஜூலை 18 15:51

இலங்கைப் படையின் முன்னாள் உயரதிகாரி சரத் வீரசேகர கொலை மிரட்டல்- சிவில் சமூக அமைப்புகள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்படுவதை முற்றாகவே நிரகரிக்கும் வகையில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை முப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கேற்ற முறையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. போருக்கு முன்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வன்முறைகள், போதைப்பொருள் பாவனைகள் இருந்ததில்லையென விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கூறிய பின்னர், கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. விஜயகலா சிங்களக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய உரையில் சொல்லப்பட்ட விடங்கள் உண்மையானவை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியாயப்படுத்தினார். இதனால் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்ற 17 ஆம் திகதி அவரை விசாரணைக்கும் உட்படுத்தியிருந்தனர்.
ஜூலை 09 10:39

ஜெனீ்வாவை திருப்திப்படுத்தி இலங்கைப் படையினரைக் காப்பாற்ற முயற்சி- உறவினர்கள் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் கொழும்பை மையப்படுத்தி செயற்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அறியும் அலுவலகம், ஜெனீவா மனித உரிமைச் சபையின் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில் செயற்படுவதாக இடதுசாரி முன்னணியின் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். போரின் போதும், போரின் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பற்றிய தகவல்களை பெறுவதை விட, இலங்கைப் படையினரைக் காப்பாற்றும் முயற்சிகளில் இந்த அலுவலகம் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜூலை 07 22:54

நியூயோர்க் ரைம்ஸ் செய்தி குறித்த மூலத்தை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் செலவுக்காக மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு சீனா 7.6 மில்லியன் ரூபாய்கள் கொடுத்ததாக அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ் கடந்த 25 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி இலங்கைப் பத்திரிகைகளில் வெளியாகி பின்னரே மஹிந்த ராஜபக்க்ஷவும் மறுத்திருந்தார். சீன அரசாங்கமும் அதிகாரபூர்மாக அந்தச் செய்தியை நிராகரித்தது. இந்த நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையிடம் இருந்து ஆதாரங்களைக் கோரியுள்ளது. நிதி வழங்கல் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துவதற்கு வசதியாக குறித்த செய்தி தொடர்பான அடிப்படை மூலங்கள் அவசியம் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை 03 23:51

விஜயகலா பேசியதைத் தமிழர்கள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை- ஆனால் கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறிய கருத்து, முன் சிந்தனையில்லாத தனிப்பட்ட அரசியல் நோக்கம் கொண்டது என்பதை தென்னிலங்கையில் உள்ள சில பிரதான சிங்கள அரசியல்வாதிகளுக்குப் புரியும். ஆனாலும், அவசர அவசரமாக விஜயகலாவை அமைச்சுப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவிட்டு, இலங்கைச் சட்ட மா அதிபர் மூலமாக விசாரணை நடத்த எடுக்கப்பட்ட முடிவு பௌத்த சிங்கள பேரினவாத கண்ணோட்டத்துடன் அமைந்ததாகவே கருதப்படுகின்றது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மேலும் பாதுகாக்கும் நேக்கில் கட்சி வேறுபாடுகள் இன்றி சிங்கள பௌத்த பேரினவாதம் ஒன்று சேர்ந்து எடு்க்கும் நடவடிக்கை என இலங்கை நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.
ஜூன் 29 08:41

தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஐக்கியதேசியக் கட்சி- மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும் ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) அடுத்த ஆண்டு முற்பகுதியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரிபால சிறிசேன முற்பட்டு வரும் நிலையில், ஆண்டின் இறுதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.