செய்தி: நிரல்
நவ. 27 22:47

முப்படையினரின் அச்சுறுத்தல், தடைகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் முப்படையினரின் தடைகளுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.05க்கு சுடரேற்றி உணர்வுபூர்வமாக அனுஷ்டித்துள்ளனர். சைவக் குருமார், அருட்தந்தையர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இராணுவத்தின் கடுமையான அச்சறுத்தல்களுக்கு மத்தியில் தங்கள் இல்லங்கள், அலுவலகங்கள், பொதுக் கட்டங்களுக்கு முன்பாக சுடரேற்றினர். இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மார்ட்டீனார் குருமடத்துக்கு முன்பாக சுடரேற்றிய குற்றச்சாட்டில், அந்தக் குருமடத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பாஸ்கரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை இரவு அருட்தந்தை கைது செய்யப்பட்டதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
நவ. 21 22:47

முப்படையினருக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீட்டு- பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கு 35ஆயிரத்து 515 கோடியே 91 இலச்த்து 50ஆயிரம் ருபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை மாலை இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நவ. 10 22:56

பைடன் நிர்வாகம் கோட்டாபய அரசாங்கத்தை அரவனைக்கும்- இந்தியப் பத்திரிகையாளர் பாலச்சந்திரன்

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் இறங்கிச் செல்லுமெனவும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கையை அரவனைக்க வேண்டியதொரு தேவை அமெரிக்காவுக்கு உண்டெனவும் எமது கூர்மைச் செய்தித்தளம் தொடர்ச்சியாகச் செய்திக் கட்டுரைகளை எழுதிவருகின்றது. கடந்த 28ஆம் திகதி கொழும்புக்கு வந்து சென்ற அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைப் பொம்பியோ ஒற்றை ஆட்சி இலங்கையை ஆரத்தழுவிச் சென்றிருக்கிறாரெனவும் கூர்மைச் செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.
நவ. 06 21:46

கொழும்புத் துறைமுக கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தியும் இந்தியாவும்

(வவுனியா, ஈழம்) அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குழறுபடிகளுக்கு மத்தியில் எவர் பதவியேற்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பெரியளவில் மாற்றங்கள் இருக்காது. ஏனெனில் இந்தோ- பசுபிக் பிராந்திய அமெரிக்க நலன் சார்ந்த விடயங்களைச் சாதகமாகப் பயன்படுத்தியே தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. அத்துடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்தோ- பசுபிக் பிராந்தியச் செயற்பாடுகள் என்பது அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்களின் கைகளிலேயே உண்டு. ஆகவே யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆசியப் பிராந்தியச் செயற்பாடுகளில் மாற்றங்கள் இருக்காதென்றே கூறலாம்.
நவ. 01 22:07

ஈழப் போராட்டத்திற்கு உதவிய கொட்டகலை மேரியம்மா காலமானார்

(வவுனியா, ஈழம்) கொழும்பில் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட வரதன் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்த ஜேக்கப் மேரியம்மா (மேரி அக்கா) நேற்றுச் சனிக்கிழமை நுவரெலியா கொட்டகலையில் தனது 81ஆவது வயதில் காலமானார். 1994ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணி என்ற தொழிற் சங்கத்தை ஆரம்பித்தவரும் அதன் தலைவருமான முன்னாள் அமைச்சர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதற்கும் இதுவே காரணமாக இருந்தது.
ஒக். 28 23:18

ஒற்றையாட்சி இலங்கையை அமெரிக்கா ஆரத் தழுவுகிறது

(வவுனியா, ஈழம்) ஆசிய நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலும், ராஜபக்ச சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமான அததெரன தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலும் வரிக்குவரி இலங்கையின் இறைமை என்ற சொல்லாடலை உச்சரித்திருக்கிறார். பலமான இறைமை பொருந்திய இலங்கை உலகத்துக்குத் தேவை என்று அவர் கூறியுள்ளார். ஜனநாயகப் பண்புள்ள முழுமையான சுதந்திரமும் இறைமையுமுள்ள இலங்கையோடு நட்பைப் பலப்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
ஒக். 26 23:48

இலங்கையில் அமெரிக்கா, சீனா கருத்து மோதல்- தூதரகம் அறிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ள அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் (Mark Esper) இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ( Rajnath Singh) ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். புதுடில்லியில் இன்று திங்கட்கிழமை இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. தென் மற்றும் பசுபிப் பிராந்தியங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சீனாவின் செயற்பாடுகளினால் தென் பசுபிக் பிராந்தியக் கடலோரத்தில் கண்காணிப்புக் கப்பல்களை நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்வது தொடர்பாக அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றமை தொடர்பாகவும் இந்த உரையாடலில் இருவரும் விரிவாகப் பேசியுள்ளனர்.
ஒக். 25 21:46

கொழும்புக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறப்போவது என்ன?

(வவுனியா, ஈழம்) தென்பசுபிக் பிராந்தியத்தில் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களை நிரந்தரமாக நிலை கொள்ளச் செய்வது குறித்து அமெரிக்கா அவசரமாக ஆராய்ந்து வரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க்ஸ் எஸ்ப்ர் ஆகியோர் நாளை திங்கட்கிழமை ஆசியாவுக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர். நாளை மறுதினம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வரவுள்ள இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.
ஒக். 19 22:34

திருகோணமலையில், இந்திய- இலங்கை கடற்படைகளின் கூட்டு ஒத்திகை

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியா எப்போதும் சீனாவுடனான போருக்குத் தயராகவே இருப்பதாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை இந்திய இலங்கை கடற்படையினரின் மூன்றுநாள் கூட்டு ஒத்திகை தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலைக் கடற்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒத்திகை வருடா வருடம் நடைபெறும் ஸ்லிம்நெக்ஸ் ஒத்திகையென இந்திய இலங்கைக் கடற்படைகளின் அதிகாரிகள் கூறுகின்றனர். சீனாவின் தென் பிராந்தியத்தில் உள்ள குவாங்டொங் மாகாணத்திலுள்ள இராணுவ படைத்தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஜின்பிங், போருக்குத் தயாராக இருக்குமாறு இராணுவத்தினர் மத்தியில் கூறியிருந்தார்.
ஒக். 18 14:02

முத்தையா முரளிதரனை மையப்படுத்திவரும் தமிழின எதிர்ப்பு அரசியலை முறியடிக்க அருட்தந்தை சக்திவேல் வேண்டுகோள்

ஒரு விளையாட்டு வீரனாகப் பரிணமித்து தற்போது இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆட்சிபுரியும் கொலை அரசாங்கம் சார்ந்த அரசியலுக்குத் தானும் பலியாகி தனது தம்பியையும் ராஜபக்சவின் கட்சி அரசியலில் ஈடுபடுத்தியிருப்பவர் தான் முத்தையா முரளிதரன். இவர் ஆட்சியாளர்களின் கைப்பொம்மை. தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் 800 படத்தின் அரசியல் நோக்கம் தமிழ் மக்களின் தேசியத்தைச் சிதைக்கும் நோக்குள்ளதன்றி வேறெதுவாகவும் இருக்கமுடியாது என்று மலையகத்தைப் பின்னணியாகக் கொண்ட மனிதநேய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும் முற்போக்குவாதியுமான அருட்தந்தை சக்திவேல் கூர்மை செய்தி இணையத்திற்குத் தெரிவித்தார். இந்த முயற்சி தோற்கடிக்கப்படவேண்டும். இதற்கு தமிழக நடிகர் விஜய் சேதுபதி துணை நிற்கக்கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.