நிரல்
ஒக். 08 00:13

மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல்காரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? பிரதேச மக்களுக்குச் சந்தேகம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம்- அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது அடையாளந்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5.30 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மண் கடத்தல் வரையறையின்றி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும் இதுகுறித்து இலங்கைப் பொலிஸார் எவ்வித சட்டநடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையில் சட்டவிரோத மண் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சிவில் உடையில் வந்த இருவர், உழவு இயந்திரங்களை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதும், உழவியந்திரங்கள் வேகமாக தப்பிச் செல்ல முனைந்தது.
ஒக். 07 12:58

இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு

(மன்னார், ஈழம்) ஈழத் தமிழர்களின் திருகோணமலைத்துறைமுகம், வடக்கு- கிழக்குக் கடற் பிரதேசங்களை பிரதானமாகக் கருதி, இலங்கை இந்தியாவை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 11ஆம் 12ஆம் திகதிளில் இடம்பெறவுள்ள மாநாட்டில், இந்தியா, சீனா, ஜப்பான் அமெரிக்க, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளின் பிரதான இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவர். இந்தியப் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் எலிஸ் ஜீ. வெல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹீ ஷியான்லியாங் ஆகியோர் கலந்துகொள்ளவர்.
ஒக். 06 19:47

கடும் மழையினால் நான்கு பேர் பலி மேலும் 4 பேர் காயம் - எட்டு இலட்சத்து மூவாயிரத்தி 496 மக்கள் பாதிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று இதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையினால் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 936 குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1042 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
ஒக். 05 22:48

செம்மலையில் இலங்கை வன இலாகாவின் பிடியில் மக்களின் காணிகள்- திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம்

(முல்லைத்தீவு, ஈழம்) இன அழிப்புப் போரின் 2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு- கிழக்கு பகுதிகளில் உள்ள வளங்கள் உட்பட காணிகள் சூறையாடப்பட்டு அவற்றை அபகரிக்கும் முயற்சி திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே, முல்லைத்தீவு - செம்மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான நுாறு ஏக்கர் விவசாய நிலமும் வனவள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 133 அமர்வி்ன் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் இதனைக் கண்டித்து விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்ததார். பிரேணை இலங்கை வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கும் ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
ஒக். 05 21:30

சீனாவின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்- இந்து சமுத்திரத்தின் கேந்திர மையம் என்கிறார் அமைச்சர் ஹர்ஷ

(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்கா, ஜப்பான். இந்தியா ஆகிய நாடுகளின் போர்க் கப்பல்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து கொழும்பு, திருகோணமலைத் துறைமுகங்களுக்கு வந்து சென்றுள்ள நிலையில், சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் (Submarine Support Ship) நேற்று வியாழக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்தக் கப்பலின் வருகை நல்லெண்ண பயணம் என கொழும்பில் உள்ள சீனத்துாதரகம் கூறியுள்ளது. இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்து செல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார். அது நல்லெண்ண அடிப்படை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஒக். 05 18:32

அனுராதபுரம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்- தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

(மன்னார், ஈழம்) இலங்கை அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 22 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள், அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று அனுராதபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இலங்கைப் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் பொலிஸாருடன் தர்க்கப்பட்டனர்.
ஒக். 05 15:15

முல்லைத்தீவில் கேப்பாப்புலவு, முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் இலங்கைப் படையினர் நிரந்தர முகாம்களை அமைக்க முயற்சி

(முல்லைத்தீவு, ஈழம்) வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்கும் மையப்பகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிரதேசத்தில் அறுநுாற்றிப் 17 ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கைப் படையினர் நிலை கொண்டுள்ளனர். அதேவேளை, முல்லைத்தீவு முள்ளிவாய்ககாலில் மிகவும் பெரியளவிலான காணிகளைக் கொண்டமைந்த கோட்டபாய கடற்படை முகாம் நிரந்தர முகாமாக மாற்றியமைக்கப்படக் கூடிய வாய்ப்புகளே அதிகமாக உள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் நிலப்பரப்புக்களை கூறுபோட்டு சிங்களக் குடியேற்றங்களை 1983இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்ன ஆரம்பித்து வைத்தார். அந்தப் பணியை மைத்திரி- ரணில் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒக். 04 22:09

வாழைச்சேனையைச் சேர்ந்த இளம் பெண் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்- கணவன் முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) கட்டாரில் மூன்றாண்டுகளாக பணி புரிந்து தாயகம் திரும்பிய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கணவர் முறையிட்டுள்ளார். மட்டக்ககளப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 71 பி, கருணைபுரம் வாழைச்சேனை என்ற முகவரியில் வசிக்கும் 28 வயதான கோபாலகிருஷ்ணப்பிள்ளை நந்தினி, கடந்த 2015.09.12 அன்று கட்டார் நாட்டுக்கு வீட்டுப்பணிப் பெண்ணாக சென்றிருந்தார். மூன்று வருடங்கள் கடந்த நிலையில் 13.09.2018 அன்று தாயகம் திரும்பியபோதே காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கணவர் சிவநாதன் சிவரூபன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஒக். 04 16:47

ஸ்டெர்லைட் ஆலை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!

(சென்னை, தமிழ்நாடு) ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாட்டை, தமிழ்நாடு அரசு 28.05.2018 அன்று முடக்கியதன் தொடர்ச்சியாக, வேதாந்தா குழுமம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்து நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவை ரத்து செய்து விட்டு, பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், ஒக்டோபர் 5, 6 நாட்களில் சென்னையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளதையும் சுட்டிக்காட்டி, தூத்துக்குடியில் இருந்து 600 கி.மீ கடந்து சென்னையில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளதையும் எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தினர் முறையிட்டுள்ளனர்.
ஒக். 04 09:40

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் அச்சத்துடன் வீதியைக் கடக்கும் மக்கள்- யாரும் கவனிக்கவில்லையென விசனம்

(கிளிநொச்சி, ஈழம்) இன அழிப்புப் போர் என்று ஈழத்தமிழர்களால் வர்ணிக்கப்படுகின்ற போர் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த பின்னர் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியதைத் தொடர்ந்து வடபகுதிக்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சிக்கான புகையிரத சேவை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு போக்குவரத்து இடம்பெற்றுவருகின்ற போதிலும் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் இதுவரை அமைக்கப்படவில்லை. குறிப்பாக ஆனந்தபுரம் கிராமத்தையும் கிளிநொச்சி நகர்ப்பகுதியையும் இணைக்கும் புகையிரதக் கடவை புனித திரேசா பெண்கள் கல்லூரிக்குச் செல்லும் புகையிரதக் கடவை உட்பட பல முக்கிய கடவைகள் பாதுகாப்பற்றவையாக காணப்படுகின்றன.