கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
ஜூன் 06 08:02

ஒட்டுமொத்த உறவை ஒருமித்த குரலில் உருவாக்க முடியாத தமிழ்த் தேசியக் கட்சிகள் 21 பற்றிக் கூடி ஆராய்வதில் பயனில்லை

(கிளிநொச்சி, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றபோது, அமைதிகாத்த ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சரவைக்குள் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இலங்கைக்கு நிதி வழங்க வேண்டுமானால், அரசியல் ஸ்திரத் தன்மையும், (Political Stability) உறுதியான பொருளாதாரத் திட்டங்களை (Economic mechanism) முன்மொழிய வேண்டுமென உலக வங்கி, சர்வதே நாணய நிதியம் உள்ளிட்ட நிதி வழங்கும் நிறுவனங்கள் கடும் அழுத்தங்கள் கொடுத்து வரும் நிலையில், மீண்டும் அரசியல் குழப்பங்களை உருவாக்கும் அரசியல் கைங்கரியங்கள் ஆரம்பித்துவிட்டன போலும். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நியமன விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டுள்ளார்.
மே 19 09:56

மாநில அரசுகளுக்குரிய நிர்வாக அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்த தமிழக ஆளுநர் - வெளிப்படுத்திய பேரறிவாளனின் விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை வழங்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பேரறிவாளன் முப்பத்தியொரு ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடுதலையின் மூலம் மத்திய - மாநில அரசுகளின் சட்ட அதிகாரத்தை புதுடில்லி ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக மாநில ஆளுநர் ஒருவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது வெளிப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ் நாட்டு மாநில அரசுக்கே உண்டு என்று இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதோடு, தமிழ்நாட்டு ஆளுநரின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் பற்றியும் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
மே 16 13:45

இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறுமனே போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருவது மாத்திரமல்ல. முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டத்திலும் அதற்கு அடுத்த முப்பது வருடகால போரிலும் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களின் தியாகத்திலும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வதேச ஏற்பாடாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அமைதல் வேண்டும். சுனாமி பேரலையில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருதல் என்பது பொது நிகழ்வு. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கானது. தமிழ் இன அழிப்புப் பற்றிய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ஒருமித்த குரலாக முன்வைக்க வேண்டிய கூட்டு நினைவேந்தலாகும்.
ஏப். 07 14:41

'கோட்டா வீட்டுக்குப் போ' என்பதல்ல, மகாவம்ச மன நிலையில் இருந்து சிங்கள மக்கள் விடுபட வேண்டும்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுகளினால் சிங்கள மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் என்று கூறினாலும், மகாவம்ச மனநிலையில் இருந்து அவர்கள் முற்றுமுழுதாக விடுபட்டால் மாத்திரமே, உண்மையான மாற்றத்தைக் காண முடியும். போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள மக்கள் ஒவ்வொருவரும் கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனக் (GoHomeGota) கோசமிடுகின்றனர். ஆனால் கோட்டாபய வீட்டுக்குச் சென்றுவிட்டால் மாத்திரம் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது. ஏனெனில் 1947 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைத்தீவில் வகுக்கப்பட்ட அரசியல், பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் சிங்களத் தேசியவாதத்தைக் கருவாகக் கொண்டிருந்தமையே பிரதான காரணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
மார்ச் 29 09:07

தமிழ்த் தரப்புகள் தமக்குள் இணைந்தே இந்தியாவையும் மேற்கையும் கையாளவேண்டும்

(யாழ்ப்பாணம், ஈழம்) பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த வருடம் யூன் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை இலங்கை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக உருவாக்கிய வலைப்பின்னல் தற்போது பட்டவர்த்தனமாகியுள்ளது. இச் சூழலில் தமிழர் தரப்புக்குள், இந்தியாவையும் மேற்கையும் நோக்கி இணைந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். சுமந்திரன்-செல்வம் பிளவு மட்டுமல்ல, ஜெனீவாவை நோக்கி முன்வைக்கப்பட்ட இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை பற்றிய கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்படவில்லை. அதைப் போல, ஒற்றையாட்சி நிராகரிப்பு இன்றி, 13 ஆம் திருத்தம் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தவறு நடந்துள்ளது. இந்தத் தவறுகள் உடனடியாகத் திருத்தப்படவேண்டும்.
பெப். 12 13:28

வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கப் பிரேரணை சமர்ப்பித்துப் பரீட்சிக்கலாமே!

(முல்லைத்தீவு) நாடாளுமன்ற நடைமுறை விதிமுறைகள் (Practical Terms) மற்றும் அங்கு நடைபெறவுள்ள அல்லது நடைபெற்ற விவாதங்களின் முக்கியமற்ற தன்மை அல்லது பிரதானப்படுத்தக்கூடிய விவாதங்கள் (Highlighted Debates) எது என்பதை நாடாளுமன்றச் செய்தியாளர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் நாடாளுமன்ற விவாதங்களில் பேசும், அல்லது பிரேரணை, சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையைச் சமர்ப்பித்து விவாதங்களை நடத்தும் தமிழ்ப் பிரதிநிதிகள், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றம் (Sri Lankan Unitary state parliament) என்பதை ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மற்றும் போரினால் உருவான பக்க விளைவுகளுக்குரிய அத்தனை தீர்வுகளையும் பேசிப் பெற்றுவிடாலமென்ற தோற்றப்பாட்டைக் காண்பிக்கின்றனர்.
ஜன. 31 21:53

கிட்டு பூங்கா எழுச்சியும் பொத்துவில்-தொடக்கம்-பொலிகண்டி எழுச்சியின் பின்தளச் சிக்கலும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கிய பாதையில் பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கோருவதற்கு எதிரான பேரணி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் பெரும் முயற்சியோடும் மக்கள் அணிதிரட்டலோடும் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தடம்புரண்டுபோயுள்ள அரசியல்வாதிகள் பலருக்கும் இந்தப் பெருந்திரள் வயிற்றுக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இது கஜேந்திரகுமார் அணியின் தேர்தற் போட்டிக்கான அரசியல் என்பது அவரின் பேச்சில் வெளிப்பட்ட மறுப்புக்கும் அப்பாற்பட்ட உண்மை. ஆனால், அதற்கும் அப்பால் கிட்டு பூங்கா மக்கள் எழுச்சியின் தாற்ப்பரியம் ஆழமானது. அது சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டியது.
டிச. 22 20:23

மண் கவ்வியது ரெலோ, புளொட், ஈபிஆரெலெவ்வின் பதின்மூன்றாம் திருத்தக்கோரிக்கை

பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதையே பிரதான கோரிக்கையாக முன்வைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் விடுதி விடுதியாய்க் களம் புகுந்த ரெலோ அணியோடு சேர்ந்து களமாடிய புளொட், ஈபிஆரெலெவ் நிலைப்பாடு சம்பந்தன், சுமந்திரன் தலைமையிலான அணியினரால் சாதுரியமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நகர்வு புதனன்று நடந்தேறியுள்ளது. தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தான் அணிந்துகொண்ட சிறிய கச்சைத்துண்டையும் கழற்றியெறிந்த ரெலோவினை மேவி, முழுமையான கச்சையணிந்த சுமந்திரன் அணி களம் இறங்கியுள்ளது. விக்னேஸ்வரன் தனது நிலைப்பாடு இரண்டுக்கும் இடையானது என்று பெருமைப்படக்கூடிய அவலமும் நடந்தேறுகிறது. தமது தோல்வியால் திம்புக் கோட்பாட்டைச் சிதைத்த அவப்பெயரை ரெலோ அணியினர் சிறுமையோடு தழுவிக்கொள்கிறார்கள்.
டிச. 19 13:47

தமிழ்த் தேசியத்தை நீர்த்துப்போகச் செய்ய நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில் சுமந்திரன்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம். தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு' என்ற பாதையூடாகத் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவிடலாம் என்ற ஏமாற்று வித்தையாக அவர் உருவாக்கிய ஆபத்தான இணக்க அரசியலின் பிடிக்குள்ளேயே சுமந்திரன் அணி இன்று ஆழமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. 1985 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த தமிழரசுக்கட்சியினர் திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், அவர்களை விடவும் மீளமுடியாத தாழ்ந்த நிலைக்கு கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் போயுள்ளன.
செப். 14 14:21

பச்சலெற் கோட்டபாயாவைக் குறிப்பெடுத்து பீரிஸை ஆமோதிக்கிறார்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றிய விபரங்கள் எதனையும் குறிப்பெடுக்காமல் (note), பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நாவுடன் இணைந்து நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வோமெனக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய உறுதிமொழியைக் குறிப்பெடுப்பதாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்சலெற் கூறியுள்ளார்.