(யாழ்ப்பாணம், ஈழம் )
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை இலங்கையிலேயே கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக பூகோள இலங்கையர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சியாமேந்திரா விக்கிரமாராட்சி, இலங்கைக்கு ஆபத்து வரக்கூடிய அந்தப் பிரேரணையை சிங்கள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனக் கோரினார். இலங்கை இராணுவத்தை உள்ளநாட்டில் விசாரணை செய்யலாம் என்றவொரு அத்தியாயம் ஜெனீவா பிரேரணையில் உள்ளது. பிரித்தானிய அரசு அந்த அத்தியாயத்தை பிரதானப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.