கட்டுரை: நிரல்
மார்ச் 14 10:29

இன ஒடுக்கலை மூடிமறைக்கும் மேற்குலக ஜனநாயகம்

(யாழ்ப்பாணம், ஈழம்) அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதாவது அமெரிக்கச் சார்பு நாடுகள் கூறுகின்ற ஜனநாயகம் என்ற கோட்பாட்டுக்குள் ரசியா இல்லை என்ற கருத்தியலின்படியே, உக்ரெயன் மீது ரசியா நடத்தும் போரைச் சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆனால் ரசியாவில் தற்போது கம்யூனிசச் சாயல் மாத்திரமே உண்டு. ரசியாவும் ஒரு வகையான முதலாளித்துவமுறை (Capitalism) கொண்ட பேரரசுதான். ஜனநாயகக் கட்டமைப்பு இருப்பது போன்றதொரு தோற்றப்பாடுகளும் ரசியாவில் உள்ளன. ஆனால் ரசிய- சீன உறவு கம்யூனிச அடிப்படையிலானதல்ல. அமெரிக்கச் சார்பு நாடுகளை எதிர்க்கும் மையம் கொண்ட இராணுவ அரசியல் அது. பொருளாதாரப் பிணைப்புகளும் இந்த இரு நாடுகளிடம் உண்டு.
மார்ச் 06 13:32

அமெரிக்க- இந்தியக் கூட்டு நிகழ்ச்சி நிரல் ஜெனீவாவில் அம்பலம்

(முல்லைத்தீவு) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை பாதுகாக்கும் இரண்டு முக்கியமான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஓன்று இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சிக்கு ஆணையாளர் மிச்செல் பச்லெட் எதிர்பார்ப்புடன் கூடிய பாராட்டை வெளியிட்டுள்ளமை. அதாவது புதிய யாப்புக்கான நகல் வரைபு வெளிவர முன்னரே ஆணையாளர் பாராட்டியிருக்கிறார். இரண்டாவது, தமிழ் மக்களிற்குப் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டுமென ஜெனீவாவுக்கான இந்தியப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கூறியமை.
பெப். 28 11:22

போலியான கனடா விசா- ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் இளைஞர்கள்

(மன்னார், ஈழம்) கனடாவுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா விசாவில் செல்ல முடியுமெனக் கூறிய கும்பல் ஒன்றிடம் தமிழ் இளைஞர்கள் பலர் ஏமாந்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். மேலும் பல இளைஞர்கள் ஏமாற்றமடையும் ஆபத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. கொழும்பு கொள்பிட்டி கீதாஞ்சலி பிளேஸில் உள்ள கனடா விசாவுக்கு விண்ணப்பிக்கும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்திற்கு (Accredited Private Company) நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைக் கையளித்த பின்னரே இந்த ஏமாற்று வேலை இடம்பெறுகின்றது. இந்த ஏமாற்று நடவடிக்கைகளில் கனடா விசாவுக்கு விண்ணப்பிக்கும் அங்கீகாரம் பெற்ற குறித்த தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பிருப்பதாகவும் பாதிக்கப்படட இளைஞர்கள் சந்தேகிக்கின்றனர்.
பெப். 20 00:19

மூன்றாவது புதிய யாப்புக்கான நகல் வரைபில் 13 இல்லை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் மூன்றாவது புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு பதிலாக மாவட்ட சபை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச மாதம் புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 1987 இல் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனப் புதுடில்லி 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரானதொரு சூழலில் இலங்கையிடம் அவ்வப்போது கூறி வருகின்றது.
பெப். 14 10:49

தமிழர்களிடம் எதிரான கருத்து நிலை உருவாகாமல் அடக்கி வாசிக்கும் புதுடில்லி

(மட்டக்களப்பு, ஈழம்) புவிசார் அரசியல், பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையை மையப்படுத்தி இந்தியா வகுக்கும் வியூகம், அமெரிக்கா, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் பின்னணியோடு வெளிப்பட்டு வருகின்றது என்பதை இலங்கையின் சமீபத்திய நகர்வும் அதன் மீதான நம்பிக்கைகளும் கோடிகாட்டுகின்றன. நிதி மாத்திரமே இலங்கையின் குறிக்கோள் என்பது வல்லாதிக்க நாடுகளின் பிரதான அவதானிப்பு. அத்துடன் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படை நிலைப்பாட்டோடுதான், இலங்கை கன கச்சிதமாகச் செயற்பட்டு வருகின்றது என்பதையும் இந்த வல்லாதிக்க நாடுகள் நன்கு அறிந்திருக்கின்றன.
பெப். 12 13:28

வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கப் பிரேரணை சமர்ப்பித்துப் பரீட்சிக்கலாமே!

(முல்லைத்தீவு) நாடாளுமன்ற நடைமுறை விதிமுறைகள் (Practical Terms) மற்றும் அங்கு நடைபெறவுள்ள அல்லது நடைபெற்ற விவாதங்களின் முக்கியமற்ற தன்மை அல்லது பிரதானப்படுத்தக்கூடிய விவாதங்கள் (Highlighted Debates) எது என்பதை நாடாளுமன்றச் செய்தியாளர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் நாடாளுமன்ற விவாதங்களில் பேசும், அல்லது பிரேரணை, சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையைச் சமர்ப்பித்து விவாதங்களை நடத்தும் தமிழ்ப் பிரதிநிதிகள், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றம் (Sri Lankan Unitary state parliament) என்பதை ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மற்றும் போரினால் உருவான பக்க விளைவுகளுக்குரிய அத்தனை தீர்வுகளையும் பேசிப் பெற்றுவிடாலமென்ற தோற்றப்பாட்டைக் காண்பிக்கின்றனர்.
பெப். 10 09:14

ராஜபக்ச அரசாங்கத்துக்கு மார்ச் மாதம் வாய்ப்பா, சவாலா?

(முல்லைத்தீவு) இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் புதுடில்லிக்குச் சென்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட பலரைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சி (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் ஜனாதிபதி, பிரதமர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
பெப். 06 22:50

கிட்டு பூங்கா பிரகடனத்தோடும் 13 ஐ கோரும் கடிதத்துடனும் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மௌனம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பிய தமிழ்த் தேசியக் கட்சிகளும், அதற்கு எதிராகவும் கண்டித்தும் பேரணி நடத்தி யாழ் கிட்டு பூங்காவில் பிரகடனம் நிறைவேற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமைதியாக இருக்கும் நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையைக் கையாளும் உத்திகளை இலங்கை மிக நுட்பமாக மேற்கொண்டு வருகின்றது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி சென்றடைந்த அமைச்சர் பீரிஸை இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் அரிந்தம் பாக்சி வரவேற்றார்.
பெப். 02 08:04

இலங்கை ஒற்றையாட்சியை பலப்படுத்த அமெரிக்க- இந்திய அரசுகள் முயற்சி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்றபடுத்தப்பட வேண்டுமானால் அமெரிக்க- இந்திய அரசுகளும் அதனோடு இணைந்த உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் கூட்டுச்சேர்ந்தே முன்னர் செயற்பட்டிருந்தன. இருந்தாலும் 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை உருவாக்கி அதனால் ஏற்பட்ட தோல்வியின் பின்னரான சூழலில், ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதானால், வேறு வழிமுறைகளைக் கையாளும் உத்திகள் குறித்து மேற்கத்தைய நாடுகள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனபோல் தெரிகின்றது. சிங்கள மக்களும் சிங்கள ஆட்சியாளர்களும் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்தித் தமது புவிசார் நலன்களைப் பெறுவதிலும் அமெரிக்க- இந்திய அரசுகள் கவனம் செலுத்துகின்றன. இதுவே இலங்கை விவகாரம் குறித்த தற்போதைய சர்வதேச அரசியல் வியூகமாகவுள்ளது.
ஜன. 31 21:53

கிட்டு பூங்கா எழுச்சியும் பொத்துவில்-தொடக்கம்-பொலிகண்டி எழுச்சியின் பின்தளச் சிக்கலும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கிய பாதையில் பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கோருவதற்கு எதிரான பேரணி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் பெரும் முயற்சியோடும் மக்கள் அணிதிரட்டலோடும் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தடம்புரண்டுபோயுள்ள அரசியல்வாதிகள் பலருக்கும் இந்தப் பெருந்திரள் வயிற்றுக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இது கஜேந்திரகுமார் அணியின் தேர்தற் போட்டிக்கான அரசியல் என்பது அவரின் பேச்சில் வெளிப்பட்ட மறுப்புக்கும் அப்பாற்பட்ட உண்மை. ஆனால், அதற்கும் அப்பால் கிட்டு பூங்கா மக்கள் எழுச்சியின் தாற்ப்பரியம் ஆழமானது. அது சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டியது.