செய்தி: நிரல்
ஓகஸ்ட் 02 10:15

சஜித் பிரேமதாச மைத்திரியுடன் இணையும் சாத்தியம்!

(வவுனியா, ஈழம்) இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அதிகரித்துள்ளதால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே குழப்பங்கள், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி ஏனைய சிறிய பத்துக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கத் தயாராகவுள்ளது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு ஆதரவான கட்சிகளை இணைத்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
ஓகஸ்ட் 01 23:38

பௌத்தமயமாக்கப்படுகின்றது தமிழர் தாயகம் - தடுத்து நிறுத்தாவிட்டால் நல்லூரிலும் விகாரை- ரவிகரன் எச்சரிக்கை

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்கள் உட்பட மக்களது பூர்வீக நிலங்களும் இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களால் சூறையாடப்பட்டுவரும் நிலையில், இந்த நிலை இவ்வாறு தொடருமாக இருந்தால் தமிழர்களின் கலாசார நகரமான யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெகு விரைவில் விகாரை அமைக்கப்படும் நிலை உருவாகும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 01 23:37

மைத்திரியால் பதவி உயர்வு பெற்ற இராணுவ அதிகாரியின் வழக்கு - சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் - நாவற்குழியில் 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் 24 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அந்த 24 பேரில் மூன்று இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான குமாரவடிவேல் குருபரன், எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் படம் எடுத்துள்ளனர். இரகசியமாகப் புகைப்படம் எடுத்தவர்களை குருபரன் அடையாளம் க்ண்டுள்ளார்.
ஓகஸ்ட் 01 23:08

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான ஊடகவியலாளர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது படுகொலைகளுக்கான நீதி இதுவரை நிலைநாட்டப்படாத நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்கள் நினைவுத் தூபியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின்போது நினைவு தூபிக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜூலை 31 06:36

பௌத்த சிங்கள மக்கள் இல்லாத கிளிநொச்சி - இரணைமடுவில் சிங்கள தற்காப்புக்கலைக் கிராமம் உருவாக்கம்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் இலங்கை இராணுவம் முனைப்பாக செயற்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயகத்தின் மையப்பகுதியான கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினால் சிங்கள தற்காப்புக் கலை கிராமம் உருவாக்கப்பட்டு கடந்த வாரம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பௌத்த பிக்குவின் ஆசீர்வாதத்துடன் இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தின் அருகில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூலை 30 23:10

புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் கிராமசேவகரை இடமாற்றுமாறு மக்கள் வலியுறுத்தல்

(முல்லைத்தீவு, ஈழம்) போரினால் பெருமளவு அழிவுகளைச் சந்தித்த முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமசேவகரை அங்கிருந்து இடமாற்றுமாறு வலியுறுத்தி கிராம மக்கள் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டு கட்டம் கட்டமாக தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிவரும் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை எனவும் கிராம அலுவலர் மீதான குற்றச்சாட்டுக்களையும் சுட்டிக்காட்டி சுதந்திரபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் தமது கோரிக்கை மனுவைக் கையளித்துள்ளதாக முல்லைத்தீவு செய்தியாளர் கூர்மை செய்தித்தளத்திற்கு குறிப்பிட்டார்.
ஜூலை 30 20:44

தமிழ் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தலில் மாத்திரமே அக்கறை

(கிளிநொச்சி. ஈழம்) வடக்கு - கிழக்கு தாயகப் பகுதிகளிலும் கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசங்களிலும் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பதினொரு மணியளவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவரும் நிலையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உறவினர்கள் தமது மனக்குமுறல்களை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் மீது குற்றம் சுமத்தினர். தமக்கு நீதி மாத்திரமே வேண்டுமெனக் கோசம் எழுப்பினர்.
ஜூலை 29 23:13

கொழும்பு நிர்வாகத்தின் தலையீடுகளைத் தவிர்க்குமாறு தீர்மானம்

(கிளிநொச்சி. ஈழம்) வடமாகாண அரச அதிகாரிகள் மத்தியில் கொழும்பு நிர்வாகம் மேற்கொண்டு வரும் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டுமெனக் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட வடமாகாண அரச அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூலை 29 12:48

காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்க முடியாது - சர்வதேச நீதிக்கு வலியுறுத்தல்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் நடத்தப்பட்ட தமிழின அழிப்புப் போரின் போதும் அதற்குப் பின்னரான காலங்களிலும் அப்போதிருந்த சிங்கள அரச தலைவர்களின் உத்தரவுக்கு அமைவாக இலங்கை இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களில் 38 பேர் தமது போராட்டத்துக்கு எந்தவித அடிப்படைத் தீர்வுகளையும் காணாமலேயே உயிரிழந்துள்ளதாக, தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் உணவுத்தவிர்ப்புடன் கூடிய தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.
ஜூலை 28 10:21

மணலாறில் 1036 ஏக்கர் சுவீகரிப்பு - விவசாய நிலங்களை சரணாலயமாக மாற்றும் வனஜீவராசிகள் திணைக்களம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை பௌதீக ரீதியாக இணைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டிருந்த தமிழ் விவசாயிகள், மீண்டும் 2012 ஆம் ஆண்டு தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பி வந்திருந்தபோது, விவசாயம் செய்யக்கூடிய தமது தாழ்நிலப் பகுதிகளை சிங்களக் குடியேற்றவாசிகளிடம் இழந்ததுடன் அதற்கு நீர்ப்பாசனம் செய்யும் நீரேரிகளையும் இழந்துள்ளனர்.