நிரல்
மே 19 21:09

வடக்குக்- கிழக்கு மாகாணங்களை இணைக்க சர்வதேச நீதிமன்றத்தை ஏன் நாட முடியாது?

(யாழ்ப்பாணம் ) இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகள் முறை உருவாக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இலங்கையில் எட்டு மாகாண சபைகள் அன்று உருவாக்கப்பட்டிருந்தன. 1987ஆம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்த மாகாண சபை முறை உருவானது என்பது வரலாறு. ஆனால் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வாக அன்று இந்த மாகாண சபைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவ்வாறானதொரு சூலிலேதான் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச, ஜே.வி.பியைத் தூண்டிவிட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்வித்திருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை. (போரை நடத்த ஜே.வி.பி அப்போது மகிந்த ராஜபக்சுவுக்குப் பக்கபலமாக இருந்தது)
மே 18 23:41

இனப்படுகொலைக்கு நீதிகோரி முள்ளிவாய்காலில் மக்கள் ஒன்று கூடல்

(முல்லைத்தீவு, ஈழம் ) ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் செய்யப்பட்டமைக்கான நீதி பதினொரு ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் கிடைக்கவில்லையென முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மக்கள் கவலை வெளியிட்டனர். சர்வதேசம் நீதயைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் இலங்கை இராணுவம் கடுஐமயான தடையுத்தரவுகளைப் பிறப்பித்திருந்தும் மக்கள் துணிவோடு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப சமூக இடைவெளிகளைப் பின்பற்றி மக்கள் பங்கெடுத்தனர்;. துமிழ்த் தரப்பு அரசியல் பிரதிநிதிகள் பலர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிடாமல் தடுக்கப்பட்டனர்.
மே 17 22:37

சர்வதேச நீதிகோரி முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

(வவுனியா, ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளான நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை அனுஷ;டிக்கப்படவுள்ளது. நாளை பதினொராவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஒன்று கூடி நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கொள்வர். தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகோரி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென மக்கள் கடந்த நிகழ்வின் போது பிரகடணம் செய்திருந்தனர். வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தின் சுயாட்சிக்கும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்த ஆண்டு நிகழ்விலும் பொதுமக்கள் அவ்வாறு கோரிக்கை விடுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
மே 15 22:42

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எப்படி?

(யாழ்ப்பாணம், ஈழம்) சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம் ஆண்டுகளில் நான் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ரெலோ இயக்க முதல்வர் சிறிகாந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன். ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோரை நேர்காணல் செய்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எழுதினேன். அதே காலப்பகுதியில் தினக்குரல் பத்திரிகையில் ரவிவர்மன் என்ற செய்தியாளர் இவர்களைத் தொடர்ச்சியாகப் பேட்டி கண்டு எழுதினார். விடுதலைப் புலிகளை விமர்சிப்பதைவிட சந்திரிகா ஆட்சியின் ஏமாற்றுக்களையே இவர்கள் தமது நேர்காணல்களில் கூடுதலாகக் குறிப்பிட்டிருந்தனர்.
மே 14 23:12

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் அமைச்சின் செயலாளர்களாக நியமனம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவ அதிகாரிகள் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சிவில் நடவடிக்கைகளில் தலையிடுவதாகப் பலவேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் பதவிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எதனையுமே எடுக்கவில்லை எனவும் மாநாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் கூடச் சிங்களவா்களாக நியமிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில் கொழும்பில் அமைசின் செயலாளர்களாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக பிரதான எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஆனால் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இராணுவத்தினர் சிவில் சேவைச் செயற்பாடுகளில் தலையிடுகின்றமை தொடர்பாகச் சிங்கள எதிர்க்கட்சிகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை
மே 12 23:16

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இழுபறி நிலை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் யூன் மாதம் நடத்த முடியாத அளவுக்குச் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்தி தனது கட்சியின் சார்பில் கூடுதல் ஆசனங்களைப் பெற முடியும் என்ற நோக்கில் ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச முற்படுவதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக தற்போதைக்கு எதுவுமே கூற முடியாதென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மே 11 19:49

இலங்கை நீதித்துறையை விமர்சிக்க முடியுமா?

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீத்துறையை விமர்சிக்க ஊடக ஒழுக்க விதிகளில் இடமில்லை எனவும் இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஊடகங்களில் நீதித்துறையை விமர்சித்தால் அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்கள் பலர் கருதுகின்றனர். ஆனால் நீதித்துறையை விமர்சிக்க முடியும். எந்த அடிப்படையில் என்றால்...? ஈழத் தமிழர் அரசியல் வாழ்வுரிமைகளோடு கூடிய நியாப்பாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதும்போது, இலங்கை நீதித்துறையை விமர்சிக்கவும், குற்றம் சாட்டவும் முடியும். நீத்துறையின் நம்பகத் தன்மை குறித்த விடயங்களையும் கேள்விக்கு உட்படுத்த முடியும்.
மே 09 23:05

இராணுவத்தினர் பொலிஸார் பிரதேச மக்கள் மீது தாக்குதல்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளான மே மாதம் 18 ஆம் திகதி பதினொரு ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் பொது மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாகர் கோயில், யாழ் சண்டிலிப்பாய், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் பொது மக்கள் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ். நாகர்கோயில் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ஆனால் பிரதேச மக்கள் ஒன்று திரண்டதயைடுத்து தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
மே 08 23:31

கட்டுப்பாடுகளோடு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கும்

(வவுனியா, ஈழம்) தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படாதென இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னி ஆராச்சி கூறியுள்ளார். ஆனால் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறிப்பிட்ட சில மணிரேநம் செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில், இன்னும் சில வாரங்கள் முடக்க நிலையைத் தொடார வேண்டுமென இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதனடிப்படையிலேயே திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டத்தைத் தளத்த்த முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 06 21:01

வடமாகாணத்தில் இலங்கை இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அதிகரிப்பு

(வவுனியா, ஈழம்) யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வரும் வரையும் இலங்கை இராணுவத்தின் இறுக்காமான சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்குவதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளார். வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் போர்க்கால நிலைமை போன்று இராணுவம் செயற்படுவதாகவும் சிறிதரன் குற்றம் சுமத்தியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவை கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்தில் சென்ற திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருந்தது. இதன்போதே சிறிதரன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.