நிரல்
ஏப். 07 14:41

'கோட்டா வீட்டுக்குப் போ' என்பதல்ல, மகாவம்ச மன நிலையில் இருந்து சிங்கள மக்கள் விடுபட வேண்டும்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுகளினால் சிங்கள மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் என்று கூறினாலும், மகாவம்ச மனநிலையில் இருந்து அவர்கள் முற்றுமுழுதாக விடுபட்டால் மாத்திரமே, உண்மையான மாற்றத்தைக் காண முடியும். போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள மக்கள் ஒவ்வொருவரும் கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனக் (GoHomeGota) கோசமிடுகின்றனர். ஆனால் கோட்டாபய வீட்டுக்குச் சென்றுவிட்டால் மாத்திரம் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது. ஏனெனில் 1947 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைத்தீவில் வகுக்கப்பட்ட அரசியல், பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் சிங்களத் தேசியவாதத்தைக் கருவாகக் கொண்டிருந்தமையே பிரதான காரணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏப். 06 21:23

ஹர்சா டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கவும்

(வவுனியா, ஈழம்) ஹர்சா டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்துத் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமென பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
மார்ச் 29 09:07

தமிழ்த் தரப்புகள் தமக்குள் இணைந்தே இந்தியாவையும் மேற்கையும் கையாளவேண்டும்

(யாழ்ப்பாணம், ஈழம்) பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த வருடம் யூன் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை இலங்கை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக உருவாக்கிய வலைப்பின்னல் தற்போது பட்டவர்த்தனமாகியுள்ளது. இச் சூழலில் தமிழர் தரப்புக்குள், இந்தியாவையும் மேற்கையும் நோக்கி இணைந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். சுமந்திரன்-செல்வம் பிளவு மட்டுமல்ல, ஜெனீவாவை நோக்கி முன்வைக்கப்பட்ட இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை பற்றிய கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்படவில்லை. அதைப் போல, ஒற்றையாட்சி நிராகரிப்பு இன்றி, 13 ஆம் திருத்தம் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தவறு நடந்துள்ளது. இந்தத் தவறுகள் உடனடியாகத் திருத்தப்படவேண்டும்.
மார்ச் 26 20:57

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்னும் அமுலில் இருக்கிறதா? பதிலளிப்பாரா ஜெய்சங்கர்?

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்திய- இலங்கை ஒப்பந்தம் இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றதா இல்லையா என்பதை கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பகிரங்கமாகக் கூற வேண்மெனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின் பிரகாரமே இந்தியா இலங்கையோடு அனைத்து நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றதோ என்றொரு உணர்வு ஈழத்தமிழர்களிடம் உண்டு. தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் கையளிப்பது குறித்து இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணெய்குதங்களை மேலும் ஐம்பது வருடங்களுக்கு இந்தியாவிடம் கையளிப்பதற்காக இந்த வருடம் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மார்ச் 26 15:03

பிரித்தானிய தூதுக்குழுவின் டில்லிப் பயணத்தைத் தடுத்தது இந்தியா

(வவுனியா, ஈழம்) பிரித்தானிய நாடாளுமன்ற சபாநாயகர் சேர் லின்டசி கோய்லி (Sir Lindsay Hoyle) தலைமையிலான பத்துப்பேர் கொண்ட பிரித்தானிய இராஜதந்திரிகள் குழு புதுடில்லிக்கும், இராஜஸ்தான் மாநிலத்திற்கும் மேற்கொள்ளவிருந்த பயணம் இறுதிநேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தாணிகராலயம் ஆட்சேபனை வெளியிட்டதால் இச் சுற்றுப்பயணம் ரத்துச் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் மற்றும் அவரது துணைத் தலைவர் தலைமையில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
மார்ச் 25 19:55

அமெரிக்கக் கப்பல்களும் இராணுவ அதிகாரிகளும் இலங்கைக்குத் தொடர்ந்தும் வருவர்- கொழும்பு இணங்கியது

(வவுனியா, ஈழம்) அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்தியாவின் வலுவான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் பங்காளிகளாக இருக்கத் தயாராகவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நியுலாண்ட் புதுடில்லியில் இந்தியன் எக்பிரஸ் (indianexpress) ஆங்கில ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். ரசியாவின் பாதுகாப்புத் தளபாடங்களைச் சார்ந்திருப்பதில் இருந்து இந்தியா விலக, அமெரிக்கா உதவ முடியும் என்று அவர் கூறினார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை புதுடில்லியில் இவ்வாரம் செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடிய பின்னர் வழங்கிய நேர்கணாலிலேயே விக்டோரியா நியுலாண்ட் இவ்வாறு கூறியிருக்கிறார்.
மார்ச் 24 21:02

தமிழகம் சென்ற குடும்பங்களின் மன்னாரில் உள்ள உறவினர்களிடம் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு தமிழ் குடும்பங்கள் இலங்கையில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான பொருளாதாரக் கஷ்டங்களால் அகதிகளாக தமிழகம் சென்றடைந்தனர். இந்த நிலையில் தமிழகம் சென்ற இளம் குடும்ப பெண் ஒருவரின் மன்னாரில் உள்ள தாய் உட்பட குடும்ப உறுப்பினர்கள் சிலர் கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும், இலங்கை புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது-
மார்ச் 23 22:18

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், கூட்டமைப்பு கோட்டா சந்திப்புக்குப் பாராட்டு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளதை பாராட்டியுள்ள, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நியுலாண்ட் (Victoria Nuland), புலம்பெயர்ந்துள்ள மக்களோடும் கோட்டாபய ராஜபக்ச சந்தித்து உரையாட வேண்டுமெனக் கேட்டுள்ளார். கொழும்புக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் விக்டோரியா நியுலாண்ட், இன்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
மார்ச் 22 20:59

உக்ரெய்ன் போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் புவிசார் அரசியலும், ரசியா-சீனா தொடர்பான இந்திய வில்லங்கமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) 1980களில் பனிப்போர் காலத்தில் இந்தியா எப்படி ரசியாவுடன் மறைமுகப் புரிந்துணர்வைப் பேணியதோ, அதேபோன்று விரும்பியோ விரும்பாமலோ ரசியாவுடனும் ரசியா ஊடாகச் சீனாவுடனும் இராஜந்திர உறவைப் பேண வேண்டிய நிலையை இந்தியாவுக்கு உக்ரெயன் போர் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இலங்கை அமெரிக்காவின் பக்கம் செல்லும் நிலையும் ஏற்படலாம். ஆகவே ஈழத்தமிழர்கள் தமது அதி உச்சக் கோரிக்கையை இந்தியாவிடம் கூட்டாக முன்வைக்க வேண்டியதொரு காலகட்டத்தையே உக்ரெயன் போரக்குப் பின்னரான சூழல் உருவாக்கியுள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும். எந்தவிதமான ஐயத்துக்கும் இடமின்றித் தமது கோரிக்கைகளைத் தெளிவாக முன்வைக்க வேண்டிய பொறுப்பை கருத்துருவாக்கிகள், சிவில் சமூக அமைப்புகள் விரைந்து கையாளவேண்டும்.
மார்ச் 22 09:26

அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீதியில் வழிமறித்து மக்கள் தர்க்கம்

(வவுனியா, ஈழம்) அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள், உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் வெவ்வேறுபட்ட விலைகளில் அதிகரித்துச் செல்வதால், ஆத்திரமடைந்த மக்கள் வீதியில் செல்லும் அமைச்சர்கள், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிமறித்துத் தர்க்கப்படுகின்றனர். கேகாலை, கன்டி, அம்பந்தோட்டை, போன்ற பல மாவட்டங்களிலும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் வரிசையில் நாட்கணக்கில் காத்திருக்கும் மக்களே வீதியால் செல்லும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தர்க்கப்பட்டு அவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.