நிரல்
ஓகஸ்ட் 28 23:43

பௌத்த குருமாரை விசாரனை செய்ய விசேட நீ்திமன்றம்- ராமாஞ்ஞ மகா பீடம் இலங்கை ஜனாதிபதிடம் கோரிக்கை

(வவுனியா, ஈழம் ) இலங்கையில் பௌத்த குருமார் சம்மந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி ராமாஞ்ஞ மகா பீடத்தினால் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் மகஜர் கையளிகப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றதால் அங்கீரிக்கப்பட்ட சட்ட மூலம் ஒன்றின் ஊடகவே பொளத்த குருமாரை விசாரிப்பதற்கான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் ராமாஞ்ஞ மகா பீடம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சுமார் இருநாறுக்கும் அதிகமான பௌத்த பிக்குமாரின் பேரணி, கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது. அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த கோமல்பேர சோபித தேரர் தலைமையிலான குழுவினர் மகஜரை நேரடியாகவே கையளித்தனர்.
ஓகஸ்ட் 28 15:20

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றத்தைக் கண்டித்துப் பேரணி- மகாவலி நீர் தேவையில்லையெக் கூறி மக்கள் கோஷம்

வடக்கு- கிழக்குத் தமிழர் தாயக நிலத்தை பிரிக்கும் நோக்கில் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியும் கண்டனக் கூட்டமும் நடைபெற்றது. மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்டப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து இடம்பெற்ற பேரணியில் பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர். மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தையர்கள் மற்றும் சமயக் குருமார், தமிழ் அரசியல் பிரதிநிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பேரணி இடம்பெற்ற முல்லைத்தீவு நகரில் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை இராணுவமும் குவிக்கபட்டிருந்தன.
ஓகஸ்ட் 28 06:49

நாகர்கோவில் பிரதேசத்தில் உள்ள நாச்சிமார் ஆலயத்தை இலங்கை இராணுவத்திடம் இருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயம் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் கட்டுப்பபட்டில் உள்ளதாகவும் அங்கு நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் மாமிச உணவுகளை சமைத்து உண்பதாகவும் ஆலய தர்மகத்தா சபை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆலயத்தை இலங்கை இராணுவத்திடம் இருந்து மீட்டுத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதியிடமும் ஆலய தர்மகத்தா சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு முதல் நாச்சிமார் ஆலயத்தையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் இலங்கை இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அங்கு பொதுமக்கள் எவரும் செல்ல முடியாதவாறு முற்கம்பி வேலிகளை இலங்கை இராணுவம் அமைத்துள்ளது.
ஓகஸ்ட் 27 16:36

இரு அதிவேக ரோந்துப் படகுகளை ஜப்பான் இலங்கைக்கு வழங்கியது- வெளிவிவகார அமைச்சர் நாளை கொழும்பில்

(மட்டக்களப்பு, ஈழம்) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) இலங்கைக்கு வருகை தந்து இரண்டு வாரங்களில் ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) மூன்று நாட்கள் பயணமாக நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார். ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கிய இரண்டு அதிவேக ரோந்துப் படகுகளையும் இலங்கைக் கடற்படையிடம் கையளிப்பதற்காகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் ஜப்பான் துாதரகம் தெரிவித்துள்ளது. கையளிக்கும் நிகழ்வு கொழும்புத் துறைமுகத்தில் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெறவுள்ளது. மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ள ஜப்பான் வெளிவிகார அமைச்சர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சந்திக்கவுள்ளார். ஆனால், சந்திக்கவுள்ளமை குறித்து கூட்டமைப்பு அமைப்பு எதுவுமே கூறவில்லை.
ஓகஸ்ட் 27 14:50

போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 102 மனித எலும்புக்கூடுகள் மீட்பு- அகழ்வுப் பணி தொடர்கிறது

வடமாகாணம் மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதோச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து 102 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 95 மனித எலும்புக்கூடுகள் வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பின்னர் சுமாா் ஐநுாறு பைகளில் பொதியிடப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை 58 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணி இடம்பெறுகின்றது. வளாகத்தின் மைய பகுதியில் அடையாளமிட்ப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகள் மாத்திரமே தற்போது மீட்கப்பட்டு வருகின்றன.
ஓகஸ்ட் 26 16:10

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திப்பார்- மஹிந்த டில்லிக்குச் செல்வார்

(மட்டக்களப்பு, ஈழம்) சீன அரசின் இலங்கை மீதான ஆதிக்கம் தொடர்பாக இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிருப்தியடைந்து, சில மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து உரையாடவுள்ளார். குறிப்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் தமிழர் தாயகத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகம் உள்ளிட்ட விடயங்களில் மைத்திரி- ரணில் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்வதாக இணக்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சில மாறுதல்கள் ஏற்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஓகஸ்ட் 25 22:52

அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை இராணுவம் ஆக்கிரமிப்பு- காணிகளை பிக்குமார் உரிமை கோருவதாக விசனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் நல்லிணக்கம் என்று கூறிக் கொண்டு, மைத்திரி- ரணில் அரசாங்கம், தமிழர் தாயகப் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து வருவதாக பொது அமைப்புகளும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர். அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை அரசு தமது ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தி இலங்கை இராணுவத்தின் இருப்பையும் தமிழர் தாயகப் பகுதிகளில் உறுதிப்படுத்தி வருவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அரசியல் தீர்வுதான் முக்கியமானது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஏலவே கூறியிருந்தார். ஆனால் தற்போது அபிவிருத்திக்கு முக்கித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தன் கூறுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓகஸ்ட் 25 14:23

போராட்டத்தை தடுத்து நிறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இலங்கை அமைச்சர் விஜயமுனி சொய்ஸா மீது குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலும் ஏனைய கடற் பகுதிகளிலும் பலாத்காரமாகத் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தென்பகுதி சிங்கள மீனவர்கள் இதுவரை வெளியேறவில்லை என பிரதேச மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பலாத்காரமாக கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள மீனவர்கள் அந்தப்பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் இதுவரையும் எந்தவொரு மீனவர்களும் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. பலாத்காரமாகத் தங்கியிருந்து சட்டத்திற்கு முரணாக கடலட்டை பிடிக்கின்றனர். கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் வருகைதந்த இலங்கை அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா சிங்களக் கடற்றொழிலாளர்களை சந்தித்து உரையாடியிருந்தார்.
ஓகஸ்ட் 24 22:15

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கப் போர்க் கப்பல்- தொள்ளாயிரம் கடற்படை உயர் அதிகாரிகளும் வருகை

(திருகோணமலை, ஈழம்) அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக் கடற்படைக்கு கடந்த மாதம் திருகோணமலைத் துறைகத்தில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில் பயிற்சியளித்துள்ள நிலையில், அமெரிக்காவின் கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage என்ற கப்பல் இன்று வெள்ளிக்கிழமை காலை வருகை தந்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் துாதரகத் தகவல்கள் கூறுகின்றன. சுமாா் தொள்ளாயிரம் அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளும் கப்பலில் வருகை தந்துள்ளனார். ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தந்து, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைத் துறைமுகத்தி்ற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.
ஓகஸ்ட் 24 10:59

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு- திட்டமிடப்பட்ட செயற்பாடு என உறவினர்கள் விசனம்

(மட்டக்களப்பு, ஈழம்) போர் நடைபெற்றகாலத்தில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்திலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இலங்கைப் படையினரால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான முழு விபரங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இயங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்புகள் தம்மால் இயன்றளவு பதிவுகளை செய்துள்ளன. சுமார் 30 ஆயிரம் பேர் வரை கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் அதன் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அந்த அமைப்புகள் இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரனை ஆணைக் குழுக்களிடம் நேரடியாகக் கூறியுமுள்ளன.