நிரல்
ஏப். 04 23:30

மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் கொலை-கடற்படைத் தளபதியிடம் தொடர் விசாரணை

(யாழ்ப்பாணம், ஈழம் ) கொழும்பில் கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பிரதேசங்கில் 2008 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்களைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் இன்று வியாழக்கிழமை நான்காவது தடவையாகவும் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் எட்டு மணித்தியாளங்கள் விசாரணை இடம்பெற்றதாக இலங்கையின் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் 26 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏப். 04 15:59

வரவுசெலவுத் திட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறும்- ஆனாலும் சுமந்திரன் குறைகூறுகின்றார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறுமென கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கொழும்பில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காதெனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார். அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் போதியளவு உண்மைத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறியுள்ளார்.
ஏப். 03 23:06

அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, பிரதான சந்தேக நபரைப் பாதுகாத்தார்- நீதிமன்றத்தில் நிசாந்த டி சில்வா

(யாழ்ப்பாணம், ஈழம் ) கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அறிந்திருந்தாக இலங்கைக் குற்றப்புலனாய்வு பிரிவின் சமூக விடயங்கள் தொடர்பான விசாரணைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கொழும்புக் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார். கொழும்பு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரான லெப்டினன் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாரச்சியை இலங்கைக் கடற்படை தலைமையகத்தில் மறைந்திருக்க அவர் உதவியளித்தமைக்கு ஆதரமாக சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏப். 03 17:45

தமிழரசுக் கட்சியின் உண்மைக்குப் மாறான அறிக்கை- கொழும்புத் தமிழச் சங்கம் கண்டனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை வினயமாகவும் மன்றாட்டமாகவும் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே தந்தை செல்வா நினைவு நிகழ்வுக்கு மண்டபம் வழங்குவதை ரத்துச் செய்யும் கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக கொழும்புத் தமிழச் சங்கம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடித்தை தீய நோக்கிலும் அரசியல் லாபத்துக்காகவும் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை நாளேடுகளுக்கும் செய்தி இணைத்தளங்களுக்கும் அனுப்பி பயன்படுத்தியதை கண்டிப்பதாகவும் விசமத்தனமான செயற்பாடு எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏப். 02 16:16

ரணில் விக்கிரமசிங்கவினால் ஏமாற்றப்படுவதை சொல்வதற்கு வெட்கப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத் தமிழர் விவகாரத்தில் நிரந்த அரசியல் தீர்வுகள் பற்றிய எந்தவொரு பேச்சுக்களையும் ஆரம்பிக்காமல் வெறுமனே அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளில் ஏமாற்றமடைந்துள்ளது. ஆனால் ஏமாற்றமடைந்து வருவதைக் கூட மக்களுக்கு வெளிப்படையாகக் கூற வெட்கப்படுவதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்திச் செயலணிக் கூட்டம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை நடைபெற்றபோது சிறிது நேரம் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மாத்திரமே கூட்டத்தில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
ஏப். 02 15:12

ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து விளக்கம் கோருமாறு மகிந்த தரப்பு அழுத்தம் - மைத்திரியும் இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், மகிந்த ராஜபக்ச தரப்பும் இணை அனுசரணை வழங்கியமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்ட ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ அசீசை, கொழும்புக்கு அழைத்து விளக்கம் கோர வேண்டுமெனவும் மகிந்த ராஜபக்ச தரப்பு வலியுறுத்தி வருகின்றது. ஆனால் கொழும்புக்கு அழைத்து விளக்கம் கோர வேண்டிய அவசியம் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கூறி வருகின்றது.
ஏப். 01 23:16

சிங்களக் கட்சிகளிடையே மோதல் - ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சந்திரிக்கா ஓரணியில்! மைத்திரி, மகிந்த பனிப்போர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்த நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து தோல்வியடைச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிபதி மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுன கட்சி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிராக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதில்லையென முடிவு செய்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ்வாறு கூறியுள்ளது.
ஏப். 01 10:08

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் கார்பன் அறிக்கை தொடர்பான சந்தேகங்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், சந்தேகங்கள் வெளிவரும் நிலையில், விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் 1499 ஆம் ஆண்டுக்கும் 1719 ஆண்டுக்கும் இடைப்பட்டதென கார்பன் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டவை அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
மார்ச் 31 14:34

மன்னாரில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 28 வருடங்களுக்கும் மேலாக இழப்பீடுகள் வழங்கவில்லையென முறைப்பாடு

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு இதுவரையும் இலங்கை அரசாங்கத்தினால் உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தினால் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சும் நஷ்டஈடுகளை வழங்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் மன்னார் மக்கள் கூறுகின்றனர். 1984ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை மன்னார் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இலங்கை இராணுவம் நடத்திய முப்பதுக்கும் அதிகமான இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள் மற்றும் முற்றுகைச் சமர்களின் போது ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் இருநூறுக்கும் அதிகமானவர்கள் தமது அவயவங்களை இழந்து நிரந்தர அங்கவீனர்களாகியுள்ளனர்.
மார்ச் 30 22:50

மன்னாரில் மேலும் பல போர்க்கால மனிதப் புதைகுழிகள்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகம் வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியென பிரகடனப்படுத்தப்பட்டு அப்பகுதிகளில் படைமுகாம்களாக காணப்பட்ட இடங்களில், மனிதப்புதை குழிகள் இருக்கலாம் என காணமல் போனவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இலங்கைக் கடற்படையின் சனிவிலேஜ் முகாமினுள் இவ்விதம் புதைகுழிகள் இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். மன்னாரில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை இதுவரை எண்ணூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் காணமல் போயுள்ளனர் என்று கூறியுள்ள காணமல் போனவர்களின் உறவினர்கள், இதனால் மனித புதைகுழிகள் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.