நிரல்
பெப். 10 21:03

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி கொள்கைக்கானதாகத் தெரியவில்லை- ஜோதிலிங்கம்

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கொள்கையோடு செயற்படுகின்றதா அல்லது இது ஒரு தேர்தல்கால கூட்டா என்பது தொடர்பாக பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தக் கூட்டணியில் இணைந்துள்ள சுரேஸ் பிரேமச் சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் இல்லை என்றும் வெறுமனே உதிரிக் கட்சிகள் எனவும் அவதானிகள் கூறுகின்றனர்.
பெப். 09 23:16

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி சமகால பூகோள அரசியலைக் கருத்தில் கொண்டதா?

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. காலை 9.30க்கும் 11.30 க்கும் இடையிலான சுப நேரத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணி ,ஈபிஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச் சந்திரன், சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோர் தத்தமது கட்சிகள் சார்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பெப். 08 22:35

இலங்கையின் ஒற்றையாட்சி மாறாது- டில்லியில் மகிந்த ராஜபக்ச

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கம் இந்திய மத்திய அரசுடன் பொருளாதார உடன்படிக்கைகள். நிதியுதவிகள் குறித்துப் பேச்சு நடத்தி வருகின்றது. இந்தோ பசுபிக் பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அமைவாக இலங்கையுடனான உறவுகளைப் பேணும் புதிய அணுகுமுறைகளின் வெளிப்பாடாகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்று முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தார் கோட்டாபய ராஜபக்ச. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவும் நான்கு நாள் பயணமாக சென்ற வெள்ளிக்கிழமை இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.
பெப். 07 23:13

மகிந்த இந்தியா பயணம்- நாளை மோடியுடன் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நான்கு நாள் பயணமாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்தியாவுக்குச் சென்றுள்ளார். பிரதமராகப் பதவியேற்று முதன் முதலாக இந்தியாவுக்குச் சென்ற மகிந்த புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள் பலரைச் சந்திக்கவுள்ளார். புதுடில்லி விமானநிலையத்தில் மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய் தோட்ரே மகிந்த ராஜபக்சவை பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். நாளை வெள்ளிக்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்திக்கும் ராஜபக்ச, நண்பகல் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.
பெப். 07 21:38

மகாவலி அபிவிருத்திக்காகச் சிங்களக் குடியேற்றம் இல்லையென மகிந்த கூறியமை பொய்யான தகவல்

(முல்லைத்தீவு, ஈழம் ) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் இலங்கை அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் வெளிப்படையாகவே காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதை மகிந்த ராஜபக்ச எவ்வாறு நாடாளுமன்றத்தில் மறுத்துரைத்தார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரவிகரன் விளக்கமளித்தார்.
பெப். 06 23:34

நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் மாதம்- ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு காரணமா?

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதால் ஓகஸ்ட் மாதமே நாடாளுமன்றத்தைக் கலைத்து செப்ரெம்பர் மாதம் தேர்தலை நடத்த அரசாங்கம் தீவிரமாக ஆலோசிப்பதாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நான்கு ஆண்டுகள் ஆறுமாதம் நிறைவடையும்போது நாடாளுமன்றத்தைக் கலைத்து ஏப்பிரல் மாதம் தேர்தலை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் பெப்ரவரி மாதம் கலைப்பதற்குக் கூட விசேட பிரேரணை ஒன்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் ஏற்பாடாகியிருந்தது.
பெப். 06 10:21

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்- ஆனால் நாடாளுமன்றத்தில் மகிந்த மறுப்பு

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட எல் வலையத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தி வருகிக்றனர். இது தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்திடம் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவ்வாறு சிங்களக் குடியேற்றங்கள் செய்யும் நோக்கம் இல்லையென்று கூறியுள்ளார். நேற்றுப் புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போது மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். சிங்களப் பிரதேசங்களை மைய்யப்படுத்திய மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழர் தாயகப் பகுதிகளைக் கூறுபோடும் நோக்கில் வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கும் கொண்டு வரப்படுகின்றது.
பெப். 05 21:47

ஏ-9 வீதியில் இலங்கை இராணுவத்தின் சோதனைச் சாவடி- நாடாளுமன்றத்தில் வாக்குவாதம்

(கிளிநொச்சி, ஈழம்) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஏ-9 வீதியில் இலங்கை இராணுவம் சோதனைச் சாவடிகளை அமைத்துப் பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு ஈபிடிபி செயலாளர், இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுப்புத் தெரிவித்தார். சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் முறையிட்டுள்ளதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சுட்டிக்காட்டினார். ஆனால் அப்படி எந்தச் சோதனைச் சாவடிகளும் இல்லையென்று டக்ளஸ் தேவானந்தா கூறினார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அமைதியாக இருந்தார். இதனால் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் வாக்குவாதப்பட்டார்.
பெப். 05 20:46

அறு நூறு பில்லியன்கள் இழப்பு, கடன் 72 பில்லியன்களாக அதிகரிப்பு- நாடாளுமன்றத்தில் மகிந்த அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதத்தை விட குறைவாக உள்ளது. சகல உற்பத்தி துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. 600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அறவிட முடியாக் கடன் 72 பில்லியன்களாக உள்ளது. முழு பொருளாதாரமும் செயலிழந்துள்ளது. எனினும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு பத்து அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் வழங்கும் திட்டம் மார்ச் முதலாம் திகதி முதல்அமுல்படுத்தப்படுமென பிரதமரும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அறிவித்தார். இலங்கையின் பொருளாதார, நிதி நிலைமைகள் தொடர்பாக விடுத்த விசேட அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
பெப். 04 22:49

கோட்டாபய ராஜபக்சவின் சுதந்திர தின உரையில் இனப்பிரச்சினை பற்றிய வார்த்தையில்லை

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்காப் பொதுஜன முன்ணணி அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்திய இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பொலிஸ் சேவையில் தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்ற அறிவிப்பைத் தவிர வேறு முக்கியமான அறிவுப்புகள் எதுவும் தமிழ் மொழியில் இடம்பெறவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிகழ்த்திய உரையில் இனப்பிரச்சினை என ஒன்று இருப்பதாகவோ அல்லது போரின் பின்னரான சூழலில் நிரந்தர அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்றோ எதுவுமே கூறவில்லை. மாறாக இன அடிப்படையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாதென்றும் இனவாத அமைப்புகளுக்கு இடமில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச தனது உரையில் கூறியிருந்தார்.