நிரல்
பெப். 25 23:03

ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரிடம் அறிக்கை கையளிக்க ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) ஜெனீவாத் தீர்மானம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு நாளை புதன்கிழமை மனித உரிமைச் சபை அமர்வில் எடுத்துக் கூறப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ச கொழும்பில் ஏற்கனவே அறவித்துள்ளார். ஆனாலும் அதிகாரபூர்வமாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரிடம் அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளார். அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று ஜெனீவாவுக்குப் பயணமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பெப். 24 13:19

நீதி விசாரணையை சர்வதேச நீதிமன்றமே நடத்த வேண்டும்- உறவினர்கள் சங்கம் கூட்டறிக்கை

இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் இருந்து விலகினாலும் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவு வெறுமனே கண்துடைப்பு என்று வடக்குக்- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சியல் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடாகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறிதத் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கரு்தது தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவித்தார்.
பெப். 23 22:12

ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும்- தமிழரசுக் கட்சி

(கிளிநொச்சி, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும், எடு்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வே்ணடும் என தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 6.30க்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் இன்று கிளிநொச்சி தமழரசு கட்சி அலுவலகத்தி இடம்பெற்றது.
பெப். 22 16:41

தீர்மானத்தில் இருந்து வெளியேறாமால் உள்ளக விசாரணைகளையும் இல்லாமல் செய்யும் புதிய உத்தி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசு ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலகுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்தாலும் அதற்கான மாற்று வழிகள் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 30/1 தீர்மானத்தின் மூலமே சர்வதேச விசாரணைகள் தடுக்கப்பட்டது என்றும் தமிழ் இனப்படுகொலை எனக் கூறப்படுவதும் தடுக்கப்பட்டதாக இலங்கையின் மூத்த சிங்கள இராஜதந்திரிகள் அரசாங்கத்துக்கு ஆலாசனை வழங்கியுள்ளதாகவும் இதனால் அது குறித்துப் பரிசீலிப்பதாகவும் தெரியவந்துள்ளது. சர்வதேசக் கண்டனங்களைத் தவிர்க்கும் நோக்கிலும் இராஜதந்திரிகள் கூறிய விடயங்கள் பரிசீலிக்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
பெப். 21 23:56

இனப்பிரச்சினை இருப்பதாக சஜித் பிரேமதாசவும் பேச மறுக்கிறார்-மாவை சேனாதிராஜா

(வவுனியா, ஈழம்) ஜனநாயக முறையில் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அந்த ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார,பாசிஸ ஆட்சியைக் கொண்டுவரவே நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தினார். அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மட்டுமன்றி எதிர்க்கட்சித்தலைவரும் கூட இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்றுள்ளதை வேண்டுமென்றே ஏற்க மறுப்பதாகவும் பேச மறுப்பதாகவும் மாவை சேனாதிராஜா இலங்கை நாடாளுமன்றத்தில் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறினார்.
பெப். 21 22:38

சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்தது மைத்திரி- ரணில் அரசாங்கமே- மங்கள விளக்கம்

(வவுனியா, ஈழம்) இலங்கை இராணுவத்தினருக்கும் மகிந்த ராஜபக்ச தரக்குக்கும் தண்டனை வழங்க சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தினால் ஜெனிவாவில் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 பிரேரணை மூலம் அனைவரும் காப்பாற்றப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய அவர் மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றியது இந்த 30/1 தீர்மானமே என்றும் மங்கள சமரவீர கூறினார். வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன முன்வதை்த குற்றச் சாட்டுக்குப் பதிலளித்தபோதே மங்கள சமரவீர இவ்வாறு கூறினார்.
பெப். 20 20:56

ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 468 கோடி ரூபாய்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு வாபஸ்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் இன்று வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 468 கோடியே 36 இலட்சத்து 61000 ஆயிரம் ரூபாய்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு (Vote and Account) ஒன்று நடத்தப்பட ஏற்பாடாகியிருந்தது. ஆனாலும் இறுதி நேரத்தில் அந்த வாக்கெடுப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தக் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கத் தயாராகியிருந்த நிலையில் வாக்கெடுப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பெரும் நிதி நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கி வருவதாக மகிந்த ராஜபக்ச சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
பெப். 20 09:29

ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலகும் முடிவு நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டதா?

(வவுனியா, ஈழம்) இலங்கை தொடர்பான ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30/1 தீர்மானத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. எனினும் மகிந்த ராஜபக்சவின் இந்த அறிவிப்புக் குறித்து ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் இதுவரை அதிகாரபூர்வமாகக் கருத்துக் கூறவில்லை. மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் போது 2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் 30/1 தீர்மானம் நிறவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் இலங்கைப் படையினரை சர்வதேச அரங்கில் காட்டிக்கொடுக்கும் செயல் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்து மகிந்த ராஜபக்ச தரப்புக் குற்றம் சுமத்தியிருந்தது.
பெப். 18 22:45

மகிந்த- மைத்திரி கூட்டும்- 2015 ஆம் ஆண்டு மாற்றம் என்று கூறப்பட்ட அரசாங்கமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன கட்சி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்ச உள்ளிட்ட பத்து அரசியல் கட்சிகளுடன் ஒன்னைந்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா நிதஹாஸ் பொதுஜன சந்தானய என்று சிங்கள மொழியில் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியின் தலைவராகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளராக பசில் ராஜபக்ச ஆகியோர் செயற்படவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து இந்தப் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
பெப். 17 23:34

அமெரிக்காவின் மிலேனியம் ஒப்பந்தம் பற்றி ஆராய்வதற்கான குழு கோட்டாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து பெறும் கடன்களை மீளச் செலுத்துவதற்கு எவ்விதமான திட்டங்களும் இல்லாமல் இறக்குமதிப் பொருளாதாரத்தில் மாத்திரமே தங்கியுள்ளது. இந்த நிலையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் பெறப்பட்ட கடனுக்கான 367 மில்லியன்களுக்குக் குறை நிரப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார். இவ்வாறானதொரு சூழலில் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Cooperation) (MCC) நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பற்றி ஆராய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் முதற் கட்ட அறிக்கை இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.