நிரல்
மார்ச் 02 23:49

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது- சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் அணி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசில் மாறி மாறி பதவிக்கு வரும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. கட்சியின் மூத்த உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி இன்று திங்கட்கிழமை உருவாகியுள்ளது. சஜித் பிரேமதாச முன்னிலையில் ஏனைய கட்சிகள் இன்று கைச்சாத்திட்டுள்ளன. ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை மையமாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்து. இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாச அணி கடந்த சில நாட்களாகத் தீவிரமாகப் பேச்சு நடத்தியிருந்தது.
மார்ச் 01 22:21

வடக்குக் கிழக்குத் தயாகத்தில் பிரிவினைகளை உருவாக்கப் பல சுயேற்சைக் குழுக்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் நாளை திங்கட்கிழமை நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் 19 ஆவது திருத்தச் சடடத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் முடிவில் நாளை கலைப்படவுள்ளது. சென்ற ஆண்டு நவமபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனாலும் சாதாரண பெரும்பான்மைப் பலம் கூட இல்லாத நிலையிலும் சிறுபான்மை அரசாங்கமாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன கட்சி ஆட்சி அமைத்திருந்தது. மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவி வகிக்கிறார். இந்த நிலையில் ஆட்சியமைத்து நான்கு மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.
பெப். 28 23:09

பொதுஜனப் பெரமுனவைப் போன்றே ஐக்கிய தேசியக் கட்சியும்- ரணில், சஜித் முரண்பாடு நீடிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசில் மாறி மாறி ஆட்சியமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடித்துச் செல்கின்றன. கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் எந்தவித இணக்கப்பாடுகளும் இன்றி கூட்டம் முடிவடைந்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் செயற்பாடுகள் அதன் சின்னம் தொடர்பாக கூட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக ஆராயப்பட்டது. புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பான இறுதித் தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் என சென்ற புதன்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் தீர்மானம் இன்றி கூட்டம் முடிவடைந்துள்ளது.
பெப். 27 23:58

தீர்மானங்களில் இருந்து புதிய அரசாங்கம் விலகியமை குறித்த மகாநாயக்கத் தேரர்கள் வரவேற்பு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களில் இருந்து புதிய அரசாங்கம் வலிகியமை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியும் இந்தப் பிரேரணைக்கு 2015 ஆம் ஆண்டு இணை அனுசரனை வழங்கிய முன்னாள் அரசாங்கத் தரப்பினரான ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக கருத்துக்கள் எதனையும் கூறவில்லை. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. மற்றும் கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கொழும்பில் உள்ள ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால் பிரதான கட்சி என்ற அடிப்படையிலும் 30.1 தீர்மானத்துக்குப் பொறுப் கூற வேண்டியவர்கள் என்ற முறையிலும் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளயிடப்படவில்லை.
பெப். 27 10:34

இலங்கை தொடர்பாக இந்தியா மௌனம்- பிரித்தானியா, கனடா கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டின் இன்று வியாழக்கிழமை இலங்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். 30/1, 34/1, 40/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்த நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டின் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பாக விவாதம் நடைபெறவுள்ளது. மனித உரிமைச் சபையில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளின் உறுப்புரிமைக் காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை தொடர்பான விவாதத்தில் ஏனைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பேசவுள்ளனர்.
பெப். 26 23:05

தீர்மானங்கள் இலங்கை அரசியல் யாப்புக்கு முரண்- ஜெனீவாவில் தினேஸ் குணவர்த்தன அறிவிப்பு

(கிளிநொச்சி, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை 2015, 2019ஆம் ஆண்டுகளில் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று புதன்கிழமை உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன புதிதாகப் பதவியேற்றுள்ள அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தார். விலகவுள்ளதாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இன்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெப். 25 23:03

ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரிடம் அறிக்கை கையளிக்க ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) ஜெனீவாத் தீர்மானம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு நாளை புதன்கிழமை மனித உரிமைச் சபை அமர்வில் எடுத்துக் கூறப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ச கொழும்பில் ஏற்கனவே அறவித்துள்ளார். ஆனாலும் அதிகாரபூர்வமாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரிடம் அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளார். அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று ஜெனீவாவுக்குப் பயணமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பெப். 24 13:19

நீதி விசாரணையை சர்வதேச நீதிமன்றமே நடத்த வேண்டும்- உறவினர்கள் சங்கம் கூட்டறிக்கை

இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் இருந்து விலகினாலும் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவு வெறுமனே கண்துடைப்பு என்று வடக்குக்- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சியல் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடாகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறிதத் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கரு்தது தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவித்தார்.
பெப். 23 22:12

ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும்- தமிழரசுக் கட்சி

(கிளிநொச்சி, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும், எடு்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வே்ணடும் என தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 6.30க்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் இன்று கிளிநொச்சி தமழரசு கட்சி அலுவலகத்தி இடம்பெற்றது.
பெப். 22 16:41

தீர்மானத்தில் இருந்து வெளியேறாமால் உள்ளக விசாரணைகளையும் இல்லாமல் செய்யும் புதிய உத்தி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசு ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலகுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்தாலும் அதற்கான மாற்று வழிகள் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 30/1 தீர்மானத்தின் மூலமே சர்வதேச விசாரணைகள் தடுக்கப்பட்டது என்றும் தமிழ் இனப்படுகொலை எனக் கூறப்படுவதும் தடுக்கப்பட்டதாக இலங்கையின் மூத்த சிங்கள இராஜதந்திரிகள் அரசாங்கத்துக்கு ஆலாசனை வழங்கியுள்ளதாகவும் இதனால் அது குறித்துப் பரிசீலிப்பதாகவும் தெரியவந்துள்ளது. சர்வதேசக் கண்டனங்களைத் தவிர்க்கும் நோக்கிலும் இராஜதந்திரிகள் கூறிய விடயங்கள் பரிசீலிக்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.