நிரல்
மார்ச் 30 22:11

கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துச் செல்;கிறது. இன்று தி்ங்கட்கிழமை இரவு மேலும் ஐந்துபேர் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே 117 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். தற்போது 122 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கொழும்பு, சிலாபம் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு ஐ.டி.எச் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து பேரின் நிலை ஆபத்தாகவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் தொற்றுக்குள்ளான பலர் மறைந்திருப்பதாக இலங்கைப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 29 21:22

இலங்கையில் 117 பேருக்குத் தொற்று- முல்லைத்தீவில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள்

(முல்லைத்தீவு, ஈழம் ) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துச் செல்;கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் இருவர் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே 115 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்தனர். தற்போது 117 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான இருவரும் இரத்தினபுரி, சிலாபம் ஆகிய வைத்தியசாலைகளில் இருந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவனைக்கு மேலதிகச் சிகிச்சைக்காக மாற்ற்ப்பட்டுள்னனர். அதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் இரண்டு பிரதேசங்களும் கன்டியில் ஒரு பிரதேசமும் சுற்றிவளைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் சிலருக்கு வைரஸ் தொற்றியுள்ளாதால் இரு பிரதேசங்களிலும் வசிப்பபோர் வெளியே செல்ல முடியாதென்றும் உள்ளே யாரும் போக முடியாதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 22:22

இலங்கையில் ஒருவர் உயிரிழந்தார்- 20 ஆயிரம் பேர் வாழும் பிரதேசம் சுற்றிவளைத்து மூடப்பட்டது

(வவுனியா, ஈழம்) இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பின் புநகர் பகுதியான களுத்துறை மாவட்டம் அட்டலுகம பிரதேசம் இலங்கைப் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தப் பிரதேசத்தில் கொரோனா நோயளியொருவர் இனம் காணப்பட்டதையடுத்தே இந்தப் பிரதேசத்தில் இருந்து யாரும் வெளியே வர முடியாதென்றும் உள்ளே செல்ல அனுமதியில்லையெனவும் கொரோன விவகாரத்தைக் கண்காணிக்கும் இலங்கை இராணுவக் கேர்ணல் கமால் ஜயசூரி தெரிவித்தார். தற்போது அந்தப் பிரதேசத்தைச் சுற்றி பொலிஸாரும் இராணுவத்தினரும் காவல் புரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மார்ச் 28 15:49

ஈழத் தமிழ் இலக்கிய முன்னோடி நீர்வை பொன்னையன் மறைவு- கொழும்புத் தமிழ்ச் சங்கம் அனுதாபம்

(வவுனியா, ஈழம்) ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும் இடதுசாரிக் கொள்கைகளில் இறுக்கமான பிடிப்புக் கொண்டவருமான நீர்வை பொன்னையன் இயற்கை எய்தியமை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு என்று கொழும்புத் தமிழச் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலியைப் பிறப்பிடமாக கொண்ட அவர் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் ஈழத்துத் தமிழ் இலக்கிய பரப்பிலே தனது காலத்தைச் செலவழித்து, இயற்கை எய்தும் வரை எழுதிக் கொண்டிருந்தவரென்றும் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் வழங்கிய சாகித்திய ரத்தனா விருதைப் பெற்ற பெருமைக்குரியவர்.
மார்ச் 27 21:14

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரேனா வைரஸ் பரிசோதனை

(யாழ்ப்பாணம், ஈழம்) கொரோனா வைரஸ் இலங்கைத் தீவில் வேகமாகப் பரவி வரும் நிலையில் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை எதிர்வரும் புதன்கிழமை முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் செய்யப்படுமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வைத்தியசாலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தை இயக்குவதற்கு உரிய ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மார்ச் 26 20:52

இலங்கை இராணுவச் சிப்பாய் கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பில் விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட வழங்கில் குற்றம் சுமத்தப்பட்டு இலங்கை நீதிமன்றத்தினால் மரண தன்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தின் சார்ஜன்ட் சுனில் ரத்தனாயக்கா பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பில் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையின் இறுதித் தீர்ப்பு 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றால் வழங்கப்பட்டிருந்தது. மரண தன்டனை நிறைவேற்றப்பட வேண்டுமெனத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
மார்ச் 25 23:58

நாடாளுமன்றத் தேர்தல் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் மூன்று மாதங்களுக்குப் பிற்போடப்படலாம் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அமைச்சர்கள், அதிகாரிகளுடனான சந்திப்பில் இவ்வாறு கலந்துரையாடப்பட்டாகக் கூறப்படுகின்றது. கொரேனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைத் தீவு முழுவதிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் பென்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தற்போதைக்குத் தேர்தலை நடத்த முடியாதென கோட்டாபய ராஜபக்ச கூறியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
மார்ச் 24 21:59

கொழும்பு அதி உச்ச அபாய வலையம்- தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்

(வவுனியா, ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்லும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகைளயில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் நடை;பெற்றது. அவசர நிலைமைகள் குறித்து ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மகிந்த ராஜபக்ச நேற்றுத் திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். சென்ற வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று; காலை ஆறு மணிக்குத் தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை ஆறுமணி வரை அமூல்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 23 23:14

வடக்குக்- கிழக்குப் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் போதிய வசதிகளைச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால் குறைந்த பட்சம் பிரதேசத்தில் உள்ள வளங்களைக் கொண்டும் சொந்த முயற்சியினாலும் துப்பரவுப் பணிகள் ஆரமப்பிக்கப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட முறையில் யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி இரணைமடுக்குள்ம், மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், ஆகிய தாயகப் பி்ரதேசங்களில் இலங்கை அரசாங்கம் கொரேனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைத்து வெருகின்றது.
மார்ச் 22 21:41

சிங்கள யாத்திரிகர்கள் இரணைமடு, கொடிகாமம் நிலையங்களில் பராமரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவி வருவதையடுத்து இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்றிருந்த சிங்கள யாத்திரிகர்கள் அழைத்து வரப்பட்டு தமிழர் தாயகமான வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் உள்ள கொடிகாமம் பிரதேசத்திலும் கிளிநொச்சி இரணைமடுப் பிரதேசத்திலும் 14 நாட்களுக்குத் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர். இந்தப் பிரதேசங்களில் உள்ள இலங்கை விமானப் படையினரின் முகாம்களில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தென்நூற்றுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர்.