நிரல்
ஜூன் 12 22:56

தேர்தல் பிரச்சாரத்தில் அரச வளங்கள் துஸ்பிரயோகம்- ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

(வவுனியா, ஈழம்) ஒற்றையாட்சி அரசின் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரச சொத்துக்களை பயன்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் அரசசார்பற்ற நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. அரச திணைக்களங்கள். அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமான வாகனங்கள், தளபாடங்கள், மண்டபங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்படுவதாகவும் தற்போது காபாந்து அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலர் இவ்வாறு அரச வளங்களைத் துஸ்பிரயோகம் செய்வதாகவும் தேசிய சமாதானப் பேரவை, மாற்றுக் கொள்கை மையம் ஆகிய நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஜூன் 11 15:12

பூகோள அரசியலுக்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்கவை அணைக்க முற்படும் ராஜபக்ச ஆட்சி

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றதும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரை நடத்திய ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனரெனத் தமிழர்கள் அங்கலாய்க்கின்றனர். முற்போக்கான சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்ற கவலையும், இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் தம்மை ஒரங்கட்ட முற்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டனர் என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருப்பெற்றதுவிட்டது எவ்வாறாயினும் தமிழ் முஸ்லிம் மக்களைவிட சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தனர் என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.
ஜூன் 09 21:10

முகமாலையில் போர்க்கால மனிதப் புதைகுழி- எலும்புக்கூடுகள் மீட்பு

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் முகமாலைப் பிரதேசத்தில் போர்க்கால மனித எலும்புக்கூடுகளென அடையாளம் காணப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள், மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டால் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கைப் பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இன்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது. இன்று புதிதாக மனித எச்சங்கள் அடையாளம் காணப்படாததை அடுத்து அகழ்வு பணிகள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜூன் 08 20:01

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் அரச அதிகாரிகள்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலில், அரச அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் பல முறைப்பாடுகள் பொது அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்கள்; பலருக்கும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் தற்போது கடமையில் உள்ள அரச அதிகாரிகள் பலர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியளிப்பதாகவும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய சமதானப் பேரவை, மாற்றுக்கொள்கை மையம் ஆகிய அரசார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு தமது முறைப்பாட்டை இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன் வைத்துள்ளன.
ஜூன் 07 22:42

நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவார்களா?

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம்வரத்தில் வரவுள்ள சனிக்கிழமை நடைபெறுமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன. தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும் இன்னும் சில நாட்களுக்குள் திகதி அறிவிக்கப்பட்டு வடும் என்றும் ஓகஸ்ட் மாத நடுப் பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 05 22:02

நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் அணி போட்டியிட முடியுமா? நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு கோரி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்பதோடு கட்சியின் மத்திய குழுவிலும் அங்கம் வகித்திருந்தனர்.
ஜூன் 04 22:09

தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஜனாதிபதி செயலணி- இன அடையாளங்கள் அழிக்கப்படும் ஆபத்து

(மட்டக்களப்பு, ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள பதினொருபேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் ஜனாதிபதி செயலணிக்குழுவில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் அதிகாரபூர்வமாக கண்டனங்கள் எதனையுமே வெளியிடவில்லை. பௌத்த மகா சங்கத்தின் ஆலோசனைக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்தச் செயலணி அமைக்கப்பட்டது
ஜூன் 02 21:04

சாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா?

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு அதுவும் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளின் ஊடான தேர்தல் அரசியலில் மாத்திரம் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண முடியும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்தமிழர் அரசியல் போராட்ட வரலாற்றில் அதுவும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஒரு தசாப்த காலம் சென்றுவிட்ட நிலையில், தற்போது தேர்தல் அரசியல்தான் கதியென்ற நிலைப்பாட்டில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இயங்குவதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது.
ஜூன் 01 23:38

நாடாளுமன்றத் தேர்தல்- புதிய திகதியைத் தீர்மானிப்பதில் இழுபறி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கொழும்பில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சட்டச் சிக்கல் முடிவுக்கு வந்த பின்னர் உடனடியாகவே தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க முடியும் என்றும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மே 30 14:33

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையும் ராஜபக்சக்களும்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது. சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு. 1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரந்யாக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்திருந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டமே நடத்தியிருந்தனர்- ஆனால் எதுவுமே நடக்கவில்லை. 2013ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அவரை பிரதம நீதியரசராகப் பதவி உயர்த்தியிருந்தார்.