நிரல்
பெப். 12 15:15

சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறுகிறார் பேராயர் மல்க்கம் ரஞ்சித்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்குக் கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையா்கள் ஆதரித்தும் பங்குபற்றியும் வந்திருக்கின்றனர். இதனால் அருட்தந்தையர்கள் பலர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கைது செய்யப்பட்டுமிருந்தனர். ஆனால் அப்போதெல்லாம் பேராயர்கள் இலங்கை அரசாங்கத்தை கண்டித்திருந்தாலும் உரிய முறையில் அழுத்தம் கொடுத்திருக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்த்தியன் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தாா். 1999 ஆம் ஆண்டு மடு தேவாலயம் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக்கும் அதிகமானேர் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர்.
பெப். 12 09:37

மன்னார் மாந்தை வடக்கில் புதிய பிரதேச செயலகம்

(மன்னார், ஈழம்) தமிழ் மக்களின் பூர்விகப் பகுதியான வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் மாந்தை வடக்கு எனும் புதிய பிரதேசச் செயலகப் பிரிவை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மாந்தை மேற்கு, நானாட்டான், மடு, முசலி எனும் ஐந்து பிரதேசச் செயலகப் பிரிவுகள் இயங்கி வரும் நிலையில் மாந்தை வடக்கு எனும் ஆறாவது புதிய செயலகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகளே துரித கதியில் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பெப். 10 19:03

விமல் வீரவன்ச மகிந்த ராஜபக்சவை தலைமைப் பதவியில் இருந்து மாற்ற வேண்டுமென்கிறார்

(யாழ்ப்பாணம், ஈழம்) சிறிலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லையென அமைச்சர் டொன்ஸ்ரன் பெர்ணான்டோ தெரிவித்தார். சிறிலங்கா பொது ஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியோடு கருத்து வேறுபாடுகள் இல்லை எனவும் விமல் வீரவன்ச கூறிய தனிப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்துக்குள் பிரச்சனைகளை உருவாக்கவில்லையெனவும் அமைச்சர் டொன்ஸ்ரன் கூறினார்.
பெப். 08 22:56

மன்னார் கரையோர பிரதேசங்களில் கனிய வளங்கள் அபகரிப்பு- அவுஸ்திரேலிய நிறுவனம் மீது குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அவுஸ்திரேலிய நிறுவனமொன்று எவ்வித அனுமதியுமின்றி கடந்த நான்கு வருடங்களாக இல்மைனைட் மற்றும் டைட்டானியம் ஆகிய கனியவளம் தொடர்பாக மேற்கொண்ட இரகசிய அகழ்வாராய்ச்சி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதால் இலங்கை ஒற்றையாட்சி அரசு மறைமுகமாக அனுமதி வழங்கி, ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான வளங்களை இரகசியமாக விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கனியவள அபகரிப்புத் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் மக்கள் சார்பில் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.
பெப். 07 22:32

சுயநிர்ணய உரிமையைக் கோரி சிவில் சமூக அமைப்பு பொலிகண்டியில் பிரகடனம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம்;, புத்தர் சிலை வைத்தல் உள்ளிட்ட அடக்கு முறைக்கு எதிராக நடத்தப்பட்ட நடைபவனிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டிப் பிரதேசத்தில் முடிவடைந்தது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இந்தப் நடைபவனிப் பேரணி ஆரம்பித்தது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்று பெயரிடப்பட்டு, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ஒற்றையாட்சி அரசின் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அடக்குமுறைகள் வெளிப்படுத்தப்பட்டன.
பெப். 05 21:41

மன்னார் கடலில் மீன்பிடித்த மீனவர்கள் மூவரைக் காணவில்லை

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின் ஓலைத்தொடுவாய் பகுதியில் கடந்த ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று தமிழ் மீனவர்கள் ஐந்து நாட்கள் கடந்தும் கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களைத் தேடி வருவருகின்றனர். யாழ்ப்பாணம் பருத்திதுறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அன்டன் யேசுதாசன் அன்டன் சிவதாஸன் மற்றும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரான செல்வராஜ் ஜெயராம் மற்றும் மன்னார் கொண்ணையன் குடியிருப்பைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரான சந்தான் செபஸ்டியான் ஆகிய மூன்று தமிழ் மீனவர்களே கடந்த ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போய்வுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
பெப். 04 23:04

பௌத்த தேசியக் கொடியோடு கொழும்பில் சுதந்திரதின நிகழ்வு

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் இன்று இடம்பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின வைபம் ஈழத் தமிழர்களைப் போரில் வெற்றிகொண்ட நிகழ்வாகவே காண்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் தேசியக் கொடியோடு பௌத்த சமயக் கொடியும் இராணுவத்தின் போர் வெற்றியைக் குறிக்கும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. கொழும்பு -07 இல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
பெப். 03 22:58

பொலிகண்டி நோக்கி பொத்துவில் பிரதேசத்தில் நடைபவனி ஆரம்பம்

(அம்பாறை, ஈழம் ) ஈழத் தமிழர் தாயகத்தின் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. கிழக்கு மாகாணம் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பித்த நடைபவனிப் போராட்டம், இன்று திருக்கோவில் பிரதேசத்தில் நிறைவடைந்துள்ளது. நாளை வியாழக்கிழமை அங்கிருந்து மீண்டும் ஆரம்பித்து வவுனியா மன்னார் வழியாக யாழ்ப்பாணம் பொலி கண்டிப் பிரதேசத்தில் நிறைவடையவுள்ளது. தமிழ்த்தேசியக் கட்சிகள், பொது அமைப்புகள், சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நடைபவனிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெப். 02 22:57

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு

(மட்டக்களப்பு, ஈழம் ) ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல் போன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராக பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபவனிப் போராட்டத்திற்குப் பூரண ஒத்துழைப்பை முஸ்லிம் மக்கள் வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். நாளை புதன்கிழமை ஆரம்பித்து எதிர்வரும் ஆறாம் திகதி சனிக்கிழமை வரை போராட்டம் நடைபெறவுள்ளது.
ஜன. 30 14:41

பள்ளிமுனை மேற்கில் இலங்கைக் கடற்படையினர் காணி அபகரிப்பு

(மன்னார், ஈழம் ) மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை மேற்கு தமிழ் மக்களின் வீடுகளையும் காணிகளையும் ஆக்கிரமித்துள்ள கடற்படையினருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நடைபெறும் நிலையில் பாதிப்படைந்த மக்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதிப்பகுதியில் தமிழர் தாயகப் பகுதியில் ஏற்பட்ட கடும் யுத்த நிலை காரணமாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் குடும்பங்கள் தமது இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்திருந்தனர்.