நிரல்
ஜூன் 24 23:55

அபாயகரமான வெடி பொருட்கள் மீட்பு

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் தற்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி வெடி பொருட்களினால் பல வெடிப்புச் சம்பவங்களும் அண்மையில் அங்கு நிகழ்ந்துள்ளதினால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. கைக் குண்டுகள் ஆட்டிலறிக் குண்டுகள் செல்கள் ரொக்கட் வெடி குண்டுகள் மற்றும் விமானக் குண்டுகளே பொது மக்களின் குடி நிலக்காணிகள் வயற் காணிகள் கைவிடப்பட்ட கிணறுகள் மற்றும் கடற் கரையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அவை இலங்கைப் படைத்தரப்பினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 24 20:04

வடமாகாணத்தில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறப்பு

(மன்னார், ஈழம் ) இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாகாணங்களில் ஒன்றான வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் படை முகாம்கள் ஏலவே அமைந்துள்ள நிலையில், அங்கு ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் புதிய பொலிஸ் நிலையங்களை உருவாக்கும் செயற்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக் காலங்களில் பொலிஸாரினால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் லொக்கப் மரணங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் சித்திரவதைகளினால் இம்மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் கடும் பீதியடைந்துள்ள நிலையில் இம்மாகாணங்களில் புதிய பொலிஸ் நிலையங்களை அமைக்கும் பணிகளை இலங்கை அரசாங்கத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
ஜூன் 23 22:31

ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்திய முத்தெட்டுவ தேரரிடம் ஆசி பெற்றார் ரணில்

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கப் பாடுபட்ட கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராமய விகாரைக்குச் சென்று அந்த விகாரையின் பிரதம தேரர் முத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ரணில் விக்கிரமசிங்க ஆசி பெற்ற பின்னரே நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் விகாரைக்குச் சென்று ஆசி பெற்றதாக கட்சியின் செயலாளர் பாலித ரங்கபண்டார தெரிவித்தார்.
ஜூன் 22 23:45

ரணில் விக்கிரமசிங்க நாளை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு

(கிளிநொச்சி, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான ரணில் விக்கிரமசிங்க நாளை புதன்கிழமை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் வெளிவந்துள்ளது. நாளை பதவியேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சித் தலைவர் அந்தஸ்த்து மற்றும் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் என்ற மரியாதையோடு எதிர்க்கட்சி வரிசையில் முன்பக்க ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21 20:56

ஐ.ஒ.ஆர்.ஏ-பிம்ஸ்டெக் அமைப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியில் புதுடில்லி

(வவுனியா, ஈழம்) இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று திங்கட்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிராந்தியக் கூட்டுச் செயற்பாடுகள் (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) தொடர்பாகவும் ஐ.ஒ.ஆர்.ஏ எனப்படும் இந்து சமுத்திரத்தைத் தொடுகின்ற கடலின் கரையோரத்தில் உள்ள பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சி (The Indian Ocean Rim Association- IORA) பற்றியும் மற்றும் இதர இராஜதந்திரச் செயற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
ஜூன் 20 14:56

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?

ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் என்ன விடயம் பற்றியது தெரியுமா? அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் மறைமுக ஒழுங்கில் பசில் ராஜபக்ஷவுடன் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி ஓர் உடன்பாட்டுக்கு வருவது தொடர்பானது. அதேவேளை இந்தியாவும் புலம்பெயர் சமூகத்துக்குள் 'மறுசீரமைப்பு' என்ற பெயரில் ஊடுருவுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஜூன் 19 21:13

மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் இந்திய மருத்துவக் கழிவுகள்

(மன்னார், ஈழம் ) இலங்கை வட மாகாணம் மன்னார் மாவட்டக் கடற்கரைகளில் இந்தியா நாட்டின் மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிற் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். ஏலவே கொழும்பில் தீ விபத்திற்கு உள்ளான எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV- X Press Pearl) சரக்கு கப்பலில் இருந்து கடலில் மூழ்கிய பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மையுடைய இரசாயனப் பொருட்கள் மன்னார் மாவட்டக் கடற்கரைகளின் பல இடங்களிலும் கரையொதுங்கி கடற்கரைகள் மாசடைந்து வரும் நிலையில் தற்போது இந்தியா நாட்டின் மருத்துவக் கழிவுகளும் கரையொதுங்கி மன்னார் மாவட்ட கடற்கரைப் பகுதிகளை மேலும் மாசடையச் செய்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
ஜூன் 18 21:42

13 ஆவது திருத்தச் சட்டத்திற்குரிய அதிகாரங்கள் மீள பெறப்படுகின்றன

(வவுனியா, ஈழம்) பல்லாயிரக்கணக்கான உயிர் தியாகத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஆட்சிக்கு வரும் இலங்கை சிங்களப் பேரினவாத அரசுகள் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் தற்பொழுது மாகாண சபைகளுக்கு உள்ள கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளின் அதிகாரங் களையும் பறித்தெடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்ப தாகத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அ. சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 18 19:59

கடற்பரப்பில் பழைய வாகனங்கள் அமிழ்த்தப்படுவதற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியா இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், இலங்கை கடற்றொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்பரப்பில் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளினால் தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனைக் கண்டித்தும் இவ்விடயத்தில் இந்தியா மத்திய அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இராமேஸ்வரம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக கடந்த புதன்கிழமை காலை நடைபெற்ற மேற்படிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இராமேஸ்வரம் மற்றும் அதன் அருகில் உள்ள மீனவக் கிராமங்களைச் சேர்ந்ந பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
ஜூன் 17 23:02

இந்தியத் தூதுவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

(வவுனியா, ஈழம்) கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை இன்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பு 7 இல் உள்ள இந்தியத் தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன், மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.