நிரல்
ஒக். 24 21:06

நானாட்டான் பிரதேச சபையின் புதிய உறுப்பினர் நியமனம்

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான புதிய உறுப்பினராக முருங்கன் கற்கிடந்த குளத்தைச் சேர்ந்த பெனடிற் யாக்கோப்பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நானாட்டான் பிரதேச சபைக்கு ஏலவே தெரிவாகிய உறுப்பினர் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்த நிலையில் அவரின் வெற்றிடத்திற்கே மேற்படி உறுப்பினர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நானாட்டான் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பிரதேச சபை உறுப்பினராக நானாட்டான் ரசூல் புதுவெளியைச் சேர்ந்த நாகூர் மீரா ராசிக் பரீத் தெரிவானார்.
ஒக். 23 20:18

மன்னார் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட பல வைத்திய உபகரணங்கள் மற்றும் விலையுயர்ந்த அத்தியாவசிய உயிர் காக்கும் கருவிகள் ஆகியன எருக்கலம்பிட்டி தனவந்தர்கள் மற்றும் "காதர் ஹாஜீயார்" எனும் அமைப்பினரால் கடந்த திங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. மன்னார் எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க மன்னார் எருக்கலம்பிட்டி மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதியும் மனித உரிமை அமைப்புகளின் ஆர்வலருமான எம்.ஏ.சி. கமால்தீனின் அயராத முயற்சி எடுத்திருந்தார்.
ஒக். 22 21:53

நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்- விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறு உறுப்பினர்கள் வலிறுத்தல்

(மட்டக்களப்பு, ஈழம்) விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். இன்று காலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும், வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது. அதன் பின்னர் சுலோக அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் விவசாயகளுக்கு உரம் வழங்க வேண்டுமெனக் கோசம் எழுப்பினர்.
ஒக். 21 17:38

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளில் சந்தேகம்- பகிரங்கமாகக் கூறுகிறார் பேராயர்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால், பேராயர் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். விசாரணைகள் தொடர்பாகச் சந்தேகத்துக்குரிய கேள்விகளை பேராயர் எழுப்பினார். கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஆராதனையில் நிகழ்த்திய பிரசங்கத்தின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒக். 20 10:19

மின் நிலையம் அமெரிக்காவிடம்- உயர் நீதிமன்றத்தில் மனு

(வவுனியா, ஈழம்) கொழும்பின் அயல் மாவட்டமான கம்பகா மாவட்டத்தில் உள்ள கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதைத் தடுக்குமாறு கோரி கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் இணைந்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஒக். 19 10:01

தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

(மன்னார், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் மேல் நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றம் ஆகியன அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒக். 18 09:55

மடு கோயில்மோட்டை காணி விவகாரம்- தெரடர்ந்தும் ஆர்ப்பாட்டம்

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயில்மோட்டை எனப்படும் அரச காணி, சிலரினால் அபகரிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி அதனைக் கண்டிக்கும் வகையில் பெரியபண்டிவிரிச்சான் மற்றும் சின்னப்பண்டிவிரிச்சான் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று 18ஆம் திகதி புதன்கிழமை காலை மன்னார் நகரில் மேற்கொண்டனர்.
ஒக். 17 21:12

நிருபமா ராஜபக்சவின் சொத்துக்களை வெளிப்படுத்தவும்

(வவுனியா, ஈழம்) பண்டேரா பேப்பர்ஸ் ஆவண விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் சொத்து விபரங்களை ராஜபக்ச அரசாங்கம் வெளியிட வேண்டுமென கொழும்பில் இருந்து இயங்கும் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் (Transparency International) வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள இந்த மூன்று அரச நிறுவனங்களும் நிருபமா ராஜபக்சவின் சொத்து விபரங்களை உடனடியாக வெளிப்படுத்தி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளது.
ஒக். 16 20:50

மன்னாரில் 31 ஆயிரத்து 339 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கை சுமார் 31 ஆயிரத்து 339 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை தொடர்பான விஷேட கூட்டம் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரன்லி டி மெல் தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒக். 14 10:28

மலையகத் தமிழர்களின் போராட்டங்கள் பற்றி எடுத்துக்கூறும் வெந்து தணியாத பூமி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைத்தீவின் மலையகத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த வரதன் கிருஸ்ணா என்ற மூத்த ஊடகவியலாளர், வெந்து தணியாத பூமி என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கனடாவில் வாழும் வரதன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் பங்கெடுத்த ஒருவர். மலையகத் தமிழர்களின் விடுதலையும் போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்ற கருத்தைக் கொண்ட வரதன். ஆரம்பகாலங்களில் மலையகத்தில் வாழ்ந்த காலங்களில். அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறைகள் பற்றி இந்த நூலில் விபரிக்கிறார். குறிப்பாகத் தனது போராட்ட வாழ்வு. போராட்டத்தினால் சிறைக்குச் சென்ற அனுபவங்கள் பற்றியெல்லாம் நூலில் விபரிக்கிறார் வரதன் கிருஸ்ணா.