செய்தி: நிரல்
மே 06 23:22

போராட்டங்களை அடக்க அவசரகாலச் சட்டம் அமுல்

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால். இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் நலனைப் பாதுகாக்கவும் அத்தியாவசிய சேவைகளைப் பேணவும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும்போது ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துவது தடைசெய்யப்படும். ஆகவே ஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மீளப் பெறவேண்டுமென கொழும்பில் உள்ள மனித உரிமை சட்டத்தரணிகள் கேட்டுள்ளனர்.
மே 05 22:17

நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக மாணவர்கள்- பொலிஸார் மோதல்

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குப்போ என்ற போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற வாளாகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரவு வரை நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் எட்டு மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரும் மாணவர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். பொலிஸார் கம்பிகளினால் அமைத்த வேலிகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் நாடாளுமன்ற வீதிக்குள் நுழைய முற்பட்டபோதே மோதல் ஏற்பட்டது. கம்பி வேலிகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் முதலாவது வீதிக்குச் சென்றபோது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
மே 04 09:46

நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்கிறார் அமைச்சர் தினேஸ்

(வவுனியா, ஈழம்) எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை மூன்று மொழிகளிலும் கையளிக்கப்பட வேண்டும் என்றும் குறைந்தது ஒருவாரம் அதனை வாசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். அது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அமைச்சர் வெளியிட்டார்.
மே 03 09:25

சஜித் அணிக்குள் முரண்பாடுகள் அதிகரிப்பு- எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள் தொடருகின்றன

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதிவியில் இருந்து விலக வேண்டுமெனப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையிலும் அரசாங்கம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் பலர் பங்குபற்றவில்லை.
ஏப். 30 10:56

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் பொறுக்கூறவில்லை- உறவினர்கள் ஆதங்கம்

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதியில் காணாமல் போன எமது அன்புக்குரிய உறவுகளை மீட்டுத்தருமாறு தொடர்சியாகப் போராடிவரும் நிலையில் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் அதையிட்டு அலட்டிக்கொள்ளாமல் வெறுமனே அவர்களின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதன்மூலம் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும், காதுகள் மந்தமாகியுள்ளதுடன், கண்களும் பார்வையிழந்து குருடாகிவிட்டது என்றே, கருதவேண்டியுள்ளதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
ஏப். 29 19:48

காலிமுகத்திடல் போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்குத் தடை

(முல்லைத்தீவு) எதிர்வரும் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மே தினம் அன்று நடைபெறவுள்ள அரசியல் கட்சிகளின் பேரணிகள, பாதயாத்திரைகள் எதுவும் காலி முகத்திடலில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்துடன் இணைய முடியாதென போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் கலப்புகள் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் என்பதால். மே தினம் அன்று கொழும்பில் ஊர்வலம், பேரணிகள் நடத்த நடத்தவுள்ள அரசியல் கட்சிகள் எந்தவொரு காரணம் கொண்டும் காலிமுகத்திடலுக்கு வரக்கூடாதென அறிவுறுத்தியுள்ளனர்.
ஏப். 28 10:48

முரண்பாடுகள் அதிகரிக்கின்றதா? அமைச்சர்களும் மோதல்

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையச் செய்திகள் கூறுகின்றன. இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர் டளஸ் அழிகபெருமா உள்ளிட்ட சிலருடன் முரண்பட்டனர். ஆனால் மகிந்த ராஜபக்ச தலையிட்டு அதனைத் தடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏப். 27 22:12

இலங்கைத்தீவில் நாளை பணிப் பகிஸ்கரிப்பு- கன்டி பாதயாத்தரை கொழும்பை வந்தடைகின்றது

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாளை வியாழக்கிழமை இலங்கைத்தீவு முழுவதிலும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள். வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படுமென தொழிற் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கன்டியில் ஆரம்பித்த பாதயாத்திரை நாளை கொழும்பை வந்தடைகின்றது. இதற்கு ஆதரவாகவே பணி பகஸ்கரிப்புப் போராட்டமும் நாளை நடைபெறவுள்ளது.
ஏப். 26 22:21

உலக வங்கி 600 மில்லியன் வழங்க இணக்கம்

(வவுனியா, ஈழம்) தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக கொழும்பில் உள்ள உலக வங்கி அதிகாரிகள் குழு ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளது. உதவித் தொகையாக அறுநூறு மில்லியின் அமெரிக்க டொலர் வழங்கப்படுமென உலக வங்கி அதிகாரிகளினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக முதற்கட்டமாக நாநூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான கொழும்பில் உள்ள நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொள்பிட்டியில் உள்ள ஜனாதிபதி செயலகம் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏப். 22 22:37

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதில் தாமதம்

(முல்லைத்தீவு) கோட்டபாய வீட்டுக் போக வேண்டுமென வலியுறுத்தி இளைஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை ஒப்படைப்பது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பிரதமர் மகிந்த ராஜபக்ச இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தில் உள்ள சில முக்கியமான அதிகாரங்களை உடனடியாக நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி மீளவும் திருத்திச் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கட்சித் தலைவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.