நிரல்
ஓகஸ்ட் 30 20:56

கொழும்பில் பேரணி-பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்

(வவுனியா, ஈழம்) கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்ட கலகமடக்கும் பொலிஸார், வீதிகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யுவதிகள் மீது சரமாரியாகத் தாக்கினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் அந்தச் சட்டத்தின் கைது செய்யப்பட்ட காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்யுமாறு வற்புறுத்தியுமே இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 28 23:13

சர்வதேச நாணய நிதியத்தை இறுக்கிப் பிடிக்கும் சீனா

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான இலங்கைத்தீவின் பொருளாதார நிலைமை அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதாக அமையுமென வடமேல் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா பி.பி.சி செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். அதிகளவு கடன் வழங்கிய சீன அரசு, இலங்கைக்கு மேலும் கடன் வழங்கவும் வழங்கிய கடன்களை மீளப் பெறுவதற்கும் விதிக்கப்படும் நிபந்தனைகள் இலங்கைக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்துள்ளதாகக் கருதப்படும் நிலையில் இக் கருத்தைப் பேராசிரியர் வெளியிட்டிருக்கிறார். இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால், நிலையான மத்திய வங்கி வேண்டும்.
ஓகஸ்ட் 27 17:20

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித எலும்புக்கூடுகளை மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு

வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின் திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மனித எலும்புகள் அடங்கிய பொதிகளை மன்னார் நீதிவான் முன்னிலையில் பிரித்தெடுத்து அமெரிக்க புளொரிடா மாநிலத்திற்குப் பகுப்பாய்வுகுக்கு அனுப்பிவைக்க மன்னார் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் புதன்கிழமை மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குறித்த வழக்கு விசாரணையின் போதே மன்னார் நீதவான் மேற்படி கட்டளையை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 25 08:36

நிதியைப் பெறவே தேசிய அரசாங்கம்- எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என்கிறார் பேராசிரியர் நாலக

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேசத்தின் உதவிகளைப் பெற வேண்டுமானால். சா்வகட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் கொழும்பில் சிங்கள அரசியல் தலைவா்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டாலும், அரசாங்கத்துடன் இணையாமல் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாகச் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கு இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டுமென்பதை சஜித் பிரேமதாச உணர்ந்துள்ளதாகவும் அவருடைய கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஓகஸ்ட் 24 21:50

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்புக்களை நடத்தியபோதும், விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் புதன்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட உரையாடல்களில் திருப்தி இல்லையென நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கமோ, சர்வதேச நாணய நிதியமோ அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவுமே தெரிவிக்கவில்லை.
ஓகஸ்ட் 24 09:48

முல்லைத்தீவு வட்டுவாகலில் படை முகாமை நிரந்தரமாக்கக் காணி அபகரிப்பு - இழப்பீடுகளை ஏற்க மக்கள் மறுப்பு

(முல்லைத்தீவு) இலங்கைத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பாரம்பரியக் காணிகளை இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது. வடமாகாணம் முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபாய கடற்படை முகாமுக்காக மக்களின் காணிகளை அளவிடும் பணிகள் பொது மக்களின் எதிர்ப்பினால் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது. நில அளவீட்டுக்காக சென்ற நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர். இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் காணி அபகரிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஓகஸ்ட் 23 08:34

பால்மா உட்பட முந்நூறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தற்காலிகமாகத் தடை

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடியை மையமாக் கொண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பொதியிடப்பட்ட பால்மா வகைகள் உட்பட முந்நூறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானி இதழ் இரவு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 22 21:33

தேசிய அரசாங்கம் அமைப்பதில் தொடரும் இழுபறி - ரணில் சஜித் சந்திப்பில் இணக்கமில்லை

(வவுனியா, ஈழம்) தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல். சர்வகட்சியாக அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாச ஆகியோர் திங்கட்கிழமை முற்பகல் சந்தித்து உரையாடியிருந்தனர். இதன்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியிருக்கிறார். ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் சந்திப்பில் பங்குபற்றியிருந்தார்.
ஓகஸ்ட் 21 13:12

இலங்கைத்தீவுக்கான நல்லிணக்கத்தை மாத்திரமே நிபந்தனையாக முன்வைக்கும் சர்வதேச நாணய நிதியம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் கடன் நெருக்கடி மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தால் மாத்திரமே, பொருளாதார நெருக்கடியில் இருந்து குறைந்தபட்சம் மீண்டெழ முடியும். இதற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுகிறார். தேசிய அரசாங்கத்தை அமைக்காமல் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைத்தால், பாரிய நிதியுதவிகள் எதனையும் சர்வதேச நாணய நிதியும் வழங்காது.
ஓகஸ்ட் 20 21:32

போராட்டக்காரா்கள் மீது பிரயோகிக்கும் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்களுக்குத் தடை விதிக்கவும்- ஜெனீவா மனித உரமைச் சபை

(வவுனியா, ஈழம்) இலங்கையில் மக்கள் மற்றும் மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை அடக்க இலங்கை இராணுவத்தினரும் கலகமடக்கும் பொலிஸாரும் பயன்படுத்தும் கண்ணீர் புகை பிரயோகத்தைத் தடை செய்யுமாறு ஜெனீவா மனித உரிமைச் சபை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே கலகமடக்கும் பொலிஸார் பயன்படுத்திய கண்ணீர் புகை குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம் உள்ளதாக ஜெனிவா மனித உரிமைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.