நிரல்
செப். 06 09:22

இந்தியா வழங்கியதையும்விட குறைவான நிதியுதவிகளை வழங்கிய சர்வதேச நாணய நிதியம்

(வவுனியா, ஈழம்) இந்தியா ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு வழங்கிய சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் விட அரைவாசித் தொகையை மாத்திரமே ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. அதுவும் இலங்கை அரசாங்கம் உறுதியளித்தபடி தனது பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்தால் மாத்திரமே தீர்மானிக்கப்பட்ட நிதியை வழங்க முடியுமென ஐ.எம்.எப் மூத்த அதிகாரி பீற்றர் ப்ரூயர் (Peter Breuer) கூறுகிறார். நீண்ட பாதையின் ஒரு ஆரம்பம் மாத்திரமே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆகவே இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தாலும், மெதுவான எச்சரிக்கை ஒன்றையும் ஐ.எம்.எப் இலங்கைக்கு விட்டுச் சென்றிருக்கின்றது.
செப். 04 08:42

ஜெனீவாவுக்குக் கணக்குக் காட்ட அரசாங்கத்துக்கு வசதியாக அமைந்த யாழ் ஆயர் யஸ்ரின் - ரணில் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வு எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில். இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசத்தைச் சென்ற பதினெட்டாம் திகதி ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடியிருக்கிறார். இச் சந்திப்புக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தாரா அல்லது ஆயர் யஸ்ரின் சந்திப்பதற்கான நேரத்தைக் கேட்டெடுத்தாரா என்று தெரியவில்லை. ஆனாலும் இச் சந்திப்பின் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் சார்பாகக் கவனம் எடுக்கின்றது என்ற ஒரு பொய்யான பரப்புரையைச் சர்வதேச அரங்கில் மேற்கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளது.
செப். 03 14:47

விடுதலைப் போராட்டத்தைத் திரைப்படமாக எடுக்க முற்படுவோர் கவனிக்க வேண்டியதென்ன?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைப் போராட்டம், தமிழர் வாழ்வுரிமை மறுப்புத் தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களை மையமாகக் கொண்டது. அதனைக் குழப்புவதற்கான புவிசார் அரசியல் - பொருளாதாரப் பின்னணிகளும் உண்டு. ஆகவே தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகப் படம் எடுக்க முற்படுவோர் இப் பின்புலங்களின் அடிப்படையைக் கொண்டே கதை வசனங்களை அமைக்க வேண்டும். தனியே வன்முறைக் காட்சிகளாக மாத்திரம் காண்பித்து உணர்ச்சிகரமாகச் சித்தரிப்பது வரலாற்றுத் தவறு. ஆனால் தாக்குதலின்போது கையாளப்பட்ட மரபுவழி இராணுவத் தந்திரோபாயங்கள், (Military Strategies) தாக்குதல் உத்திகள் (Attack Tactics) பற்றிய இராணுவ அறிவுரீதியான நுட்பங்களைப் படத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
செப். 02 22:10

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நூற்றுப் பதினைந்து வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்ற ஓகஸ்ட் மாதம் முப்பதாம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. முப்பத்து ஒராம் திகதி ஆரம்பித்த விவாதம் வெள்ளிக்கிழமை இரண்டாம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் பெறப்பட்டன.
ஓகஸ்ட் 31 09:18

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்

(வவுனியா, ஈழம்) நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைத்தீவுக்கான அவசரகால கடன் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வியாழக்கிழமை விடுக்கப்படுமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுப் பெற்ற கடன்களைச் சுமையாகக் கொண்டுள்ள இலங்கை, நாணய நிதியத்திடமிருந்து மூன்று பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கோரியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவசரகாலக் கடன் உதவிகள் கோரப்பட்டுள்ளதால், அது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஓகஸ்ட் 30 22:09

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சர்வதேச நீதிகோரிப் போராட்டம்- பெருமளவு மக்கள் பங்கேற்பு

(முல்லைத்தீவு) இலங்கைத்தீவில் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினரால் 2009 இற்கு முன்னரும் அதன் பின்னரான சூழலிலும் கடத்தப்பட்டும் சரணடைந்தும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரி இப் போராட்டம் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டம் இரண்டாயிரம் நாட்களைத் கடந்த நிலையில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 30 20:56

கொழும்பில் பேரணி-பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்

(வவுனியா, ஈழம்) கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்ட கலகமடக்கும் பொலிஸார், வீதிகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யுவதிகள் மீது சரமாரியாகத் தாக்கினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் அந்தச் சட்டத்தின் கைது செய்யப்பட்ட காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்யுமாறு வற்புறுத்தியுமே இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 28 23:13

சர்வதேச நாணய நிதியத்தை இறுக்கிப் பிடிக்கும் சீனா

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான இலங்கைத்தீவின் பொருளாதார நிலைமை அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதாக அமையுமென வடமேல் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா பி.பி.சி செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். அதிகளவு கடன் வழங்கிய சீன அரசு, இலங்கைக்கு மேலும் கடன் வழங்கவும் வழங்கிய கடன்களை மீளப் பெறுவதற்கும் விதிக்கப்படும் நிபந்தனைகள் இலங்கைக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்துள்ளதாகக் கருதப்படும் நிலையில் இக் கருத்தைப் பேராசிரியர் வெளியிட்டிருக்கிறார். இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால், நிலையான மத்திய வங்கி வேண்டும்.
ஓகஸ்ட் 27 17:20

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித எலும்புக்கூடுகளை மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு

வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின் திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மனித எலும்புகள் அடங்கிய பொதிகளை மன்னார் நீதிவான் முன்னிலையில் பிரித்தெடுத்து அமெரிக்க புளொரிடா மாநிலத்திற்குப் பகுப்பாய்வுகுக்கு அனுப்பிவைக்க மன்னார் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் புதன்கிழமை மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குறித்த வழக்கு விசாரணையின் போதே மன்னார் நீதவான் மேற்படி கட்டளையை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 25 08:36

நிதியைப் பெறவே தேசிய அரசாங்கம்- எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என்கிறார் பேராசிரியர் நாலக

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேசத்தின் உதவிகளைப் பெற வேண்டுமானால். சா்வகட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் கொழும்பில் சிங்கள அரசியல் தலைவா்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டாலும், அரசாங்கத்துடன் இணையாமல் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாகச் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கு இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டுமென்பதை சஜித் பிரேமதாச உணர்ந்துள்ளதாகவும் அவருடைய கட்சித் தகவல்கள் கூறுகின்றன.