நிரல்
டிச. 07 18:52

ஜப்பான் அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துச் செய்த ஆட்சியாளர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜப்பான் அரசின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் சேவைத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக ரத்துச் செய்துள்ளது. இத் திட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக ஜப்பான் அரசுடன் எந்தவிதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்றும், இதனால் ஐநூற்றுப் பதினாறு கோடி ரூபாவை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் ஜப்பான் கோரியுள்ளது. சர்வதேச விதிகளின் பிரகாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டால் இதனைவிடக் கூடுதல் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச. 06 20:05

வெளிநாட்டுத் தூதுவர்களுடன் ரணில் உரையாடல்

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கு நிதி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரை அழைத்துக் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க தூதுவர்களையும் தூதரக அதிகாரிகள் சிலரையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
டிச. 05 21:27

அரசாங்கத்துக்கு எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஆதரவு

(வவுனியா, ஈழம்) வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப் பிரமாணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் சிலர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகின்றது. ராஜித சேனரட்ன சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்.
டிச. 03 19:36

மன்னார் பள்ளிமுனை காணி அபகரிப்பு வழக்கின் தீர்ப்பு ஜனவரியில்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் பகுதியான மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை மேற்கு பகுதி மக்களால் கடற்படையினருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் கூர்மைச் செய்தி தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவர்களின் காணிகளை, இலங்கை கடற்படையினர் ஆக்கிரமித்து தற்பொழுது தொடர்ந்தும் அங்கு நிலை கொண்டுள்ளனர். இந்தநிலையில் கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் வீடுகளையும் காணிகளையும் இழந்தவர்களில் இருபத்து நான்கு உரிமையாளர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் கடற்படையினருக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
டிச. 02 22:54

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவில்லையானால் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) முறைப்படி நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தாமல் தேர்தல்கள் ஆணைக்குழு இரட்டை வேடம் போடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவுசெலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல் ஆணைக்குழுவை முற்றுகையிடும் நிலை ஏற்படும் என்றும் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தயாராக வேண்டும். ஆனால் அது பற்றி எதுவிதமான கருத்துக்களையும் கூறாமல் அரசாங்கம் அமைதி காக்கிறது.
டிச. 01 22:26

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை

(வவுனியா, ஈழம்) மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக இதுவரையும் அரசாங்கத்திடம் இருந்து உத்தரவுகள் கிடைக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் குறித்து கொழும்பில் உள்ள சிவில் சமூக அமைப்புகளின பிரதிநிதிகள் வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்தனர். இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு செப்ரெம்பர் மாதம் பரிந்துரைத்துள்ளது.
நவ. 30 21:47

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கியிடம் இருந்து கடன்களைப் பெற இலங்கை கடும் முயற்சி

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடியை மேலும் குறைக்கச் சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவற்றுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருகின்றது. அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த நிதியுதவியைப் பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளுடனான மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து எதிர்வரும் ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
நவ. 29 22:43

சந்தேகநபர் கொலை செய்யப்பட்டமை அராஜகம்- சஜித்

(வவுனியா, ஈழம்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேக நபர் ஒருவர் கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை சட்டத்தை மதிக்காத செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இலங்கையில் அராஜக செயற்பாடு தலைதூக்கியுள்ளது என்றும் விமர்சித்தார். நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றால். பொலிஸாரின் செயற்பாடுகளிலும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நவ. 27 12:13

தேசமாகச் சிந்திக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் - ரணில் கையாளும் நகர்வு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்ற ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் கொள்கையைத் தற்போது ரணில் விக்கிரமசிங்க கையாளுகிறார் என்பதைவிட, சிங்கள ஆட்சியாளர்களின் கொள்கைதான் அது என்பதை ஜே.வி.பி நிரூபித்து வருகிறது. சென்ற புதன்கிழமை கொழும்பில் ஜே.வி.பி தமிழ் மக்களுடன் நடத்திய சந்திப்பில் அது வெளிப்பட்டுள்ளது. இது பௌத்த சிங்கள நாடு என்பதுதான் ஜே.வி.பியின் கொள்கை. அதன் உறுப்பினர்களுடைய நாடாளுமன்ற உரைகளில் இருந்து இக் கொள்கை ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்திப்பின் மூலம் மேலும் அது பட்டவர்த்தனமாகியுள்ளது.
நவ. 27 08:31

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரா் நினைவேந்தல் நிகழ்வுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடக்குக் கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. சென்ற பதினைந்தாம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள், ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 க்கு அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. பெருமளவு மக்கள் பங்குபற்றினர். மலர் தூபி தீபம் ஏற்றி இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக, கிழக்குப் பல்கலைக்கழக, மாணவர்களால் போராட்டத்தில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.