செய்தி: நிரல்
ஜன. 10 14:30

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை வெளியீடு - தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் இல்லை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை இதுவரை சரியாக வெளியிடப்படாத நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி வரை நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ள கைதிகள் என ஆயிரத்து 299 பேர் உள்ளதாக இலங்கை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 10 12:14

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழ் மக்களை மக்களை இலக்கு வைத்து கடந்த காலங்களில் இலங்கை அரச படையினராலும் சிங்கள அரச கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட படுகொலைகளில் ஒன்றான உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது.
ஜன. 10 10:16

பொங்கல் தினத்தன்று கண்டன ஆர்ப்பாட்டம் - போராட்டத்தைக் குழப்ப முயற்சி - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசனம்

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாடுகளின் துணையுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வவுனியாவில் நேற்று புதன்கிழமை கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜன. 09 22:30

திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத்தளம் - மைத்திரியிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கும் ரணில் தரப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் உள்ள இலங்கைக் கடற்படை முகாமில் அமெரிக்கக் கடற்படைத் தளமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அது குறித்து தனக்கு எதுவுமே தெரியாதெனக் கூறியுள்ளார். அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்குரியது என்றும் வெளியுறவு அமைச்சுக்கு அந்த விடயத்தில் தொடர்பில்லை எனவும் திலக் மாரப்பன கூறியுள்ளார். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் மகிந்த தரப்பு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜன. 09 14:30

மட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத நோயினால் கால்நடைகள் உயிரிழப்பு - திட்டமிட்டா சதியா என தொழிலாளர்கள் சந்தேகம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மைலத்தமடு மற்றும் பெரிய மாதவணைப் பகுதியில் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை பகுதியில் உள்ள கால்நடைகள் அடையாளங்காணப்படாத தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான மருந்துகளைக் கொடுத்தவுடன் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படத்துவதாக கால்நடை பண்ணையாளர் சங்கத்தின் செயலாளர் த.நிமலன் தெரிவித்தார்.
ஜன. 09 09:58

மடுத் திருத்தலத்தின் நிர்வாகம் தொடர்ந்தும் மன்னார் மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்- ஆயர் இம்மானுவல்

(மன்னார், ஈழம்) மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள மடுத்திருத்தலம் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் முழு நிர்வாகியாகவும் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினராகவும் தானே தொடர்ந்து செயற்படுவேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சரியாக வருமாக இருந்தால் மாத்திரமே தாம் அதற்கு அனுமதி கொடுப்போம் என்றும் இல்லாவிட்டால் அது தேவையில்லை என்று கூறுவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக ஆங்கில செய்தி இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது ஆயர் குறிப்பிட்டார்.
ஜன. 08 15:30

நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி - மொத்த மதிப்பீட்டு செலவு 4770 பில்லியன்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாக தாமதமான நடப்பாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை நிதியமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த மதிப்பீட்டு செலவு நான்காயிரத்து 770 பில்லியன் ரூபா என்று இலங்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜன. 08 15:11

யாழ்ப்பாணத்தில் அரச, தனியார் பேருந்து சாரதி நடத்துனர் மோதல் - அரச பேருந்து சாரதி வைத்தியசாலையில் அனுமதி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் சேவையில் ஈடுபட்டுவரும் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து சாரதிகளுக்கும் இடையேயான முறுகல் சற்றுத் தணிந்திருந்த நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சாரதி மீது தனியார் பேருந்து நடத்துனர் தாக்குதல் மேற்கொண்டதனால் குறித்த சாரதி காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆலடி சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு 7.30 அளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாண செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
ஜன. 08 11:27

மன்னார் - முள்ளிக்குளம் மக்கள் நிர்க்கதி, அரச அதிகாரிகளால் ஏமாற்றப்படுகின்றனர் - அருட்தந்தை லோரன்ஸ் லியோன்

(மன்னார், ஈழம்) இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பை அடுத்து தமது சொந்த நிலங்களிலிருந்து இடம்பெயர்ந்த மன்னார் முள்ளிக்குளம் தமிழ்க் கிராம மக்கள் இதுவரை முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை எனவும் பகுதியளவில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாததனால் மக்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை வணபிதா லோரன்ஸ் லியோன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசாங்கத்தினாலும் அரச அதிகாரிகளினாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதாக கூர்மை செய்தித் தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின்போது சுட்டிக்காட்டினார்.
ஜன. 07 17:43

வடமாகாண ஆளுநராக பௌத்த துறவிகள் குறித்த நுாலை எழுதிய சுரேன் ராகவன் மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம்

(முல்லைத்தீவு, ஈழம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேற்பார்வையில் இலங்கை முப்படைத் தளபதிகள், இலங்கை அரச உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் அமைச்சுக்களின் செயளலாளர்கள். மாகாண சபைகளின் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் கிழக்கு உட்பட ஐந்து மாகாணங்களின் ஆளுர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் வடமாகாணத்திற்கான ஆளுநராக சுரேன் ராகவன் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டு;ள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.