செய்தி: நிரல்
ஓகஸ்ட் 26 22:51

அலுவலகம் திறக்கப்பட வேண்டுமா இல்லையா- தீர்மானிக்க வேண்டியது யார்?

(கிளிநொச்சி. ஈழம்) இலங்கை அரசாங்கம் தங்கள் தேவைக்காக யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியில் அவசரமாகத் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்திற்கு (Office on Missing Persons) (OMP) எவரும் சென்று முறையிடமாட்டார்களென்று, இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் வடக்குக்- கிழக்கு மாகாண இணைப்பாளர் யோகராசா கனகரஞ்சினி கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட ஐந்துபேரின் விபரங்களை ஆதாரங்களுடன் இந்த அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸிடம் கையளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமது சங்கம் கேட்டிருந்ததாகவும் ஆனால் இதுவரையும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை என்றும் அவர் இன்று திங்கட்கிழமை கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 26 16:59

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கச் செயற்பாட்டாளர் விபத்தில் பலி- மனைவி படுகாயம்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டுத் தமது பிள்ளைகளைத் தேடி அலையும் பெற்றோர் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். சிலர் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். வேறு சிலர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். இந்த ஓகஸ்ட் மாதத்தில் இரு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முவர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாற்பது பேர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர். முல்லைத்தீவு கணுக்கேணியைச் சேர்ந்த 61 வயதான பொன்னுத்துரை திருஷ்னசம்பந்தர் என்ற தந்தை ஒருவர் கடந்த வியாழக்கிழமை விபத்தில் பலியாகியுள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓகஸ்ட் 24 15:33

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் யாழ் நகரில் அதிகாலை திறக்கப்பட்டது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் அங்கீகாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்தின் (Office on Missing Persons) (OMP) கிளையை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அலுவலகத்தைத் திறப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக அவசர அவசரமாக இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. போர்க்காலத்திலும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலிலும வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படையினராலும் ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபையில் 2014 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஓகஸ்ட் 23 20:12

சுதந்திரக் கட்சியோடு இணையவில்லை- அனந்தி மறுப்பு-கண்டனம்

(யாழ்ப்பாணம், ஈழம்) மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ்ப் பிரிவோடு இணைந்து செயற்படவுள்ளதாக செய்திகளை வெளியிட்ட சில செய்தி ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார். தன்னுடைய சட்டத்தரணிகளோடு இந்த விடயம் தொடர்பாகப் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார். மலையக மக்கள் முன்னேற்றக் கழக உறுப்பினர்களுடன் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் வெளியிட்ட கருத்தை சில இலத்திரனியல் ஊடகங்கள், சில செய்தி இணையத் தளங்கள், சில நாளேடுகள் திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 23 13:06

சர்வதேச நீதியை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ்

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் அதிகளவு குவிக்கப்பட்டு இராணுவ மயமாக்கல் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் நடத்தப்படவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ் பேருந்து நிலையத்தில் எழுக தமிழ் நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தி துண்டுப்பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் வெளிப்படுத்தப்படுமென விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 22 12:35

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடியலைந்த தந்தை மரணம் - வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடிவரும் வயது முதிர்ந்த பெற்றோர் எதுவித தீர்வும் கிடைக்காது உயிரிழந்துவரும் நிலையில், வவுனியா - ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இலங்கை இராணுவத்திடம் தனது மகனை ஒப்படைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தனது மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தந்தை கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி அலைவோருக்கு விரைவில் உரிய தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் நேற்றுப் புதன்கிழமை கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஓகஸ்ட் 22 11:14

குடும்ப விபரங்கள் பொலிஸாரால் பதிவு- விண்ணப்பப் படிவங்கள் கையளிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் அவரது பாதுகாப்பைக் காரணங்காட்டி மீண்டும் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன அங்கு செல்லவுள்ளார். அதனால் பாதுகாப்புக் கருதி யாழ்ப்பாண நகர் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் உள்ள குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள் பதிவு செய்ய்ப்படுகின்றன. கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாகவு பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பொலிஸார் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 21 23:19

தமிழ் வாக்குகள் - ரணில் தரப்புக்கும் நம்பிக்கையற்ற நிலை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இழுபறி நீடிக்கின்றது. ஆனாலும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தானே என்று அமைச்சர் சஜித் பிரேமதாச கொழும்பில் ஊடகங்களிடம் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதன்படி கரு ஜயசூரியவே ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகின்றார். கரு ஜயசூரிய சபாநாயகர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக சபாநாயகர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன.
ஓகஸ்ட் 21 11:11

வாகனேரிப் பிரதேசத்தில் கடனை மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்ய முயற்சி

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை அரசாங்கத்தின் அனுமதியோடு வடக்குக் - கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இயங்கும் அரச, தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கிவரும் நுண்கடன் திட்டங்களினால் போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி நிதி நிறுவனங்கள் நுண்கடன்களை வழங்கி வருகின்றன. தொழில் வாய்ப்புகள் இன்றி வறுமையில் வாழும் முன்னாள் போராளி்கள் பெற்ற நுண்கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு - வாகனேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான ஓவியராசா கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 20 23:21

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை - வேலுக்குமார் விளக்கம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் உறுதியளித்துள்ளதாக அரசியல் கைதியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார். கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்று தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த வேலுக்குமார் இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுமெனவும் பொது மன்னிப்பு அடிப்படையில் அல்லது புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிப் பின்னர் விடுதலை செய்வது குறித்து ஏனைய அமைச்சர்களோடும் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.