நிரல்
டிச. 25 23:12

விசாரணைக்காகச் சிவாஜிலிங்கம் கொழும்புக்கு அழைப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக்- கிழக்குத் தாயகத்தை மையப்படுத்தி இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.க. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள இலங்கைப் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவின் தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து விசாரணைக்கான அழைப்புக் கடிதத்தை ஒப்படைத்ததாகச் சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
டிச. 24 23:50

ஜெனீவாத் தீர்மானத்தை எதிர்கொள்ள இலங்கை தயார்- சுசில்

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தையும் அதன் மூலம் எழவுள்ள சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் ஏனைய அரச நிறுவனங்களிடையே தொடர்புடைய அனைத்து விடயங்களையும் புதிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
டிச. 23 23:38

சுயாதீன நீதிமன்றம் அமைக்குமாறு கோருகிறார் சஜித் பிரேமதாச

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பதவியேற்ற பின்னர், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது. முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படலாமென ஐக்கியதேசியக் கட்சி எதிர்பார்க்கின்றது. மகிந்த ராஜபக்சவை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
டிச. 23 23:07

கொழும்புக்கு வருகை தந்த இந்தியக் கடற்படைத் தளபதி

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை சென்ற சனிக்கிழமை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். இலங்கை இந்தியக் கடற்படையினர் மேற்கொள்ள வேண்டிய கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
டிச. 22 22:44

யாழ் வடமராட்சிக் கிழக்கில் சட்டவிரோத மண் அகழ்வு இடத்தை மக்கள் அடையாளப்படுத்தினர்

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக மக்கள் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தி வரும் நிலையில், சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளைத் தடுப்பதற்குரிய ஏற்பாடுகள் எதுவுமே செய்யப்படவில்லை. இது தொடர்பாக தமிழ்ப் பிரதிநிதிகள் சிலர் ஏற்கனவே எடுத்துக் கூறியிருந்தனர். ஆனாலும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
டிச. 21 22:43

வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களை கொதி நிலையில் வைத்திருக்க விரும்பும் கொழும்பு நிர்வாகம்

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயக மக்களைப் பிரதான அரசியல் மையக்கருத்தில் இருந்து திசை திருப்பும் அரசியல் சதி முயற்சிகள் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுவதாகச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். புத்தர் சிலைகள் வைத்தல். காணி அபகரிப்பு, சட்டவிரோத மண் அகழ்வு என நீடித்துத் தற்போது இலங்கைக்கு விஜயன் வந்த வரலாறுகளையும் சங்கமித்தையின் உருவச் சிலையையும் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படைகளின் ஒத்துழைப்புடன் நிறுவி ஈழத் தமிழ் மக்களை ஆத்திரமடையச் செய்வதாகவும் கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு்க்குப் பின்னரான சூழலில் ஆரம்பித்த இந்த உத்தி 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பை மையப்படுத்திய திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ஊடாக விரிவாக்கம் செய்யப்பட்டன.
டிச. 20 23:09

விசாரணைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் சென்ற குடும்பஸ்த்தரைக் காணவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) கொழும்பில் உள்ள இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்காகக் கடந்த ஐந்தாம் திகதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் இருந்து கொழும்புக்குச் சென்றிருந்த முன்று பிள்ளைகளின் தந்தையொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 48 வயதான பரமு விஜயராஜ் என்பவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காகக் கொழும்புக்குச் சென்று காணாமல் போயுள்ளவரின் மனைவி விஜயராஜ் சந்திரகலா வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
டிச. 20 16:26

ஜெனீவாத் தீர்மானத்தை ரத்துச் செய்ய ஆலோனை- அமைச்சர் தினேஸ்

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை ரத்துச் செய்வது தொடர்பாக புதிய அரசாங்கம் ஆலோசித்து வருவதாக இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான ஜெனீவாத் தீர்மானத்தை ஏற்க முடியாதென இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்த நிலையில் அந்தத் தீர்மானத்தை ரத்துச் செய்வது குறித்து ஆலோசிப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
டிச. 19 22:59

ஜெனீவாத் தீர்மானம் ஏற்புடையதல்ல- வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கோட்டாபய ராஜபக்ச

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான ஜெனீவாத் தீர்மானம் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது என்றும் ஜனாதிபதி கூறுகிறார். கொழும்பிலுள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, 2016 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டம் மிகவும் தவறானது என்றும் இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்கு அது ஆபத்தானது என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறினார்.
டிச. 19 15:59

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்- கண்டித்து ஆர்ப்பாட்டம்

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கை அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கவனஈர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சிவில் சமூக அமைப்புகள், பொது மக்கள் ஒன்றிணைந்து, இந்தப் போராட்டத்தை இன்று காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி நகரில் நடத்தினா். போராட்டத்தில் சிவில் சமூக உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டு எதிர்ப்பு வெளியிட்டனர்.