நிரல்
மார்ச் 12 10:59

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை 14 நாட்கள் தடுத்து வைத்து மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்காக தமி;ழ் பேசும் மக்களின் தாயகமான மட்டக்களப்பு மாவட்டத்தி;ல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. கொரொனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாறு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
மார்ச் 11 23:35

சுயாட்சி அதிகாரத்துக்கான சர்வதேச அங்கீகாரத்தைக் கோரும் கட்சி எது?

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசிய்ல் அணிக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் நீடித்துச் செல்லுகின்றன. யானைச் சின்னத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுமென ரணில் விக்கிரமசிங்க கூறியபோதும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் அணியில் இணைந்து போட்டியிட வேண்டுமெனக் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் முடிவில் மாற்றம் இல்லையென ரணில் விக்;கிரமசிங்க நேற்றுப் புதன்கிழமை முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
மார்ச் 10 23:33

மட்டக்களப்பு கம்பஸில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்- முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) தென் கொரியாவில் இருந்து இல்ங்கைக்குத் திரும்பிய 166 பயணிகளை பராமரிப்பதற்காக மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் செலவில் கட்டப்பட்டு;ப் பாவனையின்றி இருக்கும் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளது. அதனைக் கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு மாணவர்கள் செல்ல முடியாத வகையில் வித்தியாலய நுழைவாயிலை மூடி இன்று காலை முதல் போராட்டம் இடம்பெற்றது.
மார்ச் 10 22:43

முல்லைத்தீவில் 20 வயது இளைஞனைக் காணவில்லை

(முல்லைத்தீவு, ஈழம் ) வடமாகாணம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இருட்டுமடு என்ற கிரமாத்தில் வசித்து வந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணவில்லையெனப் பெற்றோர் முறையிட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாகக் இந்த இளைஞனைக் காணவில்லையெனப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சென்ற 7 ஆம் திகதி சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோர் கூறுகின்றனர்.இருட்டுமடு உடையார் கட்டுக் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பாக்கியராஜா விஜிதரன் என்ற இளைஞனே கடந்த 05.03.2020 அன்று முதல் காணாமல் போயுள்ளார். வீட்டில் இருந்து வெளியில் சென்று பல மணிநேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை என்றும் உறவினர்களின் உதவியுடன் தெரி;ந்த இடங்களில் தேடியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 07 20:55

எட்டுத் தமிழர்கள் கொல்லப்பட்ட வழங்கில் மரண தன்டணை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்குப் பொது மன்னிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம்- மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழர்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பொதுமன்னிப்பளிக்கத் தீர்மானித்துள்ளதாக சிறிலங்காப் பொதுஜன முன்னணித் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிப்பாய் விடுதலை செய்யப்பட்டதாகப் கொழும்பில் பரவலாகப் பேசப்பட்டிருந்தது. ஆனாலும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படவுள்ளதாக கடந்த 2000 டிசம்பர் 19 அன்று மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிட சென்ற பொதுமக்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
மார்ச் 06 17:01

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக் கட்சிகள் தீவிரம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தமிழ்க் கட்சிகள் வேட்புனுக்களைத் தாக்கல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தும், அந்தத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதில் ஒவ்வொரு தமிழ்க் கட்சிகளும் தீவிரம்காட்டி வருவதாக சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார். தேர்தல் காலம் என்பதால் நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகள் அள்ளிவீசப்படுவதாகவும் வடக்குக்- கிழக்கு இணைந்த தாயகம் தன்னாட்சி என்ற பேச்சுக்களை விட தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றக் கதிரைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மார்ச் 05 22:31

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக மேலதிக விசாரணை நடத்த எழுத்து மூல சமர்ப்பணம்

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் மன்னார் நகர நுழை வாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதோச விற்பனை நிலையக் கட்டடத்திற்கு அருகில் இருந்த போர்க்காலத்துக்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதை குழி தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை காணாமல ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஊடாகவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவாதிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 04 22:22

இன அழிப்பை முன்னிலைப்படுத்தி சுயாட்சி அதிகாரத்தை தமிழர்கள் பெற வேண்டும்- சட்டத்தரணி காண்டீபன்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபை தகவல்களைப் பெறுவதற்காக விசாரணைக் குழுவொன்றை அமைத்திருந்தது. அந்தக் குழு இலங்கைக்கு வரவேயில்லை. அந்த குழுவுக்கு முன்பாக எவரும் சாட்சியங்கள் கொடுக்கவும் இல்லை. ஆகவே தகவல் சேகரிப்பு மாத்திரமே நடந்துள்ளது. சத்தியக் கடதாசிகள். நவீன தொழில் நுட்ப முறைகளினூடாகப் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கைகளைக் காண்பித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் சர்வதேச விசாரணை நடந்ததாகக் கூறுகிறாரென சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான காண்டீபன் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
மார்ச் 03 22:47

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை விகாரைகளில் நடத்த முடியாது- மகிந்த தேசப்பிரிய

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரம் பௌத்த சமயத்துக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதால் தேர்தல் காலங்களில் பௌத்த குருமார் தமக்குச் சார்பான கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக விகாரை வளாகங்களுக்குள்ளும், மத வழிபாடுகளின்போதும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கடந்த தேர்தல் காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. அத்துடன் தேர்தலை கண்காணிக்க இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களும் முறையிட்டிருந்தனர். இதனடிப்படையில் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மகாநாயகத் தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
மார்ச் 03 13:36

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்துமாறு கோரி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம்) போர்க்குற்ற விசாரணை, தமிழ் இன அழிப்புத் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சுட்டிக்காட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையைக் கோரி வந்ததாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகள் இந்தக் கோரிக்கையை வற்புறுது்தி வந்தபோதும் அந்தக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு கால நீடிப்பு வழங்கப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.