செய்தி: நிரல்
மே 04 22:25

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தவிடம் அறிக்கை கையளிப்பு

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்ங்கை ஒற்றையாட்சி அரசின் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது. பிரதமரின் அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் கலந்துகொளளவில்லை. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டது.
மே 02 23:42

முல்லைத்தீவை அபாயகரமான பிரதேசமாக அறிவிக்கத் திட்டமா? சிவமோகன் கேள்வி

(முல்லைத்தீவு, ஈழம் ) தாயகப் பிரதேசமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தி;ல் கொரோனா தொற்றுளதெனச் சந்தேகிக்கப்படுவவோரைத் தனிமைப்படுத்துவதங்காக அபாயவலயமாக்கும் செயற்பாட்டில், இலங்கை அரசாங்கம் ஈடுபடுவதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பு நிர்வாகத்துக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனாலும் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக சிவமோகன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
மே 01 22:50

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் 11 ஆம் திகதி வரை முடக்கம் தொடரும்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது முடக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஏப். 27 20:43

இலங்கைப் படையினர் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது?

(வவுனியா, ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இலங்கைப் படையினர் மத்தியில் இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பாக கொழும்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. கொரோனா தொற்றியுள்ளது என்ற சந்தேகத்தில் உள்ளவர்களைத் தேடிச் சென்ற இடங்களில் இருந்தே படையினருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகின்றது. ஆனாலும் விடுமுறையில் சென்ற படையினருக்கு அதுவும் கடற்படையினருக்கு எவ்வாறு தொற்றியது என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கட்டுநாய்க்கா விமானப்படை முகாமில் உள்ள சிப்பாய் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
ஏப். 26 22:20

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை கொனேரா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகிறது

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில், வைரஸ் தொற்றுள்ளவர்கள் எனச் சந்தேககிக்கப்படுவோரைத் தனிமைப்படுத்தும் நிலையங்கள் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை இலங்கைச் சுகாதார அமைச்சினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. வடமாகாணத்துக்குரிய கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் நோக்கிலேயே பொறுப்பேற்றுள்ளதாகச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஆனால் கொழும்பில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகும் நோயளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காகவே பொறுப்பேற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏப். 24 23:58

நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி இராணுவத்தை நிறுத்த முயற்சி

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத்தின் முன்பாகவும் அதனைச் சுழவுள்ள காவல் அரன்களில் இருந்து பொலிஸாரை அகற்றிவிட்டு இராணுவத்தைக் காவல் கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலைக்கப்பட்ட நிலையில் புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்லும் நிலையில் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிட்டுத் தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த கோட்டாபய ராஜபக்ச முற்படுகிறார் என்று குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சிகள்,
ஏப். 23 23:35

இலங்கைக் கடற்படையினர் 30 பேருக்குக் கொரோனா வைரஸ்

(வவுனியா, ஈழம்) கொழும்பின் புநகர் பகுதியான வெலிசறையில் உள்ள இலங்கைக் கடற்படைத் தளத்தில் 30 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜாஎல சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்ட போதைப் பொருட்களுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் தொற்றியவர்களைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக கடமையில் ஈடபட்டிருந்தபோதே கடற்படையினருக்குத் தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளதென, தமிழினப் படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முகாமில் இருந்த அனைத்துக் கடற்படையினருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 30 கடற்படைச் சிப்பாய்களுக்கு வரைஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.
ஏப். 23 23:12

கொழும்பில் இத்தாலியைப் போன்றதொரு மரண அவலம் உருவாகலாம்- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) கொரேனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் ஏற்பட்ட பெரும் மரண அவலங்களைப் போன்றதொரு நிலமை இலங்கையின் தலைநகர் கொழும்பில் உருவாகக் கூடிய ஆபத்துள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது தேவையற்ற முறையில் வியாபரிகளுக்கு வழங்கிய சிறப்பு அனுமதி முறையினாலேயே கொரேனா வைரஸ் பரவியதாகவும் இது சமூகப் பரவலாக உருவாகக் கூடிய ஆபத்துள்ளதாகவும் மருத்துவர் சங்கம் கூறியுள்ளது. வெளிநாட்டில் இருந்த வந்த ஒருவர் பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்திருக்கிறார். அந்த மீன் வியாபாரிக்கும் அந்த வெளிநாட்டவருக்கும் தற்போது கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப். 22 23:33

கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிப்பு- பல கிராமங்கள் சுற்றிவளைப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கிமை 330 ஆக அதிகரித்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் லங்காபுர செயலாளர் பிரிவில் 12 கிராமங்களில் வாழும் சுமார் இருபதாயிரம்பேர் இன்று புதன்கிழமை இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 12 கிராமங்களில் இருந்தும் எவரும் வெளியே வர முடியாதென்றும் வெளியாட்கள் எவரும் உள்ளே செல்ல முடியாதென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் சென்ற வந்த 12 கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஏப். 21 16:26

மே மாதம் 2 ஆம் திகதி கூட்டம்- அதன் பின்னரே யூன் 20 இல் தேர்தல் நடத்துவது குறித்த தீர்மானம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் என அறிவிக்கப்பட்டாலும் மே மாதம் இரண்டாம் திகதி சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படுமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மே மாதம் இரண்டாம் திகதி வரை எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென்றும் அவர் கூறியுள்ளார். கட்சித் தலைவர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந.காண்டீபன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.