நிரல்
ஜூன் 23 22:07

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பணம் அச்சிட உத்திரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டா?

(வவுனியா, ஈழம்) இலங்கைக்குக் கிடைத்த நிதியுதவிகள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய பதில் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்றம் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கூட்டப்படாத நிலையில். கிடைத்த நிதியுதவிகளின் அளவுகளுக்கு ஏற்ப எவ்வாறு பணம் அச்சிடப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களான சுஜீவ சேனசிங்க, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜூன் 21 21:22

மாகாண சபைகளைக் கைவிட ராஜபக்ச அரசாங்கம் ஆலோசனை

(வவுனியா, ஈழம்) இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை இலங்கை அரசாங்கம் கைவிடக் கூடிய நிலை இருப்பதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக வடக்குக்- கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படவில்லை. இது சட்டச் சிக்கலை ஏற்படுத்துமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அது தொடர்பாகப் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் எதுவுமே கருத்தில் எடுக்கவிலலையெனக் கூறப்படுகின்றது.
ஜூன் 19 13:39

மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம்

(யாழ்ப்பாணம், ஈழம்) குறிப்பிட்ட நாடொன்றில் அமெரிக்கா தலையிட வேண்டுமெனக் கருதினால், அந்த நாட்டில் ஏதேனும் பிரச்சினையேற்படும்போது. அங்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா நுழைந்துவிடுமென நவோமி க்ளீன் என்ற கனேடிய எழுத்தாளர் எழுதிய த ஷொக் டொக்ரின் (The Shock Doctrine) என்ற நூலில் கூறுகிறார். அதாவது உதவி என்ற பெயரில் ஒரு நாட்டில் வாழும் இனங்களிடையே குழப்பங்கள், முரண்பாடுகள் உருவாக்கப்பட்டு அது ஆயுத மோதலாகக் கூட மாறிவிடலாம் என்பது ஒன்று, மற்றையது அந்த நாட்டில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் பிளவுபடுவது அல்லது புதிய கட்சிகள் உருவாகுவது போன்றவற்றைக் குறிக்ககுமென அர்த்தப்படுத்தலாம்.
ஜூன் 18 21:18

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், அரச ஊழியர்களுக்கு நிவாரணங்கள் இல்லை- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) கொரானா வைரஸ் தாக்கதிதினால் ஏற்பட்ட முடக்கநிலையினால் தொழில் நடவடிக்கைகளை இழந்து வருமானம் இன்றிச் சிரமமப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவியளிக்கவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. குடும்பம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டபோதும், அனைத்துக் குடும்பங்களுக்கும் அந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை ஐயாயிரம் ரூபா போதுமானதல்ல என்றும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஆகிய கட்சிள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஜூன் 16 23:49

ரணில் சஜித் மோதல்- கொழும்பு நீதிமன்ற அறிவிப்பும் வெளியாகவுள்ளது

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கிய சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்கவோடு கடுமையாக வாக்குவாதப்படுவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி அணியில் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடவிருந்த மங்கள சமரவீர உள்ளிட்ட சிலப் போட்டியில் இருந்து விலகிக் கொண்டமைக்கு ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 99 உறுப்பினர்களை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
ஜூன் 14 23:48

வவுனியாவில் வாள்வெட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயம்

(வவுனியா, ஈழம்) வுடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இளைஞர்களிடையே வன்முறைக் காலச்சாரத்தை இலங்கை இராணுவம் திட்டதிட்டுத் தூண்டிவிடுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில். தொடர்ச்சியாக அங்காங்கே வாள் வெட்டுகள். ஆடிதடி மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் வடமாகாணம் வவுனியா மகாறம்பைக்குளம் பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்துபேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அயலவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஜூன் 12 22:56

தேர்தல் பிரச்சாரத்தில் அரச வளங்கள் துஸ்பிரயோகம்- ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

(வவுனியா, ஈழம்) ஒற்றையாட்சி அரசின் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரச சொத்துக்களை பயன்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் அரசசார்பற்ற நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. அரச திணைக்களங்கள். அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமான வாகனங்கள், தளபாடங்கள், மண்டபங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்படுவதாகவும் தற்போது காபாந்து அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலர் இவ்வாறு அரச வளங்களைத் துஸ்பிரயோகம் செய்வதாகவும் தேசிய சமாதானப் பேரவை, மாற்றுக் கொள்கை மையம் ஆகிய நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஜூன் 11 15:12

பூகோள அரசியலுக்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்கவை அணைக்க முற்படும் ராஜபக்ச ஆட்சி

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றதும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரை நடத்திய ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனரெனத் தமிழர்கள் அங்கலாய்க்கின்றனர். முற்போக்கான சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்ற கவலையும், இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் தம்மை ஒரங்கட்ட முற்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டனர் என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருப்பெற்றதுவிட்டது எவ்வாறாயினும் தமிழ் முஸ்லிம் மக்களைவிட சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தனர் என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.
ஜூன் 09 21:10

முகமாலையில் போர்க்கால மனிதப் புதைகுழி- எலும்புக்கூடுகள் மீட்பு

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் முகமாலைப் பிரதேசத்தில் போர்க்கால மனித எலும்புக்கூடுகளென அடையாளம் காணப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள், மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டால் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கைப் பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இன்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது. இன்று புதிதாக மனித எச்சங்கள் அடையாளம் காணப்படாததை அடுத்து அகழ்வு பணிகள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜூன் 08 20:01

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் அரச அதிகாரிகள்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலில், அரச அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் பல முறைப்பாடுகள் பொது அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்கள்; பலருக்கும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் தற்போது கடமையில் உள்ள அரச அதிகாரிகள் பலர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியளிப்பதாகவும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய சமதானப் பேரவை, மாற்றுக்கொள்கை மையம் ஆகிய அரசார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு தமது முறைப்பாட்டை இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன் வைத்துள்ளன.